செய்திகள் :

'எம்.எல்.ஏக்களிடம் ராஜினாமா கடிதம் வாங்கினாரா முதல்வர் விஜய்?' - உண்மை என்ன?

post image

தவெக எம்.எல்.ஏக்களை முதல்வர் விஜய் நேற்று தனியார் விடுதியில் சந்தித்து ஆலோசனை நடத்தியிருந்தார். இந்நிலையில், எம்.எல்.ஏக்கள் அத்தனை பேரிடமும் விஜய் ராஜினாமா கடிதத்தை வாங்கி வைத்து கண்டித்து அனுப்பியதாக ஒரு தகவல் வெளியானது.

CM Vijay
CM Vijay

சமூகவலைதளங்களிலும் இந்த விஷயம் பரப்பப்பட்டு வருகிறது. உண்மையிலேயே விஜய் ராஜினாமா கடிதம் எழுதி வாங்கினாரா? என்னதான் நடந்தது?

இதுதொடர்பாக முதல்வருக்கு நெருக்கமான சீனியர்கள் சிலரிடம் பேசினோம், 'முதல்வர், ஆதவ், ஆனந்த் ஆகியோர் சில எம்.எல்.ஏக்களை கண்டித்து எச்சரிக்கை விடுத்தது உண்மைதான். ஆனால், வெளியில் பேசப்படுவதைப் போல எந்த எம்.எல்.ஏவிடமும் ராஜினாமா கடிதமெல்லாம் வாங்கி வைக்கவில்லை. அப்படி வாங்கி வைப்பதில் எந்த லாஜிக்குமே இல்லை.

CM Vijay
CM Vijay

ஒரு எம்.எல்.ஏ ராஜினாமா செய்ய வேண்டுமெனில் அவரே கைப்பட எழுதிய கடிதத்தை சுயநினைவுடன்தான் ராஜினாமா செய்கிறேன் எனக் கூறி சபாநாயகரிடம் நேரில் கொடுக்க வேண்டும். சமீபத்தில் இசக்கி சுப்பையா ராஜினாமா செய்த போது டைப் செய்யப்பட்ட லெட்டரை கொண்டு வந்தார். உடனே சபாநாயகர் அவரது அறையிலேயே இசக்கி சுப்பையாவை உட்கார வைத்து கைப்பட ராஜினாமா கடிதம் எழுதி வாங்கிவிட்டுதான் அனுப்பினார்.

அப்படியிருக்க இப்போதே எம்.எல் ஏக்களை கூட்டி ராஜினாமா கடிதம் வாங்கிவிட்டார்கள் எனக் கூறுவது அபத்தமான செய்தி. நேற்று நடந்த சந்திப்பில் முதல்வர் எம்.எல்.ஏக்களுக்கு சில அறிவுரைகளை வழங்கினார். எம்.எல்.ஏக்கள் சொன்ன குறைகளை அவரது டைரியிலேயே குறித்து வைத்துக் கொண்டு, 'எல்லாவற்றையும் நான் பார்த்துக் கொள்கிறேன்' என நம்பிக்கை வார்த்தை கூறியே அனுப்பினார். சில எம்.எல்.ஏக்களை கண்டித்து எச்சரித்தார். அவர்களிடமும் ராஜினாமா கடிதமெல்லாம் வாங்கவில்லை' என்றனர்.

'MLA மீது நடவடிக்கை எடுத்திருக்கனும், ஆனா தீபாவளிப் பரிசு கொடுத்து.!'-விஜய்யை விமர்சித்த ஸ்டாலின்

முதல்வர் விஜய் தலைமையில் தவெக எம்.எல்.ஏக்கள் கூட்டம் ஈ.சி.ஆரில் தனியார் ரெசார்ட்டில் நேற்று (நவ.11) நடைபெற்றது. இந்நிலையில் தவெக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தை விமர்சித்து திமுக தலைவர் மு. க ஸ்டாலின் தனது எ... மேலும் பார்க்க

உ.பி தேர்தல்: எதிர்க்கட்சிகளுக்குள் வெடிக்கும் அதிகாரப் போட்டி - பாஜகவுக்கு சாதகமா? விரிவான அலசல்

2027-ம் ஆண்டு நடைபெறவுள்ள உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, அம்மாநில அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் வகையில் எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்குள் புதிய பிளவுகளும், போட்டி அணிகளும் உ... மேலும் பார்க்க

அமெரிக்காவில் ட்ரம்ப் பின்னடைவு: இந்த நேரத்தை பயன்படுத்தும் ஈரான்? போரில் ஈரான் நிலைப்பாடு என்ன?

நவம்பர் 3-ம் தேதிக்குப் பின், ஈரான் மீது தீவிரத் தாக்குதல் என்று அறிவித்திருந்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். அவர் அந்தத் தேதியைக் குறித்ததற்குக் காரணமே, அமெரிக்காவில் நவம்பர் 3-ம் தேதி நடந்த இடைக்கால த... மேலும் பார்க்க

அன்று அனுதாபம், இன்று ஆடம்பரம் - கார் பயணத்தால் விமர்சனத்துக்குள்ளான தவெக MLA தென்றல் குமார்

வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கே.வி.குப்பம் தொகுதி த.வெ.க எம்.எல்.ஏ தென்றல் குமார் வேட்டி, சட்டை சகிதம் காலில் செருப்புக்கூட அணியாமல் அனுதாப தோற்றத்தில் அரசுப் பேருந்தில் வலம் வந்துகொண்டிருந்தார். பதவிய... மேலும் பார்க்க

"ரூ.7 கோடி கொடுக்க வேண்டும்" - அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு பிஷ்னோய் கேங்க் பணம் கேட்டு கொலை மிரட்டலா?

டெல்லி மற்றும் பஞ்சாப்பில் மிரட்டி பணம் பறித்தல், கொள்ளை, கொலை முயற்சியில் ஈடுபட்டு வரும் லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டத்தினர் சமீப காலமாக பாலிவுட் பிரபலங்களுக்குக் கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர். அவர்கள... மேலும் பார்க்க

தவெக 6 மாத ஆட்சி: ``ஓர் அரசின் பயணத்தைத் தெரிந்துகொள்ள 6 மாதங்கள் போதும்"- திமுக எம்பி கான்ஸ்டன்டைன்

தவெக அரசின் இந்த 6 மாதகால ஆட்சி எப்படி இருந்தது என்பது குறித்து தமிழ்நாட்டின் பிரதான கட்சிப் பிரதிநிதிகளிடம் பேசினோம். அந்த வகையில் முதல் பகுதியில் நாராயணன் திருப்பதியிடமும், அடுத்து அதிமுக-வின் முன்... மேலும் பார்க்க