செய்திகள் :

"சபரிமலை: ஐயப்ப சுவாமியின் தங்கக் கிரீடம் மாயமா?"- விளக்கமளித்த தேவஸ்வம் போர்டு!

post image

கேரள உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி, அமிகஸ் கியூரி நீதிபதி கே.டி. சங்கரன் தலைமையில் சபரிமலையில் உள்ள திருவாபரணங்கள் மற்றும் விலைமதிப்பற்ற காணிக்கைப் பொருள்களின் இருப்பு தொடர்பான கணக்கெடுப்பு மற்றும் விரிவான தணிக்கைப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த ஆய்வின் போது, சன்னிதான ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த 55.75 பவுன் எடை கொண்ட உண்மையான தங்கக் கிரீடம் காணாமல் போயிருப்பதும், அதற்குப் பதிலாக முலாம் பூசப்பட்ட ஒரு போலி கிரீடம் மாற்றி வைக்கப்பட்டிருப்பதும் தெரியவந்ததாகத் தகவல்கள் வெளியாகின. ​மாயமானதாகக் கூறப்படும் இந்தத் தங்கக் கிரீடம், கடந்த 2012-ம் ஆண்டு தமிழ்நாட்டைச் சேர்ந்த பக்தர் ஒருவரால் சபரிமலை ஐயப்ப சுவாமிக்குக் காணிக்கையாகச் சமர்ப்பிக்கப்பட்டதாகும். சன்னிதானத்திலிருந்து ஆறன்முளாவில் உள்ள பிரதான ஸ்ட்ராங் ரூமிற்கு முறைப்படி மாற்றப்பட வேண்டிய இந்தக் கிரீடம், முறையான சி.சி.டி.வி கண்காணிப்பு இல்லாத இடத்தில் வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், ஆறன்முளா தேவஸ்வம் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த மற்றொரு 4 பவுன் தங்க மாலையும் மாயமாகி இருப்பதாகக் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளதாகக் கூறப்பட்டது, பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில்

இந்நிலையில், இப்புகார்கள் மற்றும் சலசலப்புகளுக்கு விளக்கம் அளித்துள்ள திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு நிர்வாகம், ஐயப்ப சுவாமிக்குப் பக்தர்கள் சமர்ப்பிக்கும் காணிக்கைகள், நகைகள் மற்றும் திருவாபரணங்கள் அனைத்தும் முறையான பதிவேட்டுப் பராமரிப்புடன் மிகுந்த பாதுகாப்புடன் கையாளப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளது. நீதிமன்றத்தின் மேற்பார்வையில் நடைபெறும் தணிக்கை நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்பட்டு வருவதாகவும், ஆபரணங்கள் விவகாரத்தில் ஏதேனும் முறைகேடுகளோ, விதிமீறல்களோ அல்லது அலட்சியமோ நடந்திருப்பது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது பாரபட்சமின்றி கடுமையான குற்றவியல் மற்றும் துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கைகள் பாயும் என்றும் தேவஸ்வம் போர்டு தலைவர் கே.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில்
சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில்

மேலும், கார்த்திகை மாதம் தொடங்கும் மண்டல கால, மகரவிளக்கு யாத்திரையை முன்னிட்டு சன்னிதானத்தில் பக்தர்களுக்கான முன்னேற்பாடுகள் முழுவீச்சில் முடுக்கிவிடப்பட்டுள்ளன. நிலக்கல், பம்பை முதல் சன்னிதானம் வரை பக்தர்கள் நெரிசலின்றி எளிதாகத் தரிசனம் செய்வதற்கான பிரத்யேக வரிசை மேலாண்மைத் திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. நடைப்பந்தல் விரிவாக்கம், தடையில்லா பாதுகாக்கப்பட்ட குடிநீர், கூடுதல் கழிப்பறை வசதிகள் மற்றும் அவசர மருத்துவ முகாம்கள் தயார்நிலையில் வைக்கப்படுகின்றன. அதேபோல், ஆன்லைன் முன்பதிவுக்கான வெர்ச்சுவல் கியூ முறையை மேலும் செம்மைப்படுத்தவும், சன்னிதானம் மற்றும் அதைச் சுற்றியுள்ள வனப்பகுதிகளில் கூடுதல் சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தி பலத்த போலீஸ் பாதுகாப்பை உறுதி செய்யவும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருவதாகவும் திருவிதாங்கூர் தேவஸ்வம்போர்டு தலைவர் கே.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

மீண்டும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட அருண் ஐ.பி.எஸ் - தமிழக அரசு ஆணை; விவரம் என்ன?

சென்னை மாநகரக் காவல் ஆணையராக இருந்த அருண் ஐ.பி.எஸ்-ஸை தேர்தல் நேரத்தில், இந்திய தேர்தல் ஆணையம் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி, நடவடிக்கை மேற்கொண்டிருந்தது. அந்தப் பதவிக்கு ஏ.டி.ஜி.பி அந்தஸ்தில் இர... மேலும் பார்க்க

``மாணவர்கள் காலை உணவில் பல்லி; திட்டத்தை விட விளம்பரத்துக்கு கூடுதல் செலவு" - டிடிவி தினகரன் காட்டம்

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் 22-ம் தேதி தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் 1-ம் வகுப... மேலும் பார்க்க

தேர்தல் ஆணையம்: ``ஸ்டாலின் முதல் மம்தா வரை தோல்வி தற்செயல் அல்ல" - அபிஜித் தீப்கே சொல்லும் கணக்கு

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் அடுத்த 48 மணி நேரத்திற்குள் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும், தவறினால் நாடு தழுவிய அளவில் மிகப்பெரிய போராட்டத்தை நடத்தப்போவதாகவும் காக்ரோஜ் ஜனதா கட்சி ந... மேலும் பார்க்க

வீரமணி போக்சோ வழக்கு: ``குற்றவாளிகள் எவ்வளவு பெரிய இடமாக இருந்தாலும்..." - எடப்பாடி பழனிசாமி காட்டம்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கிரானைட் தொழிலதிபர் வீரமணி வழக்கு குறித்து காட்டமாக விமர்சித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் தன் எக்ஸ் பக்கத்தில், ``ஜெம் கிரானைட்ஸ் வீரமணி பாலியல் வழக்கில் நா... மேலும் பார்க்க

'ஜெம்' வீரமணி: `சாந்தி, ரஞ்சன்... ரூ.20 கோடியை மிரட்டி வாங்க என்னை அணுகினர்' - ஜான் பாண்டியன் பேட்டி

'ஜெம்' வீரமணி பாலியல் விவகாரத்தில், அடுத்தடுத்த அதிரடி திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன. இந்த விவகாரம் குறித்து கடந்த 2024-ம் ஆண்டே தமிழக காவல்துறையில் புகார் தெரிவித்ததாகக் கூறி அதிர்ச்சி கிளப்பினார் ... மேலும் பார்க்க

தேர்தல் ஆணையம் விவகாரம்: ``அமிஷ் ஷாவின் நிழலே ஞானேஷ்குமார்" - காரணங்களை அடுக்கிய மாணிக்கம் தாகூர்

தேர்தல் ஆணையம் மீது தற்போது கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தனிச்சையாக செயல்பட்டிருப்பதால் அவர் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துவர... மேலும் பார்க்க