“இந்தி வேண்டாம் என்பதால் தமிழ்நாடு தனிநாடு ஆகவில்லை; தனித்தன்மையுடன் இயங்குகிறது...
BB Tamil 10: 'சர்ப்ரைஸா இருக்கட்டும்னு நினைச்சோம், கடைசியில பெரிய ஷாக்!' - அவினாஷ் அம்மா
'ஆளாளுக்கு சர்ப்ரைஸ் பண்றேன்னு கிளம்பி கடைசியில் ஷாக் ஆனதுதான் மிச்சம்' என்கிறார் பிக்பாஸ் சீசன் 10 ல் ஒரு போட்டியாளராக இருக்கும் அவினாஷின் அம்மா.
பிக்பாஸ் அறிமுக மேடையில் அவினாஷும் அவரது சகோதரி அக்ஷிதாவும் ஒன்றாக ஏறி அக்ஷிதா எலிமினேட் ஆனது நினைவிருக்கலாம்.
' பிக்பாஸ் பார்க்குறீங்களா' என்ற கேட்டதும், உற்சாகமாகப் பேசத் தொடங்கினார்..

'அந்த நிகழ்ச்சி இந்தியில வந்த காலத்துல இருந்தே நான் அதைப் பார்த்திட்டிருக்கேன். பையனும் பொண்ணும் தமிழ் பிக்பாஸ் தொடங்குனதுல இருந்து எல்லா சீசனையும் பாத்துட்டு வர்றாங்க.
இந்த சீசனுக்கு முதல் வாய்ப்பு வந்தது அவினாஷுக்குதான். அந்தச் சமயத்துல நானும் அக்ஷிதாவும் மலேசியாவுல இருந்தோம். எங்களுக்கு சர்ப்ரைஸா இருக்கட்டும்னு அவினாஷ் எங்ககிட்டச் சொல்லல.
அக்ஷிதாவுக்கு நிக்ழ்ச்சி தொடங்குகிற ரெண்டு நாள் முன்னாடிதான் கூப்பிட்டாங்க. உடனே நாங்க, அவினாஷ்க்கு சர்ப்ரைஸா இருக்கட்டும்னு அந்த தகவலை அவன்கிட்டச் சொல்லல.
ஆனா அக்ஷிதா வீட்டுல இருந்து கிளம்பி போன பிறகு, எங்கிட்ட வந்து பிக்பாஸ் போறேன்'னு சொல்லிட்டான் அவினாஷ்.
ஆனாலும் ரெண்டு பேரும் சர்ப்ரைஸ் ஆகட்டும்னு அக்ஷிதா போன தகவலை அவன்கிட்டயும் சொல்லல. ஆக மொத்தத்துல ரெண்டு பேருமே அந்த மேடையில ஏறின அந்த நொடிதான் தெரிஞ்சுகிட்டாங்க.
ஆளாளுக்கு இப்படி சர்ப்ரைஸா இருக்கட்டும்னு நினைச்சதுல எல்லாம் திருஷ்டி பட்டுடுச்சோ என்னவோ, கடைசியில் எம் பொண்ணு எவிக்ட் ஆகி அது மொத்த குடும்பத்துக்கே பெரிய ஷாக் ஆகிடுச்சு. ஏன்னா, அவினாஷை விட அக்ஷிதாவுக்குதான் அதுல கலந்துக்கணும்கிற ஆசை அதிகம்.
ஒருநாள் அப்செட்டில் இருந்தவ பிறகு நார்மலாகிட்டா' என்றவரிடம்
அவினாஷ் எப்படி விளையாடுகிறார்? நூறு நாட்கள் தாக்குப் பிடிப்பாரா என்றோம்.

''இப்ப வரைக்கும் ஒ.கே. ஆனா அவனுக்கு சாப்பாட்டுல தினமும் முட்டையும் சிக்கனும் இருக்கணும். ஜிம் போகிறதால இந்த மாதிரி உணவு விஷயத்துல ரொம்ப கரெக்டா இருப்பான். ஆனா பிக்பாஸ் வீட்டுக்குள்ள இதெல்லாம் கிடைக்கும்னு எதிர்பார்க்க முடியுமா? அப்படிக் கிடைக்காதபட்சத்துல அது உடல் ரீதியாகவும் தொடர்ந்து மன ரீதியாகவும் பாதிப்பை உண்டாக்கினா எப்படிச் சமாளிப்பான் தெரியலை' என்கிறார்.
'என்னங்க, என் பையன் என்ன கஷ்டப்பட்டாலும் எப்படியும் டைட்டில் அடிச்சுட்டுதான் வருவான்'னு சொல்வீங்கனு எதிர்பார்த்தா இவ்வளவு கேஷுவலான பதிலைச் சொல்றீங்க' என்றால்,
பிராக்டிகல்னு ஒண்ணு இருக்கில்ல, எனக்கு என் மகன் டைட்டில் வாங்கணும்கிற ஆசை இருக்கதான் செய்யுது. ஆனா அந்த வீட்டுக்குள் அவனுடைய கேரக்டரா சேனல் காட்டுகிற அந்த பிஹேவியர், அதுக்கு வெளியில இருந்து கிடைக்கிற சப்போர்ட்னு நிறைய விஷயங்கள் இதுல இருக்கு.
திரும்பி வர்றப்ப புதுசா சில அனுபவங்களைக் கத்துகிட்டு வருவான். அதுவே நல்ல விஷயம்தானே' என்கிறார்.

















