செய்திகள் :

இந்த வீட்டில் காஸ்ட்லியான விஷயம் எது தெரியுமா? `ஒளிதான்' - ஒளி ஓவியமான கோவை வீடு!

post image

கோவை நவ இந்தியாவில் 30 சென்ட் நிலத்தில், ஆர்க்கிடெக்ட் அருண் பிரசாத் வடிவமைத்துள்ள வடக்குப் பார்த்த வீடு, வெளிச்சத்தைக் கொண்டாடும் அமைப்பால் தனித்து நிற்கிறது. வீட்டின் உரிமையாளர் கொடுத்த முழுச் சுதந்திரத்தால் எந்தத் தடையுமின்றி இதை வடிவமைத்ததாக அருண் கூறுகிறார்.

இந்த வீட்டில், வலதுபுறம் படுக்கை அறைகளும் இடதுபுறம் பொழுதுபோக்குப் பகுதிகளும், நடுவில் லிவிங் ஏரியாவும் அமைந்துள்ளன. இரண்டுக்கும் நடுவே முகப்பில் உள்ள Pergola-வின் வழியாக ஊடுருவும் வெளிச்சம் ஒளி ஓவியமாக மாறுகிறது. மாலை நேரத்தில் அந்த இடம் ஏகாந்தமாகத் திகழ்கிறது.

நிலம் முழுவதையும் கட்டடமாக்காமல், சுற்றிலும் விசாலமான இடம் விடப்பட்டுள்ளது. வீட்டுக்குள் நுழைந்ததும் வலதுபுறம் வரவேற்பறை; அதன் பெரிய கண்ணாடிச் சுவர், புல்வெளிக்கு அருகில் அமர்ந்திருக்கும் உணர்வைத் தருகிறது. இடதுபுறம் உள்ள ஸ்லைடிங் கண்ணாடிக் கதவுகள் வரவேற்பறையையும் லிவிங் ஏரியாவையும் இணைக்கின்றன.

லிவிங் ஏரியாவை ஒட்டி மழைநீர் உள்ளே வராதவாறு கண்ணாடியால் மூடப்பட்ட முற்றம் உள்ளது. அதைத் தொடர்ந்து அமைந்துள்ள பூஜையறைக்குள் நுழைந்தால் கோயிலுக்குள் செல்லும் உணர்வு ஏற்படுகிறது. ஓப்பன் பார்ட்டி ஏரியாவின் நடுவே மேற்கூரையில்லாத Transition Space உள்ளது; அங்குள்ள கம்பிகளுக்கு இடையே ஊடுருவும் சூரிய ஒளி தரையில் ஓவியம்போல விழுந்து, பூஜை அறை வரை படர்கிறது. வீட்டின் ஒவ்வொரு பகுதியிலும் வெளிச்சத்தைக் கொண்டாடும் வகையில் பார்த்துப் பார்த்து வடிவமைத்திருக்கிறார் அருண்.

30 ஆண்டுகளாகக் கட்டட வடிவமைப்புத் துறையில் இயங்கிவரும் அருண் பிரசாத்தின் பயணம், ஓவியத்தின் மீதான ஆர்வத்திலிருந்து தொடங்கியது. கோவையைச் சேர்ந்த இவர், பள்ளிக்காலம் முதலே ஓவியப் போட்டிகளில் பங்கேற்று பரிசுகளைக் குவித்தவர். ஆர்க்கிடெக்ட்டான நண்பனின் தந்தை வரைபடங்கள் வரைவதைப் பார்த்துத்தான் இவரின் கவனம் கட்டடக் கலையின் பக்கம் திரும்பியிருக்கிறது.

இந்த வீட்டில் எது காஸ்ட்லியான விஷயம் என்று கேட்டால், "ஒளிதான்" என்று புன்னகைக்கிறார் அவர்.

மேலும் இந்த வீட்டில் டெக்னாலஜிக்குப் பஞ்சமே இல்லை. லைட்டிங், கர்ட்டைன்ஸ், ஏ.சி எனப் பலவற்றையும் மொபைல் போனிலிருந்தே ஆபரேட் செய்ய முடியும் என்கிறார். இந்த வீடு குறித்த முழுமையான கட்டுரையை படிக்க...

வீடு ஒரு கனவு: 1 - ஒளியால் மிளிரும் வீடு

இரட்டைச் சுமையிலிருந்து எப்போது விடுதலை பெண்களுக்கு..?

``காலையில் குளித்து, சமைத்து, பாத்திரங்களைக் கழுவி, பொது வெளியில் தோன்றுவதற்கு மேக்கப் போட்டுக்கொள்ள எனக்கு 3 - 4 மணி நேரம் ஆகிறது. இதற்கு முன் இருந்த ஆண் பிரதமர்களுக்கு இந்த நேர விரயம் இல்லை...''- இவ... மேலும் பார்க்க

ஓவியப் பயிற்சி முதல் பேச்சுத்துணை வரை முதியோருக்கு மரியாதை... முன்னெடுக்கும் காவ்யா!

தொழில்நுட்பமும் நகரமயமாக்கலும் அதிவேகமாக வளர்ந்து வரும் இன்றைய சூழலில், மனிதர்களை அச்சுறுத்தும் அமைதியான நோயாக உருவெடுத்துள்ளது தனிமை. உலகளவில் தனிமையால் அதிகம் பாதிக்கப் பட்டவர்கள் வாழும் நாடுகளின் ப... மேலும் பார்க்க

"Reels பாக்காமல் புத்தகம் படிக்கின்றனர்”- பார்வையாளர்கள் அறையில் நூலகம்; தஞ்சாவூர் ஆட்சியர் அசத்தல்!

செல்போனின் ஆதிக்கத்தால் புத்தகம் வாசிப்பது வெகுவாகக் குறைந்து விட்டது. புத்தகம் படித்தால் நல்ல சிந்தனைகள் விரிவடையும், பொது அறிவு வளரும், பயனுள்ள பல நல்ல விஷயங்களை அறிந்து கொள்ளலாம். நம்முடைய ஒவ்வொருவ... மேலும் பார்க்க

அவள் கனவு!

வானத்தை முட்டும் விமானத்தில் ஒருமுறையாவது பறக்க வேண்டும்... வீடு தாண்டி விரும்பிய இடத்தைப் பார்க்க வேண்டும்...பிடித்தவரின் கையைப் பற்றி `உங்களால்தான் என் வாழ்க்கையே மாறியது' என்று சொல்ல வேண்டும்... ஐம... மேலும் பார்க்க