செய்திகள் :

தனது ஒட்டுமொத்த கல்வி செலவைவிட மகன் படிக்கும் மழலையர் பள்ளியின் ஓராண்டு கல்வி கட்டணம் அதிகம்: தந்தையின் பதிவு

post image

புதுடெல்லி: ‘‘தனது ஒட்டுமொத்த கல்வி செலவைவிட, தனது மகன் படிக்கும் மழலையர் பள்ளியின் ஓராண்டுகல்வி கட்டணம் அதிகம்’’ என்ற தலைப்பில் ஒருவர் பகிர்ந்துள்ள தகவல் எக்ஸ் தளத்தில் வைரலாக பரவி வருகிறது. இதற்கு பலர் தங்கள் வேதனை கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

ஒரு காலத்தில் சேவையாக அளிக்கப்பட்டு வந்த கல்வி, தற்போது வியாபாரம் ஆகிவிட்டது. தனியார் கல்வி நிறுவனங்களில் வசூலிக்கப்படும் கட்டணங்களை மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்வதில்லை. தங்கள் பிள்ளைகளை நல்ல நிலைக்கு கொண்டுவர வேண்டும் என்பதற்காக, பெற்றோர் தங்கள் வசதிகளை குறைத்து, குழந்தைகளை வசதியான தனியார் கல்வி நிறுவனங்களில் சேர்க்கின்றனர்.தனது ஒட்டுமொத்த கல்வி செல்வை விட, தனது மகன் படிக்கும் மழலையர் பள்ளியின் ஒராண்டுகல்வி கட்டணம் அதிகம்’’ என்ற தலைப்பில் எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட தகவல் வைரலாக பரவி வருகிறது. அதில் பதிவு கட்டணம் ரூ.10,000. ஆண்டுகட்டணம் ரூ.25,000. 4 காலாண்டுக்கு தலா ரூ.98,750 என ஓராண்டில் மொத்தம் ரூ.4,30,000 செலுத்த வேண்டியுள்ளது’’ என தெரிவித்துள்ளார்.இத்தகவலை எக்ஸ் தளத்தில் இதுவரை 10 லட்சம் பேர் பார்த்துள்ளனர். இதில் பலர் தங்கள் வேதனைகளை பகிர்ந்துள்ளனர்.

‘‘தற்போது கல்வி மாறிவிட்டது, கட்டும் பணத்துக்கு தரமான கல்வி உத்தரவாதமா? குழந்தைகளின் கல்விக்கு நவீன கட்டிடங்கள் மற்றும் வசதிகள் அவசியமா? தரமான கல்விக்கு சிறந்த ஆசிரியர்கள் தான் முக்கியம். வசதிகள் அல்ல. பல பன்னாட்டு நிறுவனங்கள் புதிதாக சேரும் ஊழியருக்கு இந்த கட்டணத்தை விட குறைவாகத்தான் சம்பளம் வழங்குகின்றன’’ என்று இணையவாசிகள் ஏராளமானோர் தங்கள் மன வேதனையை கொட்டித் தீர்த்துள்ளனர்.