செய்திகள் :

மதுரை - தூத்துக்குடி ரயில்வே திட்டத்தை கைவிடுமாறு ஒரு போதும் கூறவில்லை: அமைச்சர் சிவசங்கர்

post image

மதுரை – தூத்துக்குடி ரயில் திட்டத்தை கைவிட தமிழ்நாடு அரசு ஒருபோதும் கூறவில்லை என போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ஒன்றிய இரயில்வே அமைச்சர் 10.01.2025 அன்று மதுரை - தூத்துக்குடி (வழி அருப்புக் கோட்டை) புதிய அகல இரயில் பாதை அமைக்கும் திட்டத்தை கைவிட தமிழ்நாடு அரசு கோரியதாகவும் அதனால் இத்திட்டம் கைவிடப்பட்டதாகவும் தெரிவித்ததாக செய்தி வெளிவந்துள்ளது. இது முற்றிலும் உண்மைக்கு புறம்பான செய்தியாகும். தமிழ்நாடு அரசு ஒருபோதும் எந்தவிதத்திலும் இவ்வாறு தெரிவிக்கவில்லை, மாறாக இத்திட்டத்தை நடைமுறை படுத்தவே தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளது.

மதுரை – தூத்துக்குடி (வழி அருப்புக் கோட்டை) புதிய அகல இரயில் பாதை அமைக்கும் திட்டத்திற்கு இரயில்வே துறையால் நிலத்திட்ட அட்டவணைப்படி 926.68.84 ஹெக்டேர் நில எடுப்பு

செய்து இரயில்வே துறைக்கு ஒப்படைக்குமாறு மாவட்ட ஆட்சித் தலைவர்கள் (மதுரை, விருதுநகர் மற்றும் தூத்துக்குடி) அவர்களிடம் கேட்டுக் கொண்டதில், இத்திட்டம் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டு நில எடுப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. இதற்கான நிர்வாக அனுமதியும் வழங்கி தமிழ்நாடு அரசால் (போக்குவரத்துத் துறை) அரசாணை (நிலை) எண்.7, நாள் 24.01.2022, அரசாணை (நிலை) எண்.65, நாள் 25.04.2023 மற்றும் அரசாணை (நிலை) எண்.134, நாள் 22.09.2023 ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளது.

மேற்காணும் திட்டம் உள்ளிட்ட ஏனைய இரயில்வே திட்டங்களுக்கு போதுமான நிதி ஒதுக்கீடு செய்து தருமாறு 19.08.2024 நாளிட்ட கடிதம் மூலம் தமிழ்நாடு முதல்வர், ஒன்றிய ரயில்வே அமைச்சரைக் கேட்டுக்கொண்டார். அப்படியொரு கடிதம் எழுதியுள்ள நிலையில்- தமிழ்நாடு அரசு வேண்டாம் என்று கூறி விட்டது என ஒரு ஒன்றிய அமைச்சரே பொறுப்பற்ற முறையில் பேசலாமா? இத்திட்டத்திற்கான உரிய நிதி ஒதுக்கீடு செய்யுமாறு விருதுநகர், மதுரை மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்ட ஆட்சித் தலைவர்களால் 09.08.2024, 04.09.2024, மற்றும் 27.09.2024 ஆகிய நாட்களில் முறையே தென்னக இரயில்வே துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டு, தற்போது வரை அதற்கான பதில் ஏதும் பெறப்படவில்லை.

அந்தக் கடித விவரங்களாவது ஒன்றிய ரயில்வே துறை அமைச்சர் அவர்களுக்குத் தெரியுமா? மேலும், 12.12.2024 நாளிட்ட அரசுக் கடிதம் மூலம் தென்னக இரயில்வே, பொது மேலாளர் அவர்களிடம் தமிழக இரயில்வே திட்டங்கள் குறித்த தற்போதைய நிலை மற்றும் நிதி நிலை அறிக்கையை கேட்டுக்கொள்ளப்பட்டது. இது குறித்து தென்னக இரயில்வே துணைத் தலைமைப் பொறியாளர் தனது கடித நாள் 19.12.2024ல் “மதுரை – தூத்துக்குடி அகல இரயில்பாதை திட்டம் தொடர்பாக மீளவிட்டான் – மேலமருதூர் வரை 18 கி.மீ. அளவில் பணி முடிக்கப்பட்டுவிட்டது” என்றும் “மீதமுள்ள பிரிவுகளில் திட்டம் தொடர்வது தொடர்பாக தென்னக இரயில்வேயால் இக்கருத்துரு குறைந்த சரக்கு வாய்ப்புகள் உள்ளதால் கைவிடப்பட்டதாக” தெரிவித்துள்ளார்.

