செய்திகள் :

ஒரே நாளில் 9 கொலைகள்: 'எத்தனை நாள் மக்களை ஏமாற்றுவார் இந்த அட்டக்கத்தி சி.எம்?'- உதயநிதி கண்டனம்

post image

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நேற்று கொண்டாடப்பட்ட நிலையில், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் ஒரே நாளில் 9 பேர் அடுத்தடுத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தக் கொலை சம்பவத்திற்கு எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் எக்ஸ் தளப்பதிவில், "இந்த சோப்ளாங்கி ஆட்சியில் நேற்று ஒரே நாளில் மட்டும் காவலர் உட்பட 9 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள்.

க்ரைம்
க்ரைம்

பண்டிகை நாளில் பட்டாசு சத்தத்தைவிட பட்டா கத்திகளின் சத்தமே அதிகம் கேட்கும் அளவுக்கு கேடுகெட்ட ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கும் இந்த Dummy CM-ஐ வன்மையாக கண்டிக்கிறேன்.

Dummy CM, ஆய்வு செய்கிறேன் என்று சிறைக்குப் போனால் கைதிகள் தப்பிக்கிறார்கள் - காவல் நிலையங்களுக்குப் போனால் காவலர்கள் கொலையாகிறார்கள்.

இந்த மூடர் கூட்டத்தின் ஆட்சியில் மக்களுக்கும் பாதுகாப்பு இல்லை. அவர்களை காக்க வேண்டிய காவலர்களுக்கும் Safety இல்லை.

கோரிக்கையோடு சென்றவரை துணை சபாநாயகரே அடித்து விரட்டுவதும் பின் மிரட்டி வீடியோ வெளியிட வைப்பதும் – தமிழ்நாடு இதுவரை பார்த்திடாத கேவலம்.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

ஆய்வு செய்தேன், ஆபிஸரை நியமித்தேன் என்றும் தி.மு.க, தி.மு.க என்றும் இன்னும் எத்தனை நாள் மக்களை ஏமாற்றுவார் இந்த அட்டக்கத்தி சி.எம்?

தமிழ்நாட்டு மக்கள் சிந்தும் கண்ணீருக்கும், ரத்தத்துக்கும் இந்த சர்க்கஸ் ஆட்சியாளர்கள் பதில் சொல்லும் நாள் வெகு தொலைவில் இல்லை" என்று கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

"அடுத்த ஆண்டு ரூ.10,000 கோடி பட்டாசு விற்பனை - மாபெரும் இலக்கு" - அமைச்சர் கீர்த்தனா

இந்த ஆண்டு (2026) தீபாவளியையொட்டி ரூ.7,000 கோடிக்கு பட்டாசு விற்பனை ஆகியுள்ளதாக பட்டாசு விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.இது குறித்து தமிழ்நாட்டின் தொழிற்துறை அமைச்சர் கீர்த்தனா தனது எக்ஸ் பக்கத்தில் ... மேலும் பார்க்க

தமிழ்நாட்டில் தீபாவளி அன்று மட்டும் 9 கொலைகள்... அதிரவைக்கும் க்ரைம் ரேட்!

தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகை நாளான நேற்று (நவ. 8) மட்டும் 9 கொலை சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நேற்று கொண்டாடப்பட்ட நிலையில், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் ஒரே நாளில... மேலும் பார்க்க

"பாகிஸ்தான், எகிப்திற்கு அமெரிக்காவின் நிதியுதவி நிறுத்தப்பட வேண்டும்" - செனட்டர் அப்துல் எல்-சையத்

சமீபத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இஸ்ரேலுக்கு ஆண்டுதோறும் வழங்கி வரும் சுமார் 4 பில்லியன் டாலர் ராணுவ நிதியுதவியை இந்த ஆண்டின் இறுதிக்குள் நிறுத்தத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்திருந்தார்.இது குறித்து ... மேலும் பார்க்க

"மேக்கேதாட்டூ அணை கட்ட யாரிடமும் அனுமதி கேட்க வேண்டிய அவசியமில்லை" - டி.கே.சிவக்குமார்

மேக்கேதாட்டூ அணை கட்டுவதில் உறுதியாக இருக்கிறார் கர்நாடகா முதலமைச்சர் டி.கே. சிவக்குமார்.மேக்கேதாட்டூ அணை கட்டுவதன் மூலம் பெங்களூரின் குடிநீர் தேவைக்காக 10 டி.எம்.சி. தண்ணீர் மட்டும் பயன்படுத்தப்படும்... மேலும் பார்க்க

நூல் கொள்முதல் விவகாரம்: ``Family Fund; முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதுபோல்"- அமைச்சர் அருண் ராஜ்

சுகாதாரத்துறை அமைச்சர் அருண் ராஜ் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ``தீபாவளிப் பண்டிகைக் காலத்தில் பட்டாசுகளால் ஏற்படும் தீக்காயங்கள் மற்றும் விபத்துகளுக்கு உடனடிச் சிகிச்சை ... மேலும் பார்க்க