செய்திகள் :

`கொலைக்காக வருந்தவில்லை'ரூ.40 லட்சம் கடனால் பணக்கார தந்தையை கொன்றுவிட்டு மனைவி மீது பழியை போட்ட மகன்

post image

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள இந்திரா நகரில் தொழிலதிபர் வினீத் கடந்த 5ம் தேதி இரவு வீட்டில் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் குத்திக்கொலை செய்யப்பட்டார். இக்கொலை தொடர்பாக வினீத் மருமகள் ஷெலு, முன்னாள் வீட்டு வேலைக்காரர் விஷால் மற்றும் அவரது கூட்டாளி ராஜ்கிஷோர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளது.

கைது செய்யப்பட்ட நபர்களிடம் நடத்திய விசாரணையில் விஷால் தான் புதிதாக வாங்கிய சிம்கார்டு மூலம் கொலை செய்யப்பட்ட வினீத் மகன் சுப்ரத்திற்கு 6 முறை போன் செய்திருந்தது தெரிய வந்தது.

பல பெண்களுடன் தொடர்பு

இதையடுத்து சுப்ரத் கடந்த 23ம் தேதி கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில், தனது தந்தைக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதால், அவர் வேறு பெண்ணுடன் வாழ ஆரம்பித்து, தனது சொத்துக்கள் அனைத்தையும் அவள் பெயருக்கு மாற்றிவிடுவார் என்று பயந்து கொலைக்கு சதி செய்ததாக போலீசாரிடம் கூறினார்.

அதோடு தந்தையின் இச்செயலால் தனது தாயார் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் சுப்ரத் தெரிவித்துள்ளார். மேலும் கொலையை தற்கொலையாக மாற்ற திட்டமிட்டு இருந்ததாகவும், ஆனால் கடைசி நேரத்தில் திட்டத்தில் மாற்றம் ஏற்பட்டதாகவும் போலீஸில் தெரிவித்துள்ளார்.

சுப்ரத்தின் தந்தை ஒவ்வொரு மாதமும் அவரது செலவுகளுக்காக சுமார் 40,000 ரூபாய் கொடுத்ததாகவும், அதே நேரத்தில் சுப்ரத் ஒரு மாதத்திற்கு சுமார் 55,000 ரூபாய் கடன் தவணை செலுத்தினார் என்று போலீஸில் தெரிவித்துள்ளார்.

சூதாட்டத்தால் 40 லட்சம் கடன்

இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில்,''சுப்ரத்திற்கு சூதாடும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் அவருக்கு ரூ.40 லட்சம் வரை கடன் ஏற்பட்டுள்ளது. இக்கடனை அடைக்க முடியாமல் இருந்துள்ளார். மற்றொரு பக்கம் சுப்ரத் மற்றும் அவரது மனைவிக்கு வினீத் கடுமையான நிதி கட்டுப்பாடுகளை விதித்து இருந்தார். இதனால்தான் சுப்ரத் தனது தந்தையை கொலை செய்ய முடிவு செய்து முன்னாள் வீட்டு வேலைக்காரர்களை அழைத்து ரூ.6 லட்சம் கொடுப்பதாக கூறி தனது தந்தையை கொலை செய்யும்படி தெரிவித்துள்ளார்.

அதோடு கொலை செய்துவிட்டு பிடிபட்டுக்கொண்டால் தனது மனைவியின் பெயரை சொல்லி அவரை சிக்க வைத்துவிடும்படி கூறி இருந்தார். ஷெலுவிடம் விசாரித்தபோது தனது கணவரைப் பாதுகாப்பதற்காக தான் சிக்கிக்கொண்டதாக போலீஸிடம் கூறினார்.


`கொலை செய்ததற்காக வருந்தவில்லை'

சுப்ரத்திடம் போலீஸார் விசாரித்தபோது தனது தந்தையை கொலை செய்ததற்காக தான் வருத்தப்படவில்லை என்றும், அதேசமயம் கத்தியால் குத்திக்கொலை செய்ததுதான் வருத்தமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இதில் தனது மனைவியை தேவையில்லாமல் சிக்க வைத்துவிட்டதாகவும் சுப்ரத் போலீஸாரிடம் தெரிவித்துள்ளார்.

