செய்திகள் :

"எழுந்திரிங்க வீட்டுக்குப் போலாம்..!"- விபத்தில் இறந்த கணவர்; உடலுடன் மனைவி நடத்திய பாசப் போராட்டம்!

post image

திருவாரூர், வடம்போக்கி பகுதியைச் சேர்ந்தவர் சங்கர்ராமன் (73) இவரது மனைவி ஜெயா (65). இவர்களுக்கு கவிதா என்ற மகள் உள்ளார். சங்கர்ராமன், திருவாரூர் தெட்சிணாமூர்த்தி மடத்தில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், தியாகராஜர் கோயில் மேற்கு கோபுர வாசல் பகுதியில், சங்கர்ராமன் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக வந்த திருவாரூர் நகராட்சியின் கழிவுநீர் அகற்றும் வாகனம், சைக்கிள் மீது மோதியது.

விபத்தில் உயிரிழந்த கணவர்

இதில் சங்கர்ராமன் தூக்கி வீசப்பட்டதில் கீழே விழுந்து பலியானார். இந்நிலையில் சங்கர்ராமன் விபத்தில் சிக்கிய தகவல் அவரது மனைவி ஜெயாவுக்கு சொல்லப்பட, விபத்து நடந்த இடத்துக்கு பதறியடித்து ஓடி வந்துள்ளார். இதையடுத்து சாலையில் கிடந்த கணவரைப் பார்த்துக் கதறினார். கணவர் இறந்துவிட்டார் என்பதை அவர் மனம் ஏற்கவில்லை. சங்கர்ராமன் முகத்தில் மொய்த்த ஈக்களை தனது சேலையால் விரட்டினார்.

அத்துடன், ``ஏங்க எழுந்திரிங்க... நாம வீட்டுக்குப் போயிடலாம், உங்களுக்கு ஒண்ணும் இல்ல, எழுந்திரிங்க" என்று தொடர்ந்து, கணவரை எழுப்பிக் கொண்டே இருந்தார். கால்களைப் பிடித்து தேய்த்துச் சூடேற்றினார். எப்படியாவது கணவர் மீண்டும் எழுந்து விட மாட்டாரா என்ற பரிதவிப்புடன் அவரது உடலுடன் போராடினார்.

திருவாரூர் கணவன் விபத்து

அரைமணி நேரத்துக்கும் மேலாக, கணவரை உயிருடன் மீட்டு விடலாம் என்ற நம்பிக்கையில் ஜெயா நடத்திய பாசப் போராட்டத்தைக் கண்டு அங்கிருந்தவர்கள் கலங்கினர். கணவரின் பிரிவை ஏற்க முடியாமல் கண்ணீருடன் தவித்த ஜெயாவை, அருகில் இருந்தவர்கள் தேற்ற முடியாமல் தவித்து நின்றனர். இந்த விபத்து குறித்து திருவாரூர் டவுன் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

ஸ்பெயினில் பயங்கரம்: இரு அதிவேக ரயில்கள் மோதி விபத்து – 30 பேர் பரிதாப பலி, பலர் படுகாயம்!

ஸ்பெயின் நாட்டின் மத்திய மாகாணமான டோலிடோவில் (Toledo) இன்று (அக்டோபர் - 28) காலையில் இரு அதிவேக ரயில்கள் ஒன்றோடொன்று மோதி நேரிட்ட கொடூர விபத்தில் குறைந்தது 30 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந... மேலும் பார்க்க

ஈரோடு: கலெக்டர் கார் மோதியதில் தூக்கி வீசப்பட்டு பரிதாபமாக உயிரிழந்த நபர்; போலீஸ் விசாரணை

ஈரோடு மாவட்ட ஆட்சியராக பதவி வகித்து வருகிறார் கந்தசாமி. தமிழ்நாடு அரசின் 'உங்களைத் தேடி, உங்கள் ஊரில்' திட்டத்தின் கீழ் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் இன்று நடைபெற்ற சிறப்பு முகாமில் பங்கேற்று... மேலும் பார்க்க

கார் மோதியதில் சாலையோரம் நின்ற 8 பேர் பலி: ஆம்புலன்ஸ்க்கு காத்திருந்து உயிரிழந்த தொழிலாளர்கள்

பஞ்சாப் மாநிலம் சங்ரூர் மாவட்டத்தின் லெஹ்ராககா பகுதியில் சோடியன் கிராமத்திற்கு அருகில் உள்ள ஜக்கல் சாலையில் சாலை கட்டுமானத்தில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் சாலையோரம் நின்று கொண்டிருந்தனர். ... மேலும் பார்க்க

Kolkata Stampede: ``என் அம்மா என் கண்முன்பே உயிரை விட்டார்..!" - தாயை பறிகொடுத்த இளைஞரின் துயரம்!

மேற்கு வங்க மாநிலம், வடக்கு கொல்கத்தாவில் உள்ள சோா்பாகன் பகுதியில் நேற்று துா்கா பூஜை பந்தல் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பந்தலைப் பாா்வையிட நுழைவாயில் பகுதியில் ஏராளமான மக்கள் காத்திருக்கின்றனர். த... மேலும் பார்க்க

நள்ளிரவில் பக்தர்கள் மீது ஏறிய லாரி; 15 பேர் பலி... நவராத்திரி விழாவில் சோகம்!

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் உள்ளது புகழ்பெற்ற சீத்லா மாதா கோயில். நேற்று நவராத்திரியை முன்னிட்டு நூற்றுக்கணக்கான பக்தர்கள் வழிபாட்டுக்காக திரண்டிருந்தனர். இந்த நிலையில், நள்ளிரவு சுமார் 1:30 ம... மேலும் பார்க்க

சாலையோரம் மீன் விற்ற பெண்... கான்க்ரீட் இயந்திரம் மோதி பலி - தொட்டியத்தில் அரங்கேறிய சோகம்!

திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே உள்ள சீலைப்பிள்ளையார் புத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராணி (வயது: 47). இவர், திருச்சி - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சாலை ஓரமாக மீன்கடை நடத்தி வந்தார். இந்நிலையி... மேலும் பார்க்க