செய்திகள் :

ஹோட்டல் வருவாய் ரூ.50; ஆனால், ஊழியர்களுக்கு சம்பளம் ரூ.15 லட்சம்! கங்கனா ஆதங்கம்!

post image

ஹிமாசலில் பெய்த கனமழையால் தானும் பாதிக்கப்பட்டதாக எம்.பி. கங்கனா ரணாவத் வருத்தம் தெரிவித்துள்ளார்.

ஹிமாசல பிரதேசத்தில் கடந்த மாதம் பெய்த கனமழையால், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் நிலச்சரிவு மற்றும் வெள்ளம் ஏற்பட்டது.

இந்த நிலையில், மாநிலத்தில் பாதிப்பு ஏற்பட்டு சுமார் 20 நாள்களுக்கு பின்னர், மண்டி தொகுதியில் பாதிக்கப்பட்ட இடங்களை எம்.பி.யும் நடிகையுமான கங்கனா ரணாவத் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது அவர் பேசுகையில்,

``நான் எந்த நிலைமையில் இருக்கிறேன் என்று நினைத்துப் பாருங்கள். நானும் இங்கே ஒரு உணவகம் நடத்தி வருகிறேன். அங்கே, நேற்று வெறும் ரூ.50-க்கு மட்டுமே வியாபாரம் ஆனது. ஆனால், நான் ரூ.15 லட்சத்துக்கு சம்பளம் கொடுக்க வேண்டியுள்ளது. தயவுசெய்து என் வலியையும் புரிந்துகொள்ளுங்கள். நானும் ஒரு மனிதர்தான்’’ என்று ஆதங்கத்துடன் தெரிவித்தார்.

முன்னதாக, அவர் தொகுதியை ஆய்வு செய்ய முற்பட்டபோது, ``திரும்பிச் சென்று விடுங்கள், நீங்கள் தாமதமாக வருகிறீர்கள்’’ என்று கறுப்புக் கொடியுடன் அப்பகுதி மக்கள் கோஷமிட்டனர்.

இதையும் படிக்க:நீ உச்சத்திலேயே இரு! விஜய் மீது சீமான் காட்டம்?

Kangana Ranaut's ordeal to Mandi flood victims

மழை பாதித்த இடங்களில் ஆய்வுகள் தாமதம்! எம்.பி. கங்கனாவுக்கு வலுக்கும் தொகுதி எதிர்ப்பு!

மண்டி தொகுதியில் மழை பாதித்த இடங்களை ஆய்வு செய்த எம்.பி. கங்கனா ரணாவத்துக்கு தொகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.ஹிமாசல பிரதேசம் மாநிலத்தின் கடந்த மாதம் 25, 26 ஆகிய தேதிகளில் பெய்த கனமழையால் பல்வேறு ... மேலும் பார்க்க

அருந்ததி ராயின் புத்தக அட்டைப் படத்துக்கு எதிரான வழக்கு! மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு!

பிரபல எழுத்தாளர் அருந்ததி ராயின் “மதர் மேரி கம்ஸ் டு மீ” எனும் புத்தகத்தின் அட்டைப் படத்தை எதிர்த்த பொது நல வழக்கு குறித்து பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு, கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.எழுத்த... மேலும் பார்க்க

அமெரிக்காவில் போதைப்பொருள் விவகாரம்! தொடர்புடைய இந்தியர்கள் விசாவுக்கு தடை!

அமெரிக்காவில் சட்டவிரோதமாக போதைப்பொருள் கடத்தலில் தொடர்புடைய இந்திய தொழிலதிபர்களின் விசா தடை செய்யப்படும் என்று அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.நாட்டுக்குள் சட்டவிரோதமாக போதைப்பொருளை கடத்தும... மேலும் பார்க்க

பறவை மோதல்? ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் அவசர தரையிறக்கம்!

விசாகப்பட்டினத்தில் இருந்து ஹைதராபாத் புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், என்ஜின் கோளாரால் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், விசாகப்பட்டினத்தில் இருந்து 103 பயணிகளுட... மேலும் பார்க்க

பிரதமர் மோடியுடன் நேபாள இடைக்கால பிரதமர் உரையாடல்!

பிரதமர் நரேந்திர மோடியுடன், நேபாளத்தின் இடைக்கால பிரதமராகப் பதவியேற்றுள்ள சுசீலா கார்கி தொலைபேசி வாயிலாக உரையாடியுள்ளார். நேபாளத்தில், சமூக வலைதளங்கள் தடை மற்றும் ஆட்சியாளர்களின் ஊழல் ஆகியவற்றை எதிர்த... மேலும் பார்க்க

தேர்தல் ஆணையம் குற்றச்சாட்டுகளை நிராகரிக்கிறது; ஆனால், பதில் எங்கே? - காங்கிரஸ் கேள்வி

ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகளை தேர்தல் ஆணையம் நிராகரிக்கிறதே தவிர பதில் எதுவும் இல்லை என்று காங்கிரஸ் கூறியுள்ளது. காங்கிரஸ் எம்.பி.யும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி இன்றைய செய்த... மேலும் பார்க்க