செய்திகள் :

இப்ப என்ன பண்றாங்க? : "லைம்லைட்ல இல்லாத எனக்கு அவர் அதை பண்ணனும்னு அவசியம் இல்ல!" - நடிகை ஐஸ்வர்யா

post image

`அண்ணாமலை' தொடரின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஐஸ்வர்யா. திருமணத்திற்கு பிறகு நடிப்பிலிருந்து விலகியவர் வெளிநாட்டில் தற்போது குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவரிடம் பேசினோம்.

ஐஸ்வர்யா

" நான் நடிக்க ஆரம்பிக்கும்போது எனக்கு 15 வயசு. பெருசா எதுவும் தெரியாதுதான்.. அப்பலாம் ஷூட்டிங் போக மாட்டேன்னு நான் அழுத நாட்கள் எல்லாம் உண்டு. எங்க குடும்ப சூழல் தான் நான் இந்தத் துறைக்குள் வந்ததுக்கான காரணம். என்ன வாய்ப்பு என்னைத்தேடி வந்ததோ வந்ததுல என்னால எவ்ளோ பெஸ்டா பண்ணமுடியுமோ பண்ணேன். என் கரியர்ல மிகப்பெரிய பிரேக்னா `அண்ணாமலை' சீரியல்ல ஜோதி கதாபாத்திரம்தான்! 

சினிமா, சீரியல்னு நடிச்சிருந்தாலும் என்னோட சாய்ஸ் சீரியலாகத்தான் இருந்தது. ஆர்யா நடிச்சிருந்த `ஒரு கல்லூரியின் கதை' படத்துல நானும் நடிக்கிறதா இருந்தது. அட்வான்ஸ் எல்லாம் வாங்கிட்டேன். அதே தேதியில் எனக்கொரு தெலுங்கு சீரியல் ஆஃபர் வந்துச்சு. இந்தப் பட வாய்ப்பு வேண்டாம்னு சொல்லி அட்வான்ஸை திருப்பி கொடுத்துட்டு சீரியல்ல நடிக்கப் போயிட்டேன். டெலிவிஷன் போதுங்கிற முடிவுக்கு அப்பவே வந்துட்டேன்!" என்றவரிடம் விஜய்சேதுபதியுடன் நடித்தது குறித்துக் கேட்டோம்.

ஐஸ்வர்யா

" `பெண்' சீரியல்ல விஜய் சேதுபதி எனக்கு அண்ணன். அட்டகத்தி தினேஷ் எனக்கு தம்பி! `மகாராஜா' பட புரொமோஷன் டைம்ல என்னோட சிஸ்டர் விஜய் சேதுபதி சாரை மீட் பண்ணியிருந்தாங்க. அவங்க என்னைப்பத்தி சொன்னதும் அவர் உடனே எனக்கு வீடியோகால் பண்ணச் சொல்லி என் சிஸ்டர் எனக்கு ஃபோன் பண்ணாங்க. வீடியோ கால்ல நாங்க நடிச்ச சீன்லா குறிப்பிட்டு சொல்லி என்கிட்ட பேசினார். இப்ப நான் லைம்லைட்ல கூட இல்ல! லைம்லைட்ல இல்லாத எனக்கு அவர் அப்படியெல்லாம் பண்ணனும்னு எந்த அவசியமும் இல்ல.. ஆனா, அவர் அதை பண்ணார்!" என்றவர் நடிகை வடிவுக்கரசி குறித்துப் பகிர்ந்து கொண்டார்.

" அவங்க என்னோட அம்மா! என் சொந்த அம்மாவுடைய பெயரைக்கூட `மம்மி'னு தான் செல்போன்ல பதிவு பண்ணி வச்சிருக்கேன். ஆனா, வடிவுக்கரசி அம்மாவை `அம்மா'னு தான் வச்சிருக்கேன். எனக்கு ரெண்டு பசங்க. என் பெரிய பையனுக்கு 15 வயசு. சின்னப் பொண்ணுக்கு 8 வயசாகுது. அவங்க அம்மாவை அம்மம்மான்னு தான் கூப்டுவாங்க. இப்பவும் அவங்ககிட்ட பேசிட்டுதான் இருக்கேன்!" என்றவர் தொடர்ந்து பேசினார்.

ஐஸ்வர்யா

" நிறைய நெகட்டிவ் ரோல் பண்ணியிருக்கேன். நானா எதையும் தேர்வு செஞ்சதில்ல. வந்த கதாபாத்திரத்துல நடிச்சேன். `நான் ஹீரோயின் மெட்டீரியல் இல்ல'னு எனக்குத்தெரியும். அதனால அந்தப்பக்கம் எல்லாம் போகல!" என்றார்.

இன்னும் பல விஷயங்கள் குறித்து ஐஸ்வர்யா நம்மிடையே பகிர்ந்து கொண்டார். அவற்றைக் காண லிங்கை கிளிக் செய்யவும்!

BB Tamil 10: 'சர்ப்ரைஸா இருக்கட்டும்னு நினைச்சோம், கடைசியில பெரிய ஷாக்!' - அவினாஷ் அம்மா

'ஆளாளுக்கு சர்ப்ரைஸ் பண்றேன்னு கிளம்பி கடைசியில் ஷாக் ஆனதுதான் மிச்சம்' என்கிறார் பிக்பாஸ் சீசன் 10 ல் ஒரு போட்டியாளராக இருக்கும் அவினாஷின் அம்மா.பிக்பாஸ் அறிமுக மேடையில் அவினாஷும் அவரது சகோதரி அக்ஷித... மேலும் பார்க்க

BB Tamil 10: `தீவிரமடைந்த ஆனந்தி, லட்சுமி பிரியா மோதல்' - பிக் பாஸில் இன்று!

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சி முதல் வாரத்தைக் கடந்து இரண்டாவது வாரமாக ஒளிப்பரப்பாகி வருகிறது. முதல் வாரத்தில் நாமினேஷன் பட்டியலில் முனியம்மா, சவின்யா, தன்யா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இதில் சக போட்டிய... மேலும் பார்க்க

சீரியல் இயக்குநர் சங்கத் தேர்தல்: மீண்டும் வெற்றி பெற்ற மங்கை அரிராஜன்; ஆனாலும் நீடிக்கும் குழப்பம்!

நடந்து முடிந்த சீரியல் இயக்குநர்கள் சங்கத் தேர்தலில் தலைவர் ஓர் அணியிலிருந்தும் செயலாளர், பொருளாளர்கள் வேறு அணியிலிருந்தும் தேர்வாகி இருப்பதால், சங்கம் தொடர்ந்து சுமுகமாக இயங்குமா என்கிற குழப்பம் உறுப... மேலும் பார்க்க

BB Tamil 10: `முனியம்மாவின் அதிரடி ஆட்டம் டு வி.சே-வின் நாற்காலி கவிழ்ப்பு' - முதல் வார சுவாரஸ்யம்!

விகடன்.காம் வாசக உறவுகளுக்கு வணக்கம். நான் உங்கள் சுரேஷ் கண்ணன். பிக் பாஸ் நிகழ்ச்சியின் பத்தாவது சீசனின் மூலம் மீண்டும் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி.‘எதிர்பாராததை எதிர்பாருங்கள்’ என்கிற பிக் பாஸின் ... மேலும் பார்க்க

Brothers And Sisters: `இன்னொரு குடும்பத்தை நாசம் பண்ண வந்துட்ட'