சத்தீஸ்கா் உருக்கு ஆலையில் விபத்து: மேலும் 3 சடலங்கள் மீட்பு

இத்திட்டத்தினை கைவிடக்கோரி எந்தவிதமான கடிதமோ, வாய்மொழியாகவோ தமிழ்நாடு அரசால் இரயில்வே துறைக்கு தெரிவிக்கப்படவில்லை, மாறாக இத்திட்டத்தை துரிதப்படுத்தவே தமிழ்நாடு அரசு இதுவரை கோரி வருகிறது. இத்திட்டத்தை கைவிடுமாறு தமிழ்நாடு அரசு சார்பில் கோரப்பட்டதாக அடிப்படை ஆதாரமற்றது என்பது மட்டுமல்ல- தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டிற்கு முற்றிலும் முரணான தகவலை ஒன்றிய ரயில்வே துறை அமைச்சரே வெளியிடலாமா? தமிழ்நாட்டின் திட்டம் என்றாலே ஒரவஞ்சனையுடன் பார்த்து- புறக்கணிக்கும் மனப்பான்மையில் செயல்படும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் எண்ணவோட்டம் தமிழ்நாடு மக்களுக்குச் செய்யும் துரோகமல்லவா? ஆகவே முதல்வரால் பெரிதும் வலியுறுத்தப்படும் இத்திட்டத்திற்கு உரிய நிதியை ஒதுக்கி உடனடியாக திட்டத்தை நிறைவேற்றிட வேண்டுமென ஒன்றிய இரயில்வே துறை அமைச்சரைக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

மஞ்சோலை தொழிலாளா்கள் விவகாரம்: கூடுதல் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு!

மாஞ்சோலை தொழிலாளா்கள் தரப்பில் தங்களுக்கு விரிவான மறுவாழ்வுத் திட்டம் தேவை எனக் கோரி தொடரப்பட்ட வழக்கில் கூடுதல் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய மனுதாரா்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாஞ்சோ... மேலும் பார்க்க

பாலியல் வழக்குகளை விசாரிக்க 7 இடங்களில் சிறப்பு நீதிமன்றங்கள்: பேரவையில் முதல்வா் அறிவிப்பு

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளை விசாரிக்க சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி உள்பட ஏழு இடங்களில் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா். சட்டப... மேலும் பார்க்க

மத்திய அரசின் புதிய ஓய்வூதிய திட்டத்தை பரிசீலிப்போம்: அமைச்சா் தங்கம் தென்னரசு

மத்திய அரசின் புதிய ஓய்வூதியத் திட்டத்தின் வழிகாட்டு நெறிமுறைகள் கிடைத்தவுடன் அவற்றை தமிழ்நாடு அரசு பரிசீலிக்கும் என்று நிதி அமைச்சா் தங்கம் தென்னரசு தெரிவித்தாா். சட்டப் பேரவையில் சனிக்கிழமை நேரமில்ல... மேலும் பார்க்க

யானை வழித்தடத்தில் மண் அள்ளிய விவகாரம்: சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு உத்தரவு

கோவையில் யானை வழித்தடத்தில் மண் அள்ளிய விவகாரம் தொடா்பாக விசாரணை நடத்த இரு ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வு குழுவை நியமித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. கோவை வனப்பகுதியையொட்டிய யானைகள... மேலும் பார்க்க

திமுக ஆட்சியில் கடன்: எடப்பாடி பழனிசாமி கேள்வி

திமுக ஆட்சியில் ரூ.3.54 லட்சம் கோடி கடன் பெறப்பட்டுள்ளது. இதை எப்போது திருப்பிக் கொடுப்பது என அதிமுக பொதுச் செயலரும் எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினாா். சென்னையில் செய்தியாள... மேலும் பார்க்க

பொங்கல் முடிந்ததும் பரந்தூர் செல்கிறார் விஜய்

ஜனவரி 3ஆவது வாரத்தில் பரந்தூர் மக்களை சந்திக்க தவெக தலைவர் விஜய் செல்லவுள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் பசுமை விமான நிலையம் அமைக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர முயற்சிகள்... மேலும் பார்க்க