செய்திகள் :

Doctor Vikatan: டெங்கு: குணமான பிறகும் தொடரும் உடல் சோர்வு... சரியாகுமா, இப்படியேதான் தொடருமா?!

post image

Doctor Vikatan: எனக்கு கடந்த மாதம் டெங்கு பாதித்தது. ஒரு மாதம் சிகிச்சையில் இருந்து மீண்டு வந்தேன்.  ஆனாலும் எனக்கு உடல்சோர்வு குறையவே இல்லை.  இது இப்படியேதான் தொடருமா... டெங்குவின் தீவிரம் குறைந்துவிட்ட பிறகும் தொடரும் இந்த உடல்சோர்வை எப்படிப் புரிந்துகொள்வது... இதிலிருந்து மீளவே வாய்ப்பில்லையா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் குமாரசாமி

தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் குமாரசாமி


உங்களுக்கு ஏற்பட்டிருப்பது டெங்கு காய்ச்சலுக்குப் பிந்தைய சோர்வு நோய்க்குறி (Post-Dengue Fatigue Syndrome) என அழைக்கப்படுகிறது. 
டெங்கு காய்ச்சலிலிருந்து குணமடைந்தவர்களில் சுமார் 15% முதல் 20% பேருக்கு இந்த பாதிப்பு ஏற்படுகிறது.

காய்ச்சல் குறைந்த பிறகும் நீண்ட நாள்களுக்குக் கடும் உடல் சோர்வு நீடிக்கும். டெங்கு வைரஸ் தொற்றின் காரணமாக, உடலின் அடிப்படை வளர்சிதை மாற்ற வீதம் (Basal Metabolic Rate - BMR) தற்காலிகமாக அதிகரிப்பதே இந்த அதிகப்படியான சோர்வுக்கு முதன்மைக் காரணமாகும். இது தற்காலிகமான பிரச்னைதான். எனவே, தொடர்கதையாகிவிடுமோ என பயப்படத் தேவையில்லை.

டெங்கு பாதிப்பிலிருந்து மீண்ட நோயாளிக்கு போதுமான அளவு தூக்கமும், உடல் மற்றும் மன அளவிலான ஓய்வும் மிக மிக அவசியமாகும்.
 உடலை எப்போதும் நீர்ச்சத்துடன் வைத்துக்கொள்ள அதிகளவு தண்ணீர், இளநீர், பழச்சாறுகள் மற்றும் கஞ்சி போன்ற திரவ உணவுகளைப் பருக வேண்டும்.

வழக்கமான ரத்தப் பரிசோதனைகள் மூலம் ரத்த அணுக்களின் எண்ணிக்கை, ஹீமோகுளோபின் மற்றும் ரத்தத் தட்டணுக்களின் (Platelets) அளவு சீராக உள்ளதா என்பதைக் கண்காணிக்க வேண்டும்.

வழக்கமான ரத்தப் பரிசோதனைகள் மூலம் ரத்த அணுக்களின் எண்ணிக்கை, ஹீமோகுளோபின் மற்றும் ரத்தத் தட்டணுக்களின் (Platelets) அளவு சீராக உள்ளதா என்பதைக் கண்காணிக்க வேண்டும். முழுமையாக குணமடையும் வரை உடலை வருத்தும் அல்லது அதிக ஆற்றல் தேவைப்படும் கடினமான வேலைகளைச் செய்யக் கூடாது. இந்தச் சோர்வு நிலையானது காலப்போக்கில் தானாகவே சரியாகிவிடும். இதற்கெனத் தனியாக பெரிய மருத்துவச் சிகிச்சைகள் எதுவும் தேவையில்லை.

டாக்டர் குமாரசாமி:

சென்னை, விஹெச்எஸ் மருத்துவமனையில் தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவராக இருக்கிறார்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    

Doctor Vikatan: டெங்கு பாதிப்பு: எந்தெந்த உணவுகள் நோய் எதிர்ப்பு சக்தியை மீட்டுத்தரும்?

Doctor Vikatan: டெங்கு நோயாளிகள் கட்டாயம் சாப்பிட வேண்டிய மற்றும் தவிர்க்க வேண்டிய உணவுகள் எவை... தட்டணுக்களை (Platelets) விரைவாக அதிகரிக்க உதவும் உணவுகள் உண்மையில் இருக்கின்றனவா... பழங்கள் சாப்பிடலாம... மேலும் பார்க்க

Doctor Vikatan: டெங்கு காய்ச்சல்... மீண்டு வரும் நிலையிலும் பிரச்னைகள் தொடர்வது ஏன்?

Doctor Vikatan: டெங்கு காய்ச்சல் பரவிக் கொண்டிருக்கும் நிலையில் அதிலிருந்து மீள்வதே பெரும் சவாலாக இருக்கிறது. இந்நிலையில், சிலர், நோயிலிருந்து குணமான பிறகும் அதன் பின் விளைவுகளில் இருந்து முழுமையாக மீ... மேலும் பார்க்க

``பாக்கெட் உணவுகளுக்கு இனி சிவப்பு எச்சரிக்கை” -FSSAI முடிவு; ஏன் தெரியுமா?

கடையில் பாக்கெட் உணவு வாங்கும்போது, அதில் சர்க்கரை, கொழுப்பு, உப்பு உள்ளிட்ட சத்துக்கள் எவ்வளவு இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள, பாக்கெட்டின் பின்பக்கத்தில் இருக்கும் Nutrition தகவல்களைத் தேடிப் பார... மேலும் பார்க்க

சிருங்கேரி சாரதா மருத்துவமனை 3ஆம் ஆண்டு விழா - 65% பேருக்கு இலவசக் காப்பீட்டில் புற்றுநோய் சிகிச்சை!

சென்னை கெளரிவாக்கத்தில் அமைந்துள்ள சிருங்கேரி சாரதா மருத்துவமனை உயர்தர புற்றுநோய் சிகிச்சையை சிறந்த முறையில் இலாபநோக்கமின்றி வழங்கி வருகிறது. இந்த மருத்துவமனையின் மூன்றாவது ஆண்டு விழா வெள்ளிக்கிழமை (1... மேலும் பார்க்க

Doctor Vikatan: டெங்கு காய்ச்சல்... இந்த அறிகுறிகள் ஏற்பட்டால் எமர்ஜென்சி சிகிச்சை அவசியம்

Doctor Vikatan:குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு டெங்கு பாதிக்கும் போது அதிக கவனிப்பு தேவையா... எந்த மாதிரி அறிகுறிகள் ஏற்பட்டால், எமர்ஜென்சி சிகிச்சை அளிக்க வேண்டியிருக்கும்?பதில் சொல்கிறார், சென்னை... மேலும் பார்க்க

Doctor Vikatan: டெங்கு காய்ச்சல் பாதித்தால் கட்டாயம் மருத்துவமனையில் அட்மிட் செய்ய வேண்டுமா?

Doctor Vikatan: டெங்கு பாதித்த நண்பர்கள் சிலர், மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டு, சிகிச்சை பெற்று வீட்டுக்குத் திரும்பினார்கள். டெங்கு பாதித்தாலே மருத்துவமனையில் அட்மிட் செய்துதான் சிகிச்சை எடுக்க... மேலும் பார்க்க