Man Vs. Wild: ``வீகன் உணவுக்கு மாறியதால் பலவீனமடைந்தேன்" - சாகச வீரர் பியர் கிரி...
பிரேசில் தேர்தலில் முறைகேடு? `மோசடியைக் கண்டுபிடிப்பவருக்கு $10 லட்சம் பரிசு' - ட்ரம்ப் அறிவிப்பு!
பிரேசில் அதிபர் தேர்தலில் முறைகேடுகள் நடந்திருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.
பிரேசிலில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் இடதுசாரித் தலைவரான லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா, வலதுசாரி வேட்பாளரான ஃப்ளாவியோ போல்சனாரோவை தோற்கடித்து மீண்டும் அதிபராகத் தேர்வாகியுள்ளார். முன்னாள் பிரேசில் அதிபர் ஜேர் போல்சனாரோவின் மகனான ஃப்ளாவியோ போல்சனாரோ, தனது தோல்வியை ஒப்புக்கொள்ள மறுத்துத் தேர்தல் முடிவுகளை ரத்து செய்ய நீதிமன்றத்தை அணுகப்போவதாகத் தெரிவித்துள்ளார்.

உச்ச நீதிமன்றம் வாக்குப்பதிவு நேரத்தை இரண்டு மணி நேரம் நீட்டித்த முடிவை அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இருப்பினும், கூடுதல் நேரத்தில் 35,000 வாக்குகள் (0.03%) மட்டுமே பதிவாகியுள்ளன என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இந்த தேர்தல் முடிவுகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், ``நான் எந்தப் பக்கமும் ஆதரவு தெரிவிக்கவில்லை, ஆனால் இது மற்றொரு முறைகேடான தேர்தலைப் போலத் தெரிகிறது. மிகவும் மோசமாகக் காட்சியளிக்கிறது." என்று எந்த ஆதாரத்தையும் குறிப்பிடாமல் விமர்சித்தார்.
மேலும் தனது 'ட்ரூத் சோஷியல்' சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள ட்ரம்ப், ``கடந்த காலத் தேர்தல்கள் அல்லது விரைவில் நடைபெறவுள்ள 2026 அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் வாக்காளர் மோசடியில் ஈடுபட்டவர்களைக் கண்டுபிடித்து, அவர்களுக்குக் தண்டனை பெற்றுத் தருபவர்களுக்கு 10 லட்சம் அமெரிக்க டாலர் (சுமார் ரூ8.3 கோடி) பரிசு வழங்கப்படும்" என்று அறிவித்துள்ளார். ட்ரம்ப்பின் இந்த விமர்சனங்களுக்குப் பதிலளித்துள்ள பிரேசில் துணை அதிபர் ஜெரால்டோ ஆல்க்மின், ``ட்ரம்ப்பின் கூற்று முற்றிலும் தவறானது மற்றும் ஆதாரமற்றது." என மறுத்திருக்கிறார்.















