செய்திகள் :

'இனி சட்ட ஒழுங்கு குறித்து RTI-ல் கேட்க முடியாது' - மாற்றங்கள் ஏற்படுத்திய தமிழ்நாடு அரசு

post image

சமீப காலமாக, தமிழ்நாட்டில் குற்றச் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு சீர்கெட்டுள்ளது என்று எதிர்க்கட்சிகள் தவெக அரசைக் கடுமையாகச் சாடி வருகின்றன.

இந்த நேரத்தில் அரசு, சட்ட ஒழுங்கு குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் (RTI) மாற்றம் ஒன்றைக் கொண்டு வந்துள்ளது.

அது...

தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005-ன் கீழ், தமிழ்நாடு அரசின் உளவு மற்றும் பாதுகாப்பு அமைப்பான ‘பொது (சட்டம் மற்றும் ஒழுங்கு)த் துறை’ குறித்து கேட்கப்படும் கேள்விகளுக்கு இனி பதில் அளிக்கப்படாது.

சட்டம்-ஒழுங்கு
சட்டம்-ஒழுங்கு

இந்த அறிவிப்பின் படி, எது குறித்த கேள்விகள் இனி கேட்க முடியாது?

சாதி மற்றும் சமூக மோதல்கள்,

காவல்துறை துப்பாக்கிச் சூடு குறித்து PSO 150(3) (பழைய எண் 144(3))-இன் கீழ் நடத்தப்படும் விசாரணை அறிக்கைகள் மற்றும் காவல் துறை காவல்,

காவல் துறை சித்ரவதை மற்றும் காவலில் உள்ள கைதிகளின் மரணம் குறித்து PSO 151 (பழைய எண் 145)-இன் கீழ் நடத்தப்படும் விசாரணை அறிக்கைகளை ஆய்வு செய்தல்,

மாணவர்கள், விவசாயத் தொழிலாளர்கள், அரசியல் கட்சிகள் போன்றவற்றின் போராட்டங்கள்,

அரசியல் காரணங்கள், சமூக/சாதி மோதல்கள், அரசியல் போராட்டங்கள், மாணவர் போராட்டங்கள் போன்றவற்றின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெறுவதற்கான கோரிக்கைகளைக் கையாளுதல்,

அவதூறான கட்டுரைகள், செய்திப் பொருட்கள், உரைகள் முதலானவற்றிற்காக வழக்குத் தொடர அனுமதி அளிப்பது தொடர்பான விவகாரங்களைக் கையாளுதல் உள்ளிட்டவை ஆகும்.

RTI-ல் சட்ட ஒழுங்கு நீக்கம்: தமிழ்நாட்டை ‘போலீஸ் ஸ்டேட்டாக்க’ முயற்சி - தவெக அரசுக்கு சு.வெ கண்டனம்!

தவெக அரசு தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தெரிந்துகொள்ளவதை தற்போது நீக்கியுள்ளது.இந்த மாற்றத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன் தனது எக்ஸ் பக்கத்தில் எதிர்... மேலும் பார்க்க

"உலகில் உள்ள தெற்கு நாடுகளில் '4F'-ல் இக்கட்டான சூழல்" - ஜ.நாவில் ஜெய்சங்கர் பேச்சு

அமெரிக்காவின் நியூயார்க்கில் ஐக்கிய நாடுகளின் பொதுக்கூட்டம் நடந்து வருகிறது.அந்தக் கூட்டத்தில் ஐ.நா.வின் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் தொடர்ந்து பேசி வருகின்றனர்.நேற்று இந்தியா சார்பாக இந்தியாவின் வெ... மேலும் பார்க்க

கரூர் துயரச் சம்பவம்: "மனதில் ஆறாத ரணமாக, தீராத வலியாக, வேதனையான நிகழ்வு..!" - முதல்வர்‌ விஜய் பதிவு

இன்றோடு கரூர் துயரச் சம்பவம் நடந்து ஓராண்டு ஆகிறது.தமிழ்நாட்டின் தற்போதைய முதலமைச்சர் விஜய் கரூர் பிரசாரத்திற்குச் சென்றிருந்தபோது, அங்கே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர்.அந்தச் சம்பவத்தின... மேலும் பார்க்க

தேர்தல் ஆணையத்தில் நேற்று நடந்த கூட்டம்: 3 ஆணையர்களும் 'பிரசன்ட்'; ஆனால், எந்தப் பதிலும் இல்லை!

இந்தியத் தேர்தல் ஆணையத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கும், தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி இடையே இருந்த கருத்து வேறுபாடு கடந்த வாரம் வெட்டவெளிச்சமானது.இரு தேர்தல... மேலும் பார்க்க

”ரெண்டு பேரும் ஒண்ணா வேலை செய்யுங்க" - வாழ்த்திய என்.ஆனந்த்; தவெக-வில் தஞ்சை அதிமுக புள்ளி

அதிமுக-வின் தஞ்சாவூர் மாநகரச் செயலாளராக இருந்தவர் என்.எஸ்.சரவணன். சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு உட்கட்சியில் எழுந்த சில பிரச்னைகளால் மாநகரச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். கடந்த சட்டமன்றத்... மேலும் பார்க்க

கேரள திருவோணம் பம்பர் லாட்டரி குலுக்கல்: கண்ணூரில் விற்ற லாட்டரிக்கு ரூ.30 கோடி பம்பர் பரிசு!

கேரள அரசின் லாட்டரித்துறை சார்பில் சித்திரை விஷூ, ஆயுதபூஜை, திருவோணம் உள்ளிட்ட பண்டிகைகளுக்குபம்பர் பரிசுகளுடன் கூடிய லாட்டரி வெளியிட்டு விற்பனை செய்வது வழக்கம். கடந்தமுறை வரை ஓணம் பண்டிகைக்கு 25 கோடி... மேலும் பார்க்க