செய்திகள் :

96 Re-release: "இது ஸ்கூல், காலேஜ் முடிச்சிருக்கலாமேனு ஏக்கத்தை உருவாக்குச்சு!" - முருகதாஸ் பேட்டி

post image

எந்த நிலப்பரப்பை மையப்படுத்திய கதை என்றாலும், அதில் குணச்சித்திர நடிகராகத் தன்னுடைய இருப்பைப் பதிவு செய்துவிடுவார் நடிகர் 'ஆடுகளம்' முருகதாஸ்.

விஜய் சேதுபதியின் '96' படத்திற்கெனத் தனி ரசிகர் கூட்டம் எப்போதும் உண்டு. ஒவ்வொரு முறை ரீ-ரிலீஸின்போதும், படத்தையும் அதன் பாடல்களையும் ரசிகர்கள் உருகிக் கொண்டாடுவார்கள்.

கடந்த வெள்ளிக்கிழமை இப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. '96' ரீ-ரிலீஸ் ஆகியிருக்கும் சமயத்தில், அப்பட நினைவுகள் குறித்து நடிகர் 'ஆடுகளம்' முருகதாஸிடம் பேசினோம்.

 '96' படம்
Prem Kumar's 96

நம்மிடையே பேசியவர், " '96’ திரைப்படத்தை வருஷத்திற்கு ஒருமுறை ரீ-ரிலீஸ் செஞ்சாகூட ரசிகர்கள் அதைக் கொண்டாடத் தயாராக இருக்காங்க.

ஏன்னா, ஒவ்வொரு வருஷமும் ஸ்கூல், காலேஜ் முடிச்சுப் பிரிஞ்சு போன நண்பர்கள் எல்லாம் மீண்டும் ஒண்ணு சேர்ந்து அந்தப் படத்தைப் பார்க்க வரும்போது கிடைக்கிற சந்தோஷமே தனி.

10 வருஷத்துக்கு ஒருமுறை ரீ-ரிலீஸ் பண்றதை விட, வருஷத்துக்கு ஒரு முறை ரீ-ரிலீஸ் பண்ணினால்கூட '96' ரசிகர்களுக்குக் கொண்டாட்டமானதாக இருக்கும்.

உண்மையைச் சொல்லப்போனா நான் பள்ளி, கல்லூரிக்குப் போய் அதிகம் படிக்காதவன். இந்தப் படத்தைப் பார்த்தபோது, 'அச்சச்சோ, நாமளும் நல்லா ஸ்கூல், காலேஜ் எல்லாம் முடிச்சிருந்தா இந்த எமோஷனை இன்னும் நல்லா அனுபவிச்சிருக்கலாமே'ன்னு தோணுச்சு.

என்னை மாதிரி படிக்காத பலருக்கும் 'நாமளும் ஸ்கூலுக்குப் போயிருந்தா இந்த மாதிரி ஒரு நட்பு, அழகான அனுபவங்கள் நமக்குக் கிடைச்சிருக்குமே'ங்கிற ஏக்கம் கண்டிப்பா உருவாகியிருக்கும்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பிற்குப் போகும்போது எனக்குப் புது இடத்திற்குப் போற மாதிரியே தெரியல. ஏன்னா விஜய் சேதுபதி எனக்கு கூத்துப் பட்டறை காலத்திலிருந்தே ரொம்ப நெருங்கிய நண்பர்.

அதேபோல நடிகை திரிஷா கூடவும் 'கில்லி' படத்துல நடிச்சிருக்கேன். உதவி இயக்குநர்கள், இயக்குநர் பிரேம்குமார் சார் வரை எல்லோருமே ரொம்ப அன்பா, இயல்பா பழகுனாங்க.

Aadukalam Murugadoss
Aadukalam Murugadoss

ஒரு ரீ-யூனியன் விழாவுக்குப் போனா எப்படி இருக்குமோ, அப்படித்தான் எனக்கு '96' ஷூட்டிங் ஸ்பாட் இருந்தது. விஜய் சேதுபதியை எனக்குக் கிட்டத்தட்ட 15 வருஷமா தெரியும். ரொம்ப யதார்த்தமான, அதேநேரம் தீவிரமான முயற்சிகளைக் கைவிடாத ஒரு மனிதர் அவர்.

24 மணி நேரமும் சினிமா, சினிமான்னு ஓடி அதுலயே வெற்றி கண்டவர். 'முயற்சி செஞ்சா ஜெயிக்கலாம்'ன்ற தத்துவத்தை நேரடியாக நிரூபிச்சுக் காட்டினவர் விஜய் சேதுபதி.

அவர் மேல எனக்கு எப்போதுமே பெரிய அக்கறையும் அன்பும் உண்டு. அவரோட வளர்ச்சி எனக்கு ரொம்பவே சந்தோஷத்தைத் தருது.

