செய்திகள் :

திடீர் என்ட்ரி கொடுத்த விஜிலென்ஸ்; ரூ.1,45,000 பணத்துடன் ஓட்டம் பிடித்த ஜீப் டிரைவர்; என்ன நடந்தது?

post image

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நகராட்சி அலுவலத்தில் நேற்று மாலை லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி தலைமையில்‌ ஆய்வாளர் உள்ளிட்ட 10 போலீஸார் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

நகராட்சியின் அனைத்துக் கதவுகளையும் மூடி, அனைவரது செல்போன்களையும் பறிமுதல் செய்து சோதனையை மேற்கொண்டுள்ளனர். இந்தச் சோதனையின்போது திடீரென ஓட்டம் பிடித்த நபர் ஒருவரை லஞ்ச ஒழிப்பு போலீஸார் விரட்டிச் சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.

அப்போது, ஆவணங்கள் இன்றி கணக்கில் வராத 1.54 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் அவரின் பேன்ட் பாக்கெட்டில் இருப்பதைக் கண்டறிந்து பறிமுதல் செய்துள்ளனர். மேலும் அந்த நபரிடம் விசாரணை நடத்தியதில், நகராட்சி ஆணையாளரின் வாகன ஓட்டுனர் ரங்கசாமி என்பது தெரியவந்துள்ளது .

பணம் பறிமுதல்
பணம் பறிமுதல்

அவரிடம் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், நகராட்சி கண்காணிப்பாளர் நிரஞ்சனா தன்னிடம் இந்தப் பணத்தைக் கொடுத்து வெளியே எடுத்துச் செல்லும்படி கூறியதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

அதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நிரஞ்சனாவிடம் விசாரணை மேற்கொண்டனர். இதில் கணக்கில் வராத 1,54,000 ஆயிரம் ரூபாய் பணத்தை வைத்திருந்த ஆணையாளரின் வாகன ஓட்டுநர் ரங்கசாமி மற்றும் நகராட்சி கண்காணிப்பாளர் நிரஞ்சனா ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சாதி பாகுபாட்டால் IIT Bombay மாணவர் தற்கொலை; "அவனிடம் நான் அப்படிச் சொல்லியிருக்கக் கூடாது" - தந்தை

ஐ.ஐ.டி பாம்பேயில் பி.டெக் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார் மாணவர் சாஹில் வாகோடே.இரண்டாம் ஆண்டு மிட் செமஸ்டர் தேர்வின்போது, ChatGPT பயன்படுத்தி தேர்வறையில் பேராசிரியரிடம் இவர் மாட்டியதாகக் கூறப்படுகிறது.... மேலும் பார்க்க

தீய சக்தியை விரட்ட சடங்கு; பூசாரிகளைச் சுட்டுக்கொன்ற கணவன்; மனைவி, மகனுக்கு நேர்ந்த கொடூரம்

உத்தரப் பிரதேச மாநிலம் ஆசம்கர் நகரைச் சேர்ந்த அரவிந்த் சிங் என்பவர் மாலை 6 மணியளவில் வீடு திரும்பியபோது, ​​அவரது மனைவி பபிதா சிங் (32), பூசாரிகள் மகேந்திர பதக் (60) மற்றும் அகிலேஷ் மிஸ்ரா (50) ஆகிய இர... மேலும் பார்க்க

சேகர் ரெட்டி வீட்டில் பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் திருட்டு; பணிப்பெண்கள் கைது; நடந்தது என்ன?

வேலூர் மாவட்டம், காட்பாடி உட்கோட்டத்துக்கு உட்பட்ட விருதம்பட்டு காவல் நிலையத்தில் இருந்து சுமார் 300 மீட்டர் தொலைவில் பிரபல தொழிலதிபர் சேகர் ரெட்டியின் வீடு உள்ளது. இந்த வீட்டில் நம்பத் தகுந்த பணியாட்... மேலும் பார்க்க

TVK: வார்டு செயலாளர் பதவி பறிப்பு; தற்கொலை செய்த தவெக நிர்வாகி; மாவட்ட செயலாளர் மீது மனைவி புகார்

ராமேஸ்வரம் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் பரந்தாமன். முன்னாள் ராணுவ வீரரான இவர் ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற பின் வெளிநாடு சென்று வேலை பார்த்து வந்தார். இவருக்கு தேவகி என்ற மனைவியும், இரு குழந்தை... மேலும் பார்க்க

போலி நகை விற்றதாக ஜூவல்லரியிடம் பணம் கேட்டு மிரட்டிய புகார் - பசும்பொன் மக்கள் கட்சி தலைவர் கைது!

தூத்துக்குடி, மூன்றாவது மைல் பசும்பொன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் இசக்கி ராஜா. இவர், பசும்பொன் மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர். இவரது கட்சியைச் சேர்ந்த நிர்வாகி இசக்கிராஜ் என்பவர் கடந்த இரண்டு ஆண்டுகள... மேலும் பார்க்க

பாலியல் தொல்லை... அத்துமீறிய தந்தை; சிங்கப்பெண் படையிடம் புகாரளித்த மாணவி - பாய்ந்தது போக்சோ!

நெல்லை, டவுன் அருகே உள்ள குன்னத்தூர் பகுதியைச் சேர்ந்தவர், 52 வயதான பிளம்பிங் தொழிலாளி. இவருக்கு 3 மகள்கள் உள்ளனர். இதில் 3-வது மகள், நெல்லை டவுனில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.... மேலும் பார்க்க