செய்திகள் :

வீரமணி போக்சோ வழக்கு: ``குற்றவாளிகள் எவ்வளவு பெரிய இடமாக இருந்தாலும்..." - எடப்பாடி பழனிசாமி காட்டம்

post image

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கிரானைட் தொழிலதிபர் வீரமணி வழக்கு குறித்து காட்டமாக விமர்சித்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் தன் எக்ஸ் பக்கத்தில், ``ஜெம் கிரானைட்ஸ் வீரமணி பாலியல் வழக்கில் நாளுக்கு நாள் வருகின்ற செய்திகள் மிகுந்த அதிர்ச்சி அளிக்கின்றன. இத்தனை ஆண்டுகளாக, பல சிறுமிகள் பாலியல் சீண்டலுக்கு ஆளாகி இருப்பது என்பது, ஒரு சமூகமாக வெட்கித் தலைகுனிய வேண்டிய அவலம்.

இதுபோன்ற Sensitive-ஆன, பல ஆண்டுகள் வெளி உலகிற்குத் தெரியாமல் இருந்த ஒரு விஷயம், தற்போது பொதுவெளியில் வந்திருக்கும்போது, காவல்துறை இந்த வழக்கை எந்தவித Pressure-ம் இன்றி கையாள வேண்டும்.

தொழிலதிபர் வீரமணி
தொழிலதிபர் வீரமணி

தற்போது, தொடர்ந்து பல்வேறு ஆதாரங்கள், சாட்சியங்கள் காவல்துறை விசாரணையின் ஊடாக இந்த வழக்கில் சிக்கி உள்ளதாக செய்திகளில் வந்துள்ளன. பெண்கள், சிறுமிகள் தொடர்பான பாலியல் குற்றங்களை அதற்குரிய தன்மையோடு அணுக வேண்டும் என்பதை அதிமுக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

பெண்களுக்கு எதிரான இந்தப் பாலியல் குற்றம் புரிந்தவர்கள் யாராக இருந்தாலும், அது எவ்வளவு “பெரிய இடமாக” இருந்தாலும், இந்தச் சுதந்திர சமூகத்தில் எந்த ஒரு இடமும் அளிக்கக் கூடாது. இந்த வழக்கில் யாருக்குத் தொடர்பு இருந்தாலும், இதனை மறைக்க துணை நின்றது எவ்வளவு பெரிய அதிகாரமாக இருந்தாலும், அனைவர் மீதும் பாரபட்சம் இன்றி அரசு சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

``மாணவர்கள் காலை உணவில் பல்லி; திட்டத்தை விட விளம்பரத்துக்கு கூடுதல் செலவு" - டிடிவி தினகரன் காட்டம்

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் 22-ம் தேதி தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் 1-ம் வகுப... மேலும் பார்க்க

"சபரிமலை: ஐயப்ப சுவாமியின் தங்கக் கிரீடம் மாயமா?"- விளக்கமளித்த தேவஸ்வம் போர்டு!

கேரள உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி, அமிகஸ் கியூரி நீதிபதி கே.டி. சங்கரன் தலைமையில் சபரிமலையில் உள்ள திருவாபரணங்கள் மற்றும் விலைமதிப்பற்ற காணிக்கைப் பொருள்களின் இருப்பு தொடர்பான கணக்கெடுப்பு மற... மேலும் பார்க்க

தேர்தல் ஆணையம்: ``ஸ்டாலின் முதல் மம்தா வரை தோல்வி தற்செயல் அல்ல" - அபிஜித் தீப்கே சொல்லும் கணக்கு

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் அடுத்த 48 மணி நேரத்திற்குள் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும், தவறினால் நாடு தழுவிய அளவில் மிகப்பெரிய போராட்டத்தை நடத்தப்போவதாகவும் காக்ரோஜ் ஜனதா கட்சி ந... மேலும் பார்க்க

'ஜெம்' வீரமணி: `சாந்தி, ரஞ்சன்... ரூ.20 கோடியை மிரட்டி வாங்க என்னை அணுகினர்' - ஜான் பாண்டியன் பேட்டி

'ஜெம்' வீரமணி பாலியல் விவகாரத்தில், அடுத்தடுத்த அதிரடி திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன. இந்த விவகாரம் குறித்து கடந்த 2024-ம் ஆண்டே தமிழக காவல்துறையில் புகார் தெரிவித்ததாகக் கூறி அதிர்ச்சி கிளப்பினார் ... மேலும் பார்க்க

தேர்தல் ஆணையம் விவகாரம்: ``அமிஷ் ஷாவின் நிழலே ஞானேஷ்குமார்" - காரணங்களை அடுக்கிய மாணிக்கம் தாகூர்

தேர்தல் ஆணையம் மீது தற்போது கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தனிச்சையாக செயல்பட்டிருப்பதால் அவர் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துவர... மேலும் பார்க்க

பழனி கோயில் நில மோசடி: இடைத்தரகர் ஜெயபிரகாஷின் கணினிகள் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு!

திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டபாணி மடத்துக்குச் சொந்தமான சுமார் ரூ.100 கோடி மதிப்புள்ள நிலம் போலி ஆவணங்கள் மூலம் மோசடியாகப் பத்திரப்பதிவு செய்யப்பட்ட விவகாரத்தில், முக்கியக் குற்றவாளியான இடைத்தரகர் ஜ... மேலும் பார்க்க