செய்திகள் :

இந்த 7 கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள்": பா.ஜ.,விடம் கேட்கிறார் கார்கே

post image

புதுடில்லி: எங்களிடம் 7 கேள்விகள் உள்ளன. இதற்கு பா.ஜ., அரசு பதில் சொல்ல வேண்டும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.

இது குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில் கார்கே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ரயில் விபத்து ஏற்படும் போதெல்லாம், தற்போதைய ரயில்வே அமைச்சர் கேமராக்களுடன் சம்பவ இடத்திற்கு வந்து எல்லாம் சரியாகிவிட்டது என சமாளித்து விடுகிறார். எங்களிடம் 7 கேள்விகள் உள்ளன. இதற்கு பா.ஜ., அரசு பதில் சொல்ல வேண்டும். ஒடிசா மாநிலம் பாலாசோரில் நடந்த விபத்துகளுக்குப் பிறகு, அதிக விளம்பரப்படுத்தப்பட்ட “கவச்” பாதுகாப்பு கருவியை ஏன் ஒரு கிலோமீட்டர் கூட பொறுத்த நடவடிக்கை எடுக்கவில்லை..

* ரயில்வே துறையில் சுமார் 3 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் ஏன் நிரப்பப்படவில்லை?.

* 2017ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை மட்டும் 1,00,000 பேர் ரயில் விபத்துகளில் இறந்துள்ளனர். இதற்கு யார் பொறுப்பேற்பார்கள்?

* ஆள் பற்றாக்குறையால் லோகோ பைலட்டுகள் நீண்ட நேரம் வேலை செய்வதே விபத்துகள் அதிகரித்து வருவதற்கு முக்கியக் காரணம் என ரயில்வே வாரியமே சமீபத்தில் ஒப்புக்கொண்டுள்ளது. பிறகு ஏன் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை?.
* பொதுவான ஸ்லீப்பர் வகுப்பில் ரயிலில் பயணம் செய்வது ஏன் மிகவும் விலை உயர்ந்தது?


* ஸ்லீப்பர் கோச்சுகளின் எண்ணிக்கை ஏன் குறைக்கப்பட்டது?

*கடந்த ஆண்டு 2.70 கோடி பேர் சீட் பற்றாக்குறையால் டிக்கெட்டை ரத்து செய்யதுள்ளனர். இதற்கு ரயில் பெட்டிகளின் எண்ணிக்கையை குறைத்தது தான் காரணம்.
* பா.ஜ., அரசு 2017-18 ஆம் ஆண்டு பொது பட்ஜெட்டுடன் ரயில்வே பட்ஜெட்டை இணைத்ததா?.


ரயில்வே துறையில் பா.ஜ., அரசு செய்துள்ள குற்றங்களை, தன்னை புகழ்ந்து கொள்வதன் மூலம் மாற்ற முடியாது. இவ்வாறு கார்கே கூறியுள்ளார்.