செய்திகள் :

ஆந்திராவுக்கு குடிபெயர்வோம்: பரந்தூர் போராட்ட குழு எச்சரிக்கை

post image

காஞ்சிபுரம்: பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சுமார் 2 ஆண்டுகளாக போராடி வரும் ஏகனாபுரம் கிராம மக்கள் தங்களுக்கான வாழ்விடம் கேட்டு ஆந்திர மாநிலத்தை அணுக முடிவு செய்துள்ளனர். இதற்காக சித்தூர் மாவட்ட ஆட்சியரை ஜூன் 24-ம் தேதி சந்திக்க நேரம் கேட்டுள்ளனர்.

சென்னையின் 2-வது பசுமை விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைகிறது. இதற்காக பரந்தூரைச் சுற்றியுள்ள 13 கிராமங்களில் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்துக்காக ஏகனாபுரம் என்ற கிராமத்தில் உள்ள குடியிருப்புகள், நிலங்கள் மொத்தமாக கையகப்படுத்தப்பட உள்ளன. இதனால் இந்தத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த கிராம மக்கள் கடந்த 2 ஆண்டுகளாக போராடி வருகின்றனர். இவர்களது போராட்டம் ஜூன் 24-ம் தேதி 700-வது நாளை எட்டுகிறது. அதுவரை தீர்வு கிடைக்காவிட்டால் வாழ்வதற்கு தஞ்சம் கேட்டு ஆந்திர மாநிலத்தை அணுக போராட்டக் குழுவினர் முடிவு செய்துள்ளனர். இதற்காக சித்தூர் மாவட்ட ஆட்சியரை சந்திக்கவும் நேரம் கேட்டுள்ளனர். ஆந்திர அரசிடம் தஞ்சம் கேட்டு ஒரு குழுவினர் சித்தூர் மாவட்ட ஆட்சியரை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


இவர்களை வழி அனுப்பி வைக்க 13 கிராம மக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவினர் ஜூன் 24-ம் தேதி ஏகனாபுரம் அம்பேத்கர் சிலையில் இருந்து புறப்படுகின்றனர். இவர்களை வழி அனுப்பி வைக்க பொதுமக்கள் அனைவரும் அந்த இடத்தில் வந்து கூடுமாறு பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டக் குழுவின் தலைவர் ப.ரவிச்சந்திரன், ஜி.சுப்பிரமணியன் ஆகியோர் அழைப்பு விடுத்துள்ளனர்.இதுகுறித்து போராட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஆர்.எல்.இளங்கோவிடம் கேட்டபோது, “வேறு வழியே இல்லாமல்தான் வாழ்வதற்கு தஞ்சம் கேட்டு ஆந்திர மாநில அரசை அணுக உள்ளோம். அதன் முதல்கட்டமாக ஜூன் 24-ம் தேதி சித்தூர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க உள்ளோம். அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி எங்கள் பிரச்சினையை தீர்ப்பார்கள் என்று நம்புகிறோம். இல்லையெனில் கண்ணீருடன் வெளியேறுவதை தவிர எங்களுக்கு வேறுவழியில்லை” என்றார்.இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன், நீதிபதி முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் நிறுவனம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஓம் பிரகாஷ், “கூடுதலாக ஊட்டச்சத்துக்கள் நிறைந்த மசூர் பருப்பை கொள்முதல் செய்ய தமிழக அரசு மறுத்துள்ளது. அதற்கான காரணத்தை தமிழக அரசு வெளிப்படையாக தெரிவிக்கவில்லை. இந்தியாவில் ராஜஸ்தான், உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், மேற்கு வங்காளம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் மசூர் பருப்பு ஆண்டுக்கு 10 லட்சம் டன் விளைகிறது. விலை குறைந்த இந்த பருப்பை கொள்முதல் செய்தால் தமிழக அரசுக்கு ஆண்டுக்கு ரூ. 150 கோடி மிச்சமாகும்” என வாதிட்டார்.தமிழக அரசின் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், “மசூர் பருப்பை விட துவரம் பருப்பையே பொதுமக்கள் அதிகமாக விரும்புகின்றனர். அதனால்தான் பொது விநியோக திட்டத்துக்காக விவசாயிகளிடமிருந்து துவரம் பருப்பு கொள்முதல் செய்யப்படுகிறது. எனவே மசூர் பருப்பை டெண்டரில் சேர்க்கவில்லை.அதேசமயம் மசூர் பருப்புக்கு எந்தத் தடையும் விதிக்கப்படவில்லை. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகமும் மசூர் பருப்பு கொள்முதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. எதிர்காலத்தில் தேவைப்பட்டால் மசூர் பருப்பும் கொள்முதல் செய்யப்படும்” என்றார்.

இதையடுத்து நீதிபதிகள், “பொது விநியோகத் திட்டத்தின் கீழ் குறைந்த விலை கொண்ட மசூர் பருப்பை வழங்காமல், அதிக விலை கொண்ட கனடியன் மஞ்சள் நிற பருப்பு எந்த அடிப்படையில் கொள்முதல் செய்யப்படுகிறது என்பது குறித்து தமிழக அரசு இரு வாரங்களில் பதிலளிக்க வேண்டும்” என உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்துள்ளனர்.