செய்திகள் :

Bigg Boss Tamil: லக்ஷ்மி பிரியாவைத் தொடர்ந்து ஆனந்தியும் அவுட்?! என்ன நடக்கிறது பிக் பாஸில்?

post image

பிக்பாஸ் சீசன் 10 விஜய் டிவியில் விறுவிறுப்பாகப் போய்க் கொண்டிருக்கிறது.

19 போட்டியாளர்களுடன் செப்டம்பர் முதல் வாரம் தொடங்கிய நிகழ்ச்சியில் பிளாக் பாண்டி, சாவின்யா, ஜாவித், மணிவண்ணன் ஆகியோர் ஷோவிலிருந்து வெளியேறி விட்டனர்.

கடைசியாக மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போட்டியாளராக இருந்த லக்ஷ்மி பிரியாவும் வெளியேறி விட்டார். லீடர்ஸ் எக்சிஸ்ட் லிஸ்ட் மூலம் அவரது எவிக்‌ஷன் நிகழ்ந்துள்ளது.

இந்நிலையில் இந்த வாரம் வீக் எண்ட் எவிக்‌ஷனில் லக்ஷ்மி பிரியாவுடன் மல்லுக்கு நின்ற ஆனந்தியும் வெளியேறி இருப்பதாக நம்பத் தகுந்த தகவல் கிடைத்திருக்கிறது.

ஆனந்தி

ஆனந்தி ஒரு வாரம் கழித்து வைல்டு கார்டு போட்டியாளராக நிகழ்ச்சிக்குச் சென்றவர். இவர் பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றது முதலே லக்ஷ்மி பிரியாவுக்கும் இவருக்கும் இடையில் பிரச்னை வளர்ந்து கொண்டே இருந்தது நினைவிருக்கலாம்.

இந்தப் பின்னணியில்தான் வழக்கமான வீக் எண்ட் எவிக்‌ஷன் புராசஸ் மூலம் ஆனந்தியும் வெளியேறி இருக்கிறார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.

சண்டைக் கோழிகளாக இருந்த இரு போட்டியாளர்கள் வெளியேறி விட்ட நிலையில் புதிதாக ஒரு போட்டியாளர் அடுத்த சில தினங்களில் உள்ளே வரவிருக்கிறார் என்பது கூடுதல் தகவல்.!

பொறுத்திருந்து பார்க்கலாம்.!

Bigg Boss Tamil: "வேறு யாரையோ காப்பாத்த அப்படிப் பண்ணியிருக்கலாம்!" - வெளியேறினாரா லட்சுமி பிரியா?

`மகாநதி' தொடரின் மூலம் தனக்கென ஓர் ரசிகர்கள் பட்டாளத்தைப் பெற்றவர் லட்சுமி பிரியா.̀காவேரி' என்கிற இவர் கதாபாத்திரத்திற்கு அத்தனை வரவேற்பு கிடைத்தது. தொடர் முடிவடைந்த நிலையில் அடுத்ததாக̀பிக் பாஸ் தமிழ்... மேலும் பார்க்க

BB Varshini: `குறும்படம் எடுப்பதாக இளைஞரிடம் பணம் பறித்துத் தாக்கிய புகார்' - பிக்பாஸ் வர்ஷினி கைது!

பிக்பாஸ் பிரபலம் வர்ஷினி வெங்கட் பணமோசடி மற்றும் மிரட்டல் புகார் தொடர்பாக சென்னையில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.பிக்பாஸ் 8வது சீசனில் வைல்டு கார்டு என்ட்ரி மூலம் சென்றவர் நடிகை வர்ஷினி வெங்கட். சினிமாவில்... மேலும் பார்க்க

``ஒற்றுமையாக இருந்தோம்; பிரச்னைக்கு பணமே காரணம்; தங்கம் அவர் வீக்னஸ்"- ராதா புகார் குறித்து அம்பிகா

பிரபல நடிகை அம்பிகா மீது அவரது சகோதரியும் பிரபல நடிகையுமான ராதா செக் மோசடி புகார் ஒன்றை சில முன்புகளுக்கு முன்பு கொடுத்திருந்தார். அந்தப் புகாரில் 46 கோடி ரூபாய் காசோலை மோசடி செய்ததாக அம்பிகா மீது குற... மேலும் பார்க்க

Bigg Boss Tamil: "ல‌க்ஷ்மி பிரியாவுக்கு சேனலில் நல்ல செல்வாக்குனு சொல்றாங்க‌"- ஆனந்தி அம்மா பேட்டி

19 போட்டியாளர்களுடன் விஜய் டிவியில் செப்டம்பர் 6ம் தேதி தொடங்கிய பிக்பாஸ் சீசன் 10 விறுவிறுப்படையத் தொடங்கியிருக்கிறது.உடல் நலனைக் கருத்தில் கொண்டு பிளாக் பாண்டி நிகழ்ச்சி தொடங்கிய சில தினங்களிலேயே வெ... மேலும் பார்க்க

BB Tamil 10: மிருகத்தனத்தை வெளிப்படுத்தியது யார்? மணிவண்ணன் எலிமினேஷன் - இது சரியா பாஸ்? | 2nd Week

இரண்டாம் வாரம் நடந்தது என்ன?BB Tamil 10காமன்மேன் சுற்றில் தகுதி பெற்று பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த மணிவண்ணன் இந்த வாரம் வெளியேற்றப்பட்டிருக்கிறார். சில இடங்களில் இடக்காக பேசி மாட்டிக் கொண்டாலும் வீட்ட... மேலும் பார்க்க

BB Tamil 10: 'சர்ப்ரைஸா இருக்கட்டும்னு நினைச்சோம், கடைசியில பெரிய ஷாக்!' - அவினாஷ் அம்மா

'ஆளாளுக்கு சர்ப்ரைஸ் பண்றேன்னு கிளம்பி கடைசியில் ஷாக் ஆனதுதான் மிச்சம்' என்கிறார் பிக்பாஸ் சீசன் 10 ல் ஒரு போட்டியாளராக இருக்கும் அவினாஷின் அம்மா.பிக்பாஸ் அறிமுக மேடையில் அவினாஷும் அவரது சகோதரி அக்ஷித... மேலும் பார்க்க