செய்திகள் :

தமிழகம் முழுவதும் காவல் துறையினர் விரைவில் பணியிட மாற்றம்: பட்டியல் தயாரிக்கும் பணி தீவிரம்

post image

சென்னை: தமிழகம் முழுவதும் காவல்துறையினர் விரைவில் பணியிட மாற்றம் செய்யப்பட உள்ளனர். இதற்கான பட்டியலை தயாரிக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

மக்களவை தேர்தல் வாக்குப் பதிவு கடந்த ஏப்ரல் 19-ம் தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாக நடைபெற்றது. முன்னதாக தேர்தல் நடைமுறைகள் அமலுக்கு வந்தது. இதையடுத்து தமிழகம் முழுவதும் பல்வேறு போலீஸ் அதிகாரிகள் இடம் மாற்றம் செய்யப்பட்டனர். குறிப்பாக ஐ.ஜி முதல் காவலர்கள் வரை பணியிட மாற்றம் செய்யப்பட்டிருந்தனர். சென்னை ஆவடி, தாம்பரம் காவல் ஆணையரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் பணி செய்து வந்த போலீசாரும் பணியிட மாற்றத்திற்கு ஆளாகினர்.மேலும் காவல் துறையை சேர்ந்தவர்களும் தங்களது குடும்பத்தை ஒரு இடத்தில் விட்டுவிட்டு வேறு இடங்களில் பணியமர்த்தப்படுவதால் அவர்களும் மன உளைச்சலுக்கு ஆளாகினர் இதை அடுத்து சட்டம் ஒழுங்கை சிறப்பாக கையாளவும் காவலர்களின் நலன்களை காக்கும் வகையில் தற்போது காவல்துறையினரை பணியிட மாற்றம் செய்யும் பணி தொடங்கியுள்ளது/

தேர்தல் நடத்தி விதிகளும் முடிவுக்கு வந்த காரணத்தினால் டிஜிபி மற்றும் அனைத்து மாநகர காவல் ஆணையர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் பணியிடம் மாற்றம் செய்ய வேண்டிய போலீஸாரின் பட்டியலை சேகரித்து வருகின்றனர்.இதற்காக போலீசாரின் விருப்பங்களும் மனுக்களாக கேட்டு பெறப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக சென்னையில் கடந்த மூன்று நாட்களாக காவலர் குறை தீர்ப்பு முகாம் நடத்தப்பட்டது இதில் சென்னை தாம்பரம் ஆவடி காவல் எல்லைக்கு உட்பட்ட 1,016 போலீசார் தங்களது விருப்பங்களை தெரிவித்துள்ளனர். மேலும் காவலர் நலன் சார்ந்த திட்டங்கள் தொடர்பாகவும் மக்கள் பெறப்பட்டுள்ளது இதை அடுத்து விரைவில் தமிழகம் முழுவதும் போலீஸாருக்கான பணியிட மாற்ற பட்டியலை டிஜிபி வெளியிட உள்ளார்.குறிப்பாக இன்ஸ்பெக்டர்கள் முதல் டிஜிபிகள் வரையிலான பணியிட மாற்றத்திற்கான உத்தரவை டிஜிபி பிறப்பிப்பார் காவலர்கள் முதல் உதவி ஆணையர்கள் வரையிலான பணியிட மாற்றத்தை மாநகர காவல் ஆணையர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட காவல் கண்காணிப்பாளர்கள் உத்தரவுகளை பிறப்பிப்பார்கள் இதற்கான பட்டியல் தயாரிக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.