அவர் கூட '96' படத்துலதான் முதல்முறையாக இணைந்து நடிச்சேன். இந்தியாவில் இருக்கிற சிறந்த நடிகர்கள்ல அவரும் ஒருவர். கேமராவுக்கு முன்னாடி அவர் எப்படி நடிக்கிறார், ஒரு சின்ன விஷயத்தைக் கூடப் பிரம்மாண்டமாக மெருக்கேற்றி செய்வார்.

96 படம் எத்தனை வருஷம் ஆனாலும் பழைய படமா தெரியாது, எப்பப் பார்த்தாலும் நேத்து ரிலீஸ் ஆன படம் மாதிரியே ஒரு ஃபிரெஷ்ஷான ஃபீல் கொடுக்கும்" என்றவர் அவருடைய அடுத்தப் படங்கள் குறித்து, "தற்போது கார்த்தி சாருடன் 'மார்ஷல்' படத்துல நடிச்சிட்டு இருக்கேன்.

Aadukalam Murugadoss
Aadukalam Murugadoss

இதுதவிர 'இறைமகன்' என்கிற படத்துல நான் கதாநாயகனாக நடிக்கிறேன். இதைத் தாண்டி இன்னும் ரெண்டு மூணு சின்னப் படங்களும் கைவசம் இருக்கு.

சினிமாவுல இப்போ ஒவ்வொரு வாரமும் புதுப் புது படங்கள், புது நடிகர்கள் வந்துட்டே இருக்காங்க. அதனால் நடிகர்கள் எப்போதும் பரபரப்பாக இயங்கிட்டே இருக்க வேண்டியிருக்கு. கூடிய சீக்கிரமே ஒரு பெரிய படத்தோட உங்களை நேரில் சந்திக்கிறேன்!" என உற்சாகத்தோடு முடித்துக் கொண்டார்.

சிலம்பரசன் ரசிகர்களுக்கு தீபாவளிக்கு காத்திருக்கும் விருந்து; ரெடியான வெற்றிமாறன் 'அரசன்' அப்டேட்

சிலம்பரசனின் ரசிகர்களுக்கு இனிப்பான செய்தி இது. இந்த தீபாவளிக்கு சிம்புவின் 'அரசன்' விருந்து ஒன்று காத்திருக்கிறது. வெற்றிமாறன் இயக்கத்தில் சிலம்பரசன் இப்போது 'அரசன்' படத்தில் நடித்து வருகிறார். இந்த ... மேலும் பார்க்க

Jailer 2: 'அதில் பெரிய ஈடுபாடு இல்லை'; 'பாட்ஷா' டு 'பேட்ட' - ரஜினியின் சீக்குவல் திட்டங்கள்!

ரஜினிகாந்த் நடித்திருக்கும் 'ஜெயிலர் 2' திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த வாரம் வெளியாகிறது. 'ஜெயிலர்' முதல் பாகம் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றிருந்தது. அந்த வரவேற்பைத் தொடர்... மேலும் பார்க்க

"கலை, வாழ்வியல் பற்றி பேசினோம்; அரசியல் பேசவில்லை"- ரஜினியுடான சந்திப்பு குறித்து வைரமுத்து

ரஜினிகாந்தின் `ஜெயிலர் 2' படம் வரும் அக்டோபர் 15ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் கவிஞர் வைரமுத்து ரஜினிகாந்தை நேரில் சந்திருக்கிறார். இந்தச் சந்திப்பு குறித்து தனது எக்ஸ் தளத்திலும் பகிர்ந்திருக்கிறார். ... மேலும் பார்க்க

Jailer 2 Exclusive: "ரஜினி சார் பார்க்க சொன்ன Web Series அதான்" - மிர்னா மேனன் பகிரும் தகவல்

'ஜெயிலர்' படத்தின் முதல் பாகத்தில் நடிகை மிர்னா மேனன் கவனம் ஈர்த்து நல்ல பாராட்டுகளையும் பெற்றிருந்தார். இப்போது 'ஜெயிலர் 2' ரிலீஸுக்காகவும் அவர் உற்சாகமாக இருக்கிறார். இந்த நேரத்தில் 'ஜெயிலர் 2'வுக்க... மேலும் பார்க்க

Kushboo: "உங்க வீட்டுப் பெண்களின் புகைப்படங்களை AI மூலம் தவறாக மாற்றிப் பாருங்கள்" - குஷ்பு காட்டம்

நடிகை குஷ்பூ நேற்றைய தினம், தென்னிந்தியத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டார். குஷ்பு அந்தக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், ஏ.... மேலும் பார்க்க

"இந்தக் கார்த்திக் சுப்புராஜைத்தான் தேடிக்கொண்டிருந்தேன்" - டோரதி படக்குழுவைப் பாராட்டிய ரஜினிகாந்த்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான 'டோரதி' படத்தைப் பார்த்த நடிகர் ரஜினிகாந்த், படக்குழுவை வரவழைத்து, தனது வாழ்த்தைத் தெரிவித்திருக்கிறார். Dorothy | டோரதி ரிஷிகாந்த், சனந்த், கீர்த்தி சுரேஷ் ஆ... மேலும் பார்க்க