செய்திகள் :

கேரளம்: ​பள்ளி வகுப்பறையில் துப்பாக்கிச் சூடு; 9-ம் வகுப்பு மாணவன் காயம்; நடந்தது என்ன?

post image

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் பட்டாம்பி அருகே உள்ள பள்ளிப்புரம் பரதூர் மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவனின் இறந்துபோன தாத்தா முன்பு பயன்படுத்தி வந்த உரிமம் இல்லாத பழைய ரிவால்வர் வகை துப்பாக்கியை, வீட்டாருக்குத் தெரியாமல் நேற்று பள்ளிக்கு எடுத்து வந்துள்ளான்.

வகுப்பறையில் ஆசிரியர்கள் இல்லாத நேரத்தில், தனது நண்பர்களிடம் அந்தத் துப்பாக்கியைக் காட்டிக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அந்தத் துப்பாக்கியிலிருந்து மொத்தம் மூன்று முறை குண்டுகள் வெடித்துள்ளன. ​முதல் குண்டு வகுப்பறைத் தரையிலும்,​ இரண்டாவது குண்டு அருகிலிருந்த மாணவனின் உடலை உரசியபடியும் சென்றது. ​

மூன்றாவதாக வெடித்த குண்டு முஹம்மது ஷெபீக் என்ற மாணவனின் உடலில் பாய்ந்து காயத்தை ஏற்படுத்தியது. ​துப்பாக்கிச் சத்தம் கேட்டு விரைந்து வந்த ஆசிரியர்கள், மாணவனிடமிருந்த துப்பாக்கியைப் பறிமுதல் செய்தனர்.

தோள்பட்டைக்கும் கைக்கும் இடையே குண்டு பாய்ந்த மாணவன் கோட்டக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவத்தின் போது மாணவர்களுக்கு இடையே எந்தவித வாக்குவாதமோ, மோதலோ நடைபெறவில்லை என ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்த மாணவர்
காயமடைந்த மாணவர்

துப்பாக்கியைக் கொண்டு வந்த மாணவனிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளிக்கு துப்பாக்கி கொண்டு வந்ததன் நோக்கம் என்ன, இந்த ஆயுதம் எங்கிருந்து கிடைத்தது, இதற்கு முன்பும் பள்ளிக்குக் கொண்டு வரப்பட்டதா என்ற கோணங்களில் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.

ஷொர்ணூர் டி.எஸ்.பி. வினு தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். துப்பாக்கியில் மொத்தம் எத்தனை தோட்டாக்கள் இருந்தன என்பது விரிவான ஆய்வுக்குப் பிறகே தெரியவரும் என டி.எஸ்.பி தெரிவித்துள்ளார். இதனிடையே, இச்சம்பவம் குறித்து கேரள கல்வி அமைச்சர் அவசர அறிக்கை வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கி

இதற்கிடையே துபாயிலிருந்து நேற்று கொச்சி நெடும்பாசேரி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்திறங்கிய இரண்டு பயணிகளின் உடைமைகளில் இருந்து 11 ஏர் ரைபிள் துப்பாக்கிகளைச் சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். ​பாலக்காட்டைச் சேர்ந்த ரமேஷ் மச்சாட், சிஜோய் சசி ஆகியோரிடமிருந்து பல்வேறு மாடல்களைக் கொண்ட துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

அதிகாரிகளின் சோதனையிலிருந்து தப்பிக்க, துப்பாக்கிகளின் பாகங்கள் தனித்தனியாகக் கழற்றி வைக்கப்பட்ட நிலையில் கடத்தி வரப்பட்டுள்ளன.

​இவற்றை சட்டவிரோதமாகக் கடத்த முயன்றது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இத்தனை துப்பாக்கிகளை ஒரே நேரத்தில் கொண்டு வந்ததன் பின்னணியில் வேறு ஏதேனும் சதித் திட்டங்கள் உள்ளனவா என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், இந்தத் துப்பாக்கிகளுக்கான உரிய ஆவணங்களைச் சமர்ப்பிக்குமாறு அவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

"Ukraine நலனைப் பலி கொடுத்து போர்நிறுத்தம் கூடாது" - ரஷ்யாவுக்கு எதிரான நடவடிக்கை குறித்து ஜெலன்ஸ்கி

ரஷ்யா - உக்ரைன் போர் நேற்றே முடிந்திருக்க வேண்டும் என்றும், இந்தப் போர்நிறுத்தம் குறித்தும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சமீபத்தில் கொடுத்துள்ள பேட்டியில் பேசியிருப்பதாவது..."தற்போதைய பேச்சுவார்த்தைக் குழ... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம்: "விஜய்யைச் சுற்றி மாயக்கோட்டை..." - என்ன சொல்கிறார் அண்ணாமலை?

நேற்று திருப்பரக்குன்றம் தூணில் தீபம் ஏற்றப்படாதது குறித்து 'We The Leaders' அமைப்பின் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது..."ஒரு மாநில முதல்வர் அரசியல் சாசனம் தரும் உரிமையில் ஆட... மேலும் பார்க்க

'கள்ளக்குறிச்சி கலெக்டர் மனமுடைந்து போயிருந்தார்!' - ஐ.ஏ.எஸ் அதிகாரி கவிதா ராமு வெளியிட்ட தகவல்!

கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ விவகாரம் நீதிமன்றம் வரைக்கும் சென்ற நிலையில், அவர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியிருக்கிறது. இந்நிலையில், கோ - ஆப்டெக்ஸின் மேலாண்மை இயக்குனராக இருக்க... மேலும் பார்க்க

கருகும் பயிர்கள், கதறும் டெல்டா விவசாயிகள்! - பொய் சொல்லும் தேவகவுடா!

அனைவருக்கும் பசுமை வணக்கம்!காவிரி டெல்டா மாவட்டங்களில் பல லட்சம் ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரின்றி கருகத் தொடங்கியுள்ளன. விவசாயிகள் மிகுந்த வேதனையிலும் ஆதங்கத்திலும் தவிக்கிறார்கள். ஆனால், ‘தமிழகத்திற்க... மேலும் பார்க்க

வழக்கமான இடத்தில் தீபம்; தூணில் தீபமேற்றாததால் போராட்டம்... பதற்றம்... போர்க்களமான திருப்பரங்குன்றம்

திருப்பரங்குன்றத்தில் உள்ள தூணில் கார்த்திகை தீபத்தன்று தீபம் ஏற்ற வேண்டும். இதற்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மதுரை மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோர் செய்து தர வேண்டுமென உச்ச நீத... மேலும் பார்க்க