ரூஸ்வெல்ட் - சர்ச்சில் - ஜோசப் ஸ்டாலின் இடத்தில் ட்ரம்ப் - ஷி - புதின்? புதிய '...
"காங்கிரஸ் இந்தியாவை ஏன் ஏழை நாடாகவே வைத்திருந்தது?" - காங்கிரஸிடம் கிரண் ரிஜிஜூ 4 கேள்விகள்
சீனாவில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங் மூவரும் சந்தித்துக்கொண்ட புகைப்படத்தைப் பகிர்ந்து நேற்று (நவம்பர் 20) மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில்...
“தற்போது காங்கிரஸ் ஆட்சியில் இருந்திருந்தால், இந்தியாவின் பிரதமர் இந்த மேஜையில் அமர்ந்திருப்பார். சமரசம் செய்துகொண்ட ஒரு பிரதமரால் ஒருபோதும் இந்த மேஜையில் அமர முடியாது” என்று பதிவிட்டிருந்தார்.
கிரண் ரிஜிஜூவின் 4 கேள்விகள்
இந்தப் பதிவிற்குப் பதிலளிப்பதுபோல, மத்திய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தனது எக்ஸ் பக்கத்தில் காங்கிரஸிடம் நான்கு கேள்விகளை எழுப்பியுள்ளார்.


கிரண் ரிஜிஜூ தனது எக்ஸ் பதிவில், “காங்கிரஸ் இந்த 4 கேள்விகளுக்குப் பதில் சொல்லியே ஆக வேண்டும்:
1. 1962-ல் என்னுடைய கிராமம் சீனாவால் ஆக்கிரமிக்கப்பட்டது. அந்த 1962 அவமானத்திற்குக் காங்கிரஸ் மன்னிப்பு கேட்குமா?
2. காங்கிரஸ் இந்தியாவை ஒரு ஏழை நாடாகவே வைத்திருந்தது. ஏன்?
3. இந்தியா ஏன் ‘பாம்பாட்டிகளின் தேசம்’ என்று அழைக்கப்பட்டது?
4. இந்தியாவின் பொருளாதாரம் ஏன் ‘இந்து வளர்ச்சி விகிதம்’ என்று ஏளனப்படுத்தப்பட்டது?” என்று கேட்டுள்ளார்.














