செய்திகள் :

பள்ளி மாணவிக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தல்; கணித ஆசிரியர் போக்சோ-வில் கைது!

post image

அரசுப்பள்ளியில் 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய கணித ஆசிரியர் கைது செய்யப்பட்ட சம்பவம் தருமபுரி மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போக்சோ வழக்கு

பாப்பாரப்பட்டி போலீஸ் காலனியை சேர்ந்த தங்கவேல் (48), கணித ஆசிரியராக பணி புரிந்து வருகிறார்.

10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவியருக்கான சிறப்பு வகுப்புக்கு வந்த மாணவி ஒருவரை வாழ்த்தி பரிசுப்பொருள் கொடுப்பதுபோல் அடிக்கடி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டும், வாட்ஸ் ஆப்பில் ஆபாச பதிவுகளை அனுப்புவது போன்ற செயலிலும் ஈடுபட்டு வந்துள்ளார்.

நாளாக நாளாக அவருடைய பாலியல் துன்புறுத்தல் அதிகரித்து வந்துள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்த மாணவி, தனக்கு ஆசிரியரால் நடந்துவரும் பாலியல் துன்புறுத்தலை பெற்றோரிடம் தெரிவிக்க, அதிர்ச்சி அடைந்தவர்கள் பள்ளி தலைமையாசிரியரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.

தங்கவேல்

அதில் நடவடிக்கை எடுக்காத நிலையில் மாணவியின் பெற்றோரும் உறவினர்களும் ஆசிரியரை கைது செய்ய வலியுறுத்தி பள்ளியை முற்றுகையிட வந்துள்ளனர்.

இந்நிலையில் பென்னாகரம் அனைத்து மகளிர் போலீசார் பாதிக்கப்பட்ட மாணவியிடம் புகாரைப் பெற்று, விசாரணை நடத்தி புகாரில் முகாந்திரம் உள்ளது உறுதியானவுடன் கணித ஆசிரியர் தங்கவேல் மீது போக்சோ சட்டப்பிரிவில் வழக்கு பதிவு செய்து தர்மபுரி மாவட்ட சிறையில் அடைத்தனர்.

சிலிண்டரை மாற்றித்தர சொன்ன பாட்டி; கண்ணில் மிளகாய் பொடித் தூவி இரண்டரை பவுன் செயினை பறித்த நபர்!

ஈரோடு மாவட்டம் புளியம்பட்டி அருகில் உள்ள காயிதே மில்லத் தெருவில் வசித்து வருகிறார் 80 வயதான முத்தம்மாள். கணவர் முத்துசாமி உயிரிழந்த நிலையில், முத்தம்மாள் தனியாகவே வாழ்ந்து வருகிறார். வீட்டில் சமையலுக்... மேலும் பார்க்க

சிங்கப்பூர் துறைமுகத்தில் விபத்து; பலியான ராணிப்பேட்டை இளைஞரின் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்!

ராணிப்பேட்டை மாவட்டம், அம்மூர் பேரூராட்சிக்கு உட்பட்ட நரசிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மேஸ்திரி மணி. இவரது மகன் வினோத் (வயது 33). இவருக்குத் திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலை... மேலும் பார்க்க

`கிரிப்டோ’ முதலீடு; பேராசையால் ஏமாற்றமடைந்த இன்ஜினீயர்; தூண்டில் போட்ட மோசடிப் பேர்வழி கைது!

வேலூர் மாவட்டம், விருப்பாட்சிபுரம் பலவன்சாத்துக்குப்பத்தைச் சேர்ந்தவர் பிரதீப்குமார் (வயது 29). பெங்களூருவில் உள்ள தனியார் கம்பெனியில் இன்ஜினீயராக வேலைச் செய்து வரும் பிரதீப்குமாருக்கு வாட்ஸ்-அப் மூலம... மேலும் பார்க்க

பீகார்: சுற்றுலா மையத்தில் பெண்ணைக் காலணியால் தாக்கிய கும்பல்; அதிர்ச்சி வீடியோ... போலீஸ் விசாரணை!

பீகாரில் அடிக்கடி பெண்கள் மீது தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. சமீபத்தில் அது போன்ற இரண்டு சம்பவங்கள் நடந்தன. தற்போது மீண்டும் அது போன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது. பீகாரின் சுற்றுலா மையம... மேலும் பார்க்க

`கொலைக்காக வருந்தவில்லை'ரூ.40 லட்சம் கடனால் பணக்கார தந்தையை கொன்றுவிட்டு மனைவி மீது பழியை போட்ட மகன்

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள இந்திரா நகரில் தொழிலதிபர் வினீத் கடந்த 5ம் தேதி இரவு வீட்டில் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் குத்திக்கொலை செய்யப்பட்டார். இக்கொலை தொடர்பாக வினீத் மருமகள் ஷெலு, ம... மேலும் பார்க்க

`வலியால் கதறினேன்; ஆனால் அவர்கள் நிறுத்தவே இல்லை' - பிறந்த நாளில் பெண்ணுக்கு பூங்காவில் நடந்த கொடுமை

டெல்லியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கல்காஜி மந்திருக்கு 17 வயது மைனர் பெண் சென்று சாமிகும்பிட்டுவிட்டு தனது ஆண் நண்பருடன் அருகில் இருந்த பூங்காவில் இருந்தார். அந்நேரம் அங்கு வந்த 3 பேர் தங்களை போல... மேலும் பார்க்க