கான்பூர் போலீஸ் கமிஷனர் ரகுபீர் லால் இது குறித்து கூறுகையில், அழைப்பு விவர பதிவுகள், சிசிடிவி காட்சிகள், சாட்டிங் பதிவுகள் மற்றும் பிற அறிவியல் ஆதாரங்களின் அடிப்படையில் விசாரணையில், சுப்ரத் தனது தந்தையை கொலை செய்ய விஷால் மற்றும் ராஜ் கிஷோர் ஆகியோருடன் சதி செய்ததது தெரிய வந்தது. மேலும் விசாரணையில் ஷெலுவுக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை. அவரை விடுவிக்க நீதிமன்றத்திற்கு செல்லும் முன் அவருக்கு இதில் இருக்கும் பங்கு குறித்து மீண்டும் விசாரிக்க முடிவு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நிதி நெருக்கடியால் சுப்ரத், சொந்த கடையில் இருந்து மருந்துகளை எடுத்து விஷால் மூலம் விற்று பணம் திரட்டத் தொடங்கினார். வினீத் அவரைப் பலமுறை பிடித்து, அடிக்கடி ஊழியர்கள் முன்னிலையில் திட்டினார்," என்றும் அவர் கூறினார்.

`வலியால் கதறினேன்; ஆனால் அவர்கள் நிறுத்தவே இல்லை' - பிறந்த நாளில் பெண்ணுக்கு பூங்காவில் நடந்த கொடுமை

டெல்லியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கல்காஜி மந்திருக்கு 17 வயது மைனர் பெண் சென்று சாமிகும்பிட்டுவிட்டு தனது ஆண் நண்பருடன் அருகில் இருந்த பூங்காவில் இருந்தார். அந்நேரம் அங்கு வந்த 3 பேர் தங்களை போல... மேலும் பார்க்க

புதுச்சேரி போலி மருந்து மோசடி: முக்கிய குற்றவாளியின் ஜாமீன் ரத்து; நீதிமன்ற உத்தரவின் பின்னணி என்ன?

உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் மத்திய தரக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் கடந்த ஆண்டு நடத்திய சோதனையில் போலி மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதுதொடர்பான விசாரணையில், புதுச்சேரி ரெட்டியார்பாளையத்தில் வசித்த... மேலும் பார்க்க

திருச்சி ஆட்டோ மெக்கானிக் கொலை; மது போதையில் தம்பியே அண்ணனைக் கொலை செய்த கொடூரம்

திருச்சி மாநகரம், தென்னூர் வெள்ளாள தெருவைச் சேர்ந்தவர் முஹம்மது பாரூக் (வயது: 32). இவர், ஆட்டோ மெக்கானிக்காகப் பணியாற்றி வருகிறார். இவருக்கு அசார் (வயது: 28) என்கிற சகோதரர் உள்ளார். அவர், மீன் கடையில்... மேலும் பார்க்க

திருமணம் செய்ய மறுத்த காதலன்; வீடியோ காலில் பேசிக்கொண்டிருக்கும்போது காதலி எடுத்த விபரீத முடிவு

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த நிஷா என்ற பெண் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அவர் தனது தோழி ஒருவருடன் தங்கி இருந்தார். அப்பெண் அமராவதியைச் சேர்ந்த 34 வயது வாலிபரைக் கடந்த ப... மேலும் பார்க்க

வேறொருவருடன் நெருக்கம்; விஷம் கொடுத்து மாணவியை கொன்று `ஸ்கெட்ச்' போட்ட பேராசிரியர் சிக்கியது எப்படி?

தெலங்கானாவில் உள்ள நஸ்பூர் என்ற இடத்தில் இருக்கும் பால்டெக்னிக்கில் பேராசிரியராக இருப்பவர் நவீன் குமார். இவர் பணியாற்றிய பாலிடெக்னிக்கில் தந்திரா (20) என்ற மாணவி படித்து வந்தார். அவரும் நவீன் குமாரும்... மேலும் பார்க்க

ரூ.10,000 சம்பள பாக்கி; ரூ.150-க்கு பெட்ரோல் வாங்கி, ரூ.24 கோடி மதிப்பிலான பொருள்களை எரித்த தொழிலாளி

குஜராத்தில் உள்ள சூரத்தில் ஷ்யாம் சங்கினி ஜவுளி சந்தை என்கிற சந்தை இருக்கிறது.அங்கே உள்ள 639-ம் எண் கடையில், கடந்த ஏப்ரல் மாதம் வினோத் பண்டிட் சாவ்லே கணக்காளராகச் சேர்ந்துள்ளார். ஆனால், அந்த வேலை அவரு... மேலும் பார்க்க