செய்திகள் :

"என்னை விட நல்ல கதைகள் வைத்திருக்கும் அவர்களுக்கு ஏதாவது செய்யுங்கள்" - 'மொத ராத்திரி' இயக்குநர்

post image

அறி​முக இயக்​குநர் ராஜா கருப்​ப​சாமி இயக்​கத்​தில் ரிஷி​காந்த், அனிஷ்மா அனில்​கு​மார், சேத்​தன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியிருந்த படம் ‘மொத ராத்​திரி’.

மைத்ரி மூவி மேக்​கர்ஸ் தயாரித்திருந்த இப்​படம் ஆக.21-ம் தேதி வெளியாகி வரவேற்​பைப் பெற்​றிருத்த நிலையில் ஓடிடி- யிலும் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

'மொத ராத்திரி'
'மொத ராத்திரி'

திரைத்துறையைச் சேர்ந்த பலரும் இப்படத்தைப் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் 'மொத ராத்திரி' படத்திற்கு விருது வழங்கப்பட்டிருக்கிறது.

விருதைப் பெற்ற பிறகு பேசிய இயக்குநர் ராஜ கருப்புசாமி, "இந்த மேடையில் ஒரே ஒரு கோரிக்கையை வைக்கிறேன். எனக்கு தெரிந்து என்னுடைய நண்பர்களே 10 கதைகள் வைத்திருக்கிறார்கள். எப்படியாவது நல்ல படம் பண்ண வேண்டும் என்று காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

ராஜா கருப்பசாமி
ராஜா கருப்பசாமி

என்னை விட நல்ல கதைகள் எல்லாம் வைத்திருக்கக் கூடிய முதல் பட வாய்ப்பு தேடும் உதவி இயக்குநர்களுக்கு ஏதாவது முடிந்தால் செய்யுங்கள்" என்று அங்கிருந்த தயாரிப்பாளர்களிடம் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

'நான் தமிழ் ஈழப்பெண்'- நடிகை மைத்ரேயி ராமகிருஷ்ணன் பேச்சுக்கு எழுந்த எதிர்ப்பு! பின்னணி என்ன?

நெட்பிளிக்ஸில் 2020 ஆம் ஆண்டு வெளியான 'Never Have I Ever' தொடர் மூலம் புகழ்பெற்றவர் மைத்ரேயி ராமகிருஷ்ணன். கன்னடாவில் பிறந்து வளர்ந்த மைத்ரேயி ராமகிருஷ்ணன். தமிழ் பின்னணியைக் கொண்டவர். இலங்கை இவரது பூ... மேலும் பார்க்க

Dorothy: ``கார்த்திக் சுப்புராஜ் மீது பொறாமையாக இருக்கிறது" - இயக்குநர் மணிரத்னம்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சனந்த், ரிஷிகாந்த், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் நேற்று (செப்டம்பர் 25-ம் தேதி) வெளியான படம் டோரதி. இந்தப் படத்துக்கு கலவையான விமர்சனங்கள் குவிந்து வருகின்... மேலும் பார்க்க

Sigma: ``ஜேசன் சஞ்சய் அவருடைய அப்பாவைப் போலவே இருக்கிறார்" - நடிகர் சிரஞ்சீவி

தவெக தலைவரும், நடிகருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம் ‘சிக்மா’. லைகா புரோடக்ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்கும் இத்திரைப்படத்தில் சந்தீப் கிஷன் மற்றும் ஃபரியா அப்து... மேலும் பார்க்க

D56: "தனுஷுடன் இத்தனை ஆண்டுகள் இணைந்து நடிக்காதது ஏன்?" - வடிவேலு விளக்கம்

'லப்பர் பந்து' திரைப்படத்தின் இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், தனுஷ் நடிக்கும் தனது 56-வது திரைப்படத்தின் பூஜை இன்று மதுரையில் நடைபெற்றது. இதில் தனுஷுடன் இணைந்து நடிகர் வடிவேலுவும் நடிக்கிறா... மேலும் பார்க்க

D56: "பல சவால்கள், தடைகளுக்குப் பிறகு படத்தைத் தொடங்கியிருக்கிறோம்" - எஸ்.ஜே.சூர்யா

'ஓம்' படத்தைத் தொடர்ந்து ‘லப்பர் பந்து’ இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் தனது 56-வது படத்தில் நடிகர் தனுஷ் நடிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. இப்படத்தில் நடிகர்கள் வடிவேலு, எஸ்.ஜே. சூர்யா, ப... மேலும் பார்க்க

Meesaya Murukku 2 Review: கமர்ஷியல் பார்முலாவில் காணாமல்போகும் இசை அரசியல்! படமாக எப்படி?

சென்னையில் வசித்து வரும் `ஜென் - சி' இளைஞரான டிஜே ஜீவாவிற்கு (ஹிப் ஹாப் தமிழா ஆதி) இசைத்துறையில் சாதிக்க வேண்டும் எனப் பேரார்வம். சுயாதீன இசைக்கலைஞராக வேண்டும் என்கிற இவரின் கனவுக்கு நெப்போடிசம், சுயா... மேலும் பார்க்க