செய்திகள் :

பிரதீப் ராஜ் படுகொலை: "முதலில் கொலைகள்... பின்னர் ஹீரோ சாகசமா?"- முதல்வர் விஜய்யைத் தாக்கும் கனிமொழி

post image

திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் தன்னை அழைத்து மிரட்டியதாகப் புகார் தெரிவித்த மறுநாளே பிரதீப் ராஜ் (28) என்பவர் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்.

காவல் ஆய்வாளர் கந்துவட்டி ரவுடிக்கு ஆதரவாகச் செயல்பட்டு தன் மீது பொய் வழக்கு போடுவதாக பிரதீப் குற்றம்சாட்டி இருந்த நிலையில் இந்தச் சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

இந்தப் படுகொலை சம்வத்திற்கு திமுக எம்.பி கனிமொழி கண்டனம் தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "தலைநகர் சென்னையில் மீண்டும் ஒரு கொலை. இப்படி நாள்தோறும் தொடரும் கொலை கொள்ளை சம்பவங்களால் ஒரு சந்தேகம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

மாண்புமிகு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள், தான் ஒரு முன்னாள் கதாநாயகன் என்பதால், வணிகத் திரைப்படங்களில் காட்டப்படுவதைப் போல, முதலில் கொடூரக் கொலைகள் அரங்கேறுவதை வேடிக்கை பார்த்துவிட்டு, பின்னர் தனது ‘கதாநாயக சாகசங்களை’ காட்டலாம் என்று ஏதேனும் திட்டம் வைத்திருக்கிறாரா என்ற குழப்பமும் மக்களிடையே எழுகிறது" என்று கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

மிசா: `அண்ணன் ஸ்டாலின், அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்ட தலைவர்; அதை யாரும் மறுக்க முடியாது!'- திருமா

சட்டமன்றத்தில் முன்னாள் முதல்வர் ஸ்டாலினின் மிசா கைது குறித்து, முதல்வர் விஜய்-யின் செய்கை பரவலான விமர்சனம் பெற்ற நிலையில், அதற்கு வருத்தம் தெரிவித்திருந்தார். அந்த செய்கை குறித்து முன்னாள் முதல்வர் ஸ... மேலும் பார்க்க

CM Vijay: 'முதல்வரின் லண்டன் பயணம்; பரம ரகசியம் காக்கும் தமிழக அரசு!'

தமிழக முதல்வர் விஜய் இன்றிரவு லண்டனுக்கு செல்லவிருக்கிறார். ஆனால், முதல்வர் எதற்காக லண்டன் செல்கிறார்? லண்டனில் அரசு முறையாக முதல்வர் யாரையெல்லாம் சந்திக்கிறார் என எந்தத் தகவலையும் தமிழக அரசு அதிகாரப்... மேலும் பார்க்க

பிரதீப் ராஜ் கொலை: ``காவல்துறை முதல்வரின் கட்டுப்பாட்டில்தான் செயல்படுகிறதா?" - டிடிவி தினகரன்

கந்துவட்டிக் காரர்களின் தொல்லையால் தன் உயிருக்கு ஆபத்து இருக்கிறது எனவும், தன்னைக் காப்பாற்றும்படியும் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார் பிரதீப் ராஜ் (30).காவல்துறை கந்துவட்டிகாரர்களுக்கு ஆதரவா... மேலும் பார்க்க

'வி.எஸ்.பாபுவுக்கு சுவாசக்கருவி உதவியுடன் சிகிச்சை; லைனுக்கு வந்த சி.எம் விஜய்!' - முழு தகவல்

கொளத்தூர் தவெக எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு திடீர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் எனத் தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில், வி.எஸ்.பாபு அனுமதிக்கப்பட்டி... மேலும் பார்க்க

Vijay: "சினிமாவில்தான் விஜய் ஹீரோ; நிஜத்தில் அவர் வில்லன்" - டி.டி.வி. தினகரன் காட்டம்

அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், "கட்சிக்கும், தொகுதி மக்களுக்கும் துரோகம் செய்து விட்டு சென்றார்கள். அதனால், இடைத்தேர்தல் நடத்த... மேலும் பார்க்க

TVK: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலுக்கான தவெக வேட்பாளர் அறிவிப்பு - யார் போட்டியிடுகிறார்கள்?

தமிழகத்தில் 7 சட்டமன்றத் தொகுதிகள் காலியாக இருக்கும் நிலையில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதியை இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. அதன்படி, இவ்விரு தொகுதிகளுக... மேலும் பார்க்க