நான் தலைமறைவாக இல்லை; காவல்துறைக்கு ஏன் இவ்வளவு அவசரம்? - சீமான் பேட்டி
ஹோட்டலில் கொல்கத்தா பிரியாணியை பார்சல் செய்த இங்கிலாந்து மன்னர்... அரசக் குடும்பத்தினர் கூறுவதென்ன?
லண்டனின் கார்னபி தெருவில் இயங்கி வருகிறது டார்ஜிலிங் எக்ஸ்பிரஸ் ஹோட்டல். இந்தியாவின் பிரபலமான பாலிவுட் நடிகை அஸ்மா தான் இந்த ஹோட்டலின் உரிமையாளர்.
இவர் கொல்கத்தாவில் உள்ள லா மார்டினியர், லோரெட்டோ கல்லூரியில் படித்திருக்கிறார். தற்போது லண்டனில் உணவகத்தை நடத்தி வருகிறார். ஒவ்வொரு வருடமும் ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் நோன்பு வைப்பார்கள். இந்த ரமலான் மாதங்களில் மருத்துவமனை, ஆதரவற்றோர் வசிக்கும் பகுதிகளுக்கு உணவுகளை தயார்செய்து கொடுப்பது அஸ்மாவின் வழக்கம். இந்த ஆண்டுக்கான ரமலான் தயாரிப்புகள் செய்துக்கொண்டிருந்த அவரை பார்ப்பதற்கு, இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸும் அவரின் மனைவி ராணி கமிலாவும் சென்றிருக்கின்றனர்.
அப்போது அஸ்மாவிடம் நகைச்சுவையாக உரையாடியிருக்கிறார். உணவு தயாரிப்புக்குப் பிறகு பேரித்தம்பழங்களுடன் சில உணவுப் பொருள்களை பேக் செய்யவும் உதவியிருக்கிறார். இது தொடர்பான வீடியோவை தன் சமூகவலைதளப்பக்கத்தில் பகிர்ந்திருக்கும் அஸ்மா, ``இன்று எங்கள் உணவகத்துக்கு மன்னரும், அரசியும் வந்திருந்தார்கள். ரமலானுக்கு முந்தைய எங்கள் தயாரிப்புகளில் எங்களுடன் இணைந்தார்கள். பேரீச்சம்பழங்களையும் பிரியாணியையும் பேக் செய்தனர். அவர்களின் வீட்டுக்கும் கொல்கத்தா ஸ்பெஷல் பிரியாணியை எடுத்துச் சென்றார்கள். அவர் விரைவாக பேக் செய்வதையே பார்த்துக்கொண்டிருந்தோம்." என்றார்.
இது தொடர்பாக அரசக் குடும்பத்தினரின் வலைதளப்பக்கத்தில், ``பாரம்பரியமாக, ரமலான் மாதத்தில் சூரியன் மறையும்போது நோன்பை திறக்கும் முதல் உணவாக பேரீச்சம்பழம் சாப்பிடப்படுகிறது. புனித மாதத்தில் இப்தாருக்கு உள்ளூர் மருத்துவமனைகளுக்கு அனுப்பப்படும் பேரீச்சம்பழங்களை பேக் செய்ய நம் அரசர் உதவினார்" எனக் குறிப்பிடப்பட்டு வீடியோ பகிரப்பட்டிருந்தது.
A jovial King and Queen made a visit to Darjeeling Express in Soho, where they helped spoon in biryani rice in boxes ahead of Ramadan.
— The Royal Family Channel (@RoyalFamilyITNP) February 26, 2025
Charles and Camilla met a group of Muslim women at the central London restaurant along with artists and businesswomen. Later the couple packed… pic.twitter.com/54G9B04jlo
இங்கிலாந்து மன்னர் கல்கத்தா பிரியாணியை எடுத்துச் சென்றிருக்கிறார். அந்த பிரியாணி அவத் நாட்டின் கடைசி நவாப் வாஜித் அலி ஷா, ஆங்கிலேயர்களிடமிருந்து கல்கத்தாவிற்கு தப்பிச் சென்றதற்குப் பிறகு, அவரால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு உணவு என்பது குறிப்பிடத்தக்கது.