செய்திகள் :

மதுரை வரும் விஜய் : தகர சீட்டுகளால் மறைக்கப்பட்ட கழிவுநீர் கால்வாய்; பின் வாபஸ்! என்ன நடந்தது?

post image

தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்தை தொடங்கி வைப்பதற்காக வருகிற செப்டம்பர் 28ஆம் தேதி மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு முதலமைச்சர் விஜய் வருகை தர இருக்கிறார். முதல்வர் வருகையையொட்டி மதுரை ராஜாஜி மருத்துவமனை முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் மருத்துமனை முன்பு சாலைகள் அமைக்கும் பணிகளும், மருத்துவமனைக்குள் கற்கள் பதிக்கும் பணிகளும் நடைபெற்று வருவதோடு சுத்தப்படுத்தும் பணிகளும் நடைப்பெற்று வருகிறது. இந்த நிலையில் தற்போது ராஜாஜி மருத்துவமனை முன்பு கழிவு நீர் கால்வாயை தகர சீட்டுகள் கொண்டு மறைக்கும் பணிகள் நடைப்பெற்றது. இந்த விவகாரம் ஊடகங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதை தொடர்ந்து மதுரை மாவட்ட ஆட்சியர் தகரசீட்டுகள் அமைக்கும் பணியை நிறுத்தி அவற்றை அப்புறப்படுத்துமாறு உத்தரவிட்டார். இதனால் தகரசீட்டுகள் அமைக்கும் பணிகளை நிறுத்தி அதை அப்புறப்படுத்தும் பணிகளில் நடைப்பெற்று வருகிறது.

மதுரை அரசு ராஜாஜி மருத்துமனை

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு இதே போல முன்னாள் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மதுரைக்கு வந்திருந்த போது திறந்த வெளியில் இருந்த பந்தல்குடி கழிவுநீர் கால்வாயை பச்சை துணி மூலம் மறைத்து கட்டபட்டது. அந்த விவகாரம் பூதாகரமாகி  உடனே கழிவுநீர் கால்வாயை சுற்றிலும் சுற்று சுவர் கட்டுவதற்கு உத்தரவிட்டது அப்போது அரசு. இதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது. தற்போது மீண்டும் அதே போல கழிவு நீர் கால்வாயை மறைக்கும் பணிகளை செய்து விட்டு மீண்டும் அதை திரும்ப பெற்றுள்ளது பேசுபொருளாகியுள்ளது.

``இரட்டை இலையும், விசில் சின்னமும் ஒன்று' என பேசிவதா? TVK அங்கீகாரம் Suspend?' - அதிமுக மூவ்

மதுராந்தகத்தில் சில தினங்களுக்கு முன்பு பிரச்சாரம் செய்தபோது தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா இரட்டை இலையும், விசில் சின்னமும் ஒன்றுதான் என்று பேசியிருந்தார். இந்நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் தமிழ்... மேலும் பார்க்க

'அண்ணனா இருப்பேன் - அரணா இருப்பேன்னு வாய்கிழிய பேசிய முதல்வர் எங்கே?' - உதயநிதி காட்டம்

சென்னை வண்டலூர் அருகே அரசுப் பள்ளி வளாகத்திலிருந்து பட்டப்பகலில் மாணவி ஒருவர் மர்ம நபர்களால் கடத்திச் செல்லப்பட்டு, கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் க... மேலும் பார்க்க

ஜெம் வீரமணி: 'ஜூலை 5... அழைக்கப்பட்ட 3 அமைச்சர்கள் + சபாநாயகர்!' - சர்ச்சையாகும் விழாவின் பின்னணி!

பெண் குழந்தைகளை வன்கொடுமை செய்த வழக்கில் கைதாகியிருக்கும் ஜெம் வீரமணி கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் தவெக அமைச்சர்கள் லோகேஸ் தனபாலும், வெங்கட்ரமணனும் அவருடன் மேடையில் இருப்பதைப் போல ஒரு வீடியோ இணையத்த... மேலும் பார்க்க

ஜெம் வீரமணி பாலியல் வழக்கு: 4 பெண் அதிகாரிகளை கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழு! - யார் அவர்கள்?

ஜெம் கிரானைட்ஸ் வீரமணி பாலியல் வழக்கில் நாளுக்கு நாள் வருகின்ற செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றன. இந்நிலையில் ஜெம் கிரானைட்ஸ் வீரமணி பாலியல் வழக்கை விசாரிக்க 4 பேர் கொண்ட சிறப்பு பு... மேலும் பார்க்க

"வாக்குரிமையை பறிக்கும் சதியில் அமித் ஷாவுடன் ஞானேஷ் குமார் ஈடுபட்டிருக்கிறார்"- மாணிக்கம் தாகூர்

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) மூலம் வாக்காளர் பட்டியலிலிருந்து கோடிக்கணக்கான பெயர்கள் நீக்கப்பட்டது, 'படிவம் 6'-ல் விதிகளை மீறி மாற்றங்கள் செய்தது, தரவுத்தளத்தை மத்தியமயமாக்கியது, தேர்தல் ஆண... மேலும் பார்க்க

"ஒரு நாள் ஈரான் மக்கள் சுதந்திர காற்றை.!" - ஐ.நாவில் நெதன்யாகு பேச தொடங்கியதும் வெளியேறிய நாடுகள்

அமெரிக்காவின் நியூயார்க்கில் ஐக்கிய நாடுகளின் பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது.அதில் பல்வேறு நாட்டு அதிபர்கள், பிரதிநிதிகள் பேசி வருகிறார்கள்.நேற்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஐ.நா பொதுக்கூட்டத்தில் உர... மேலும் பார்க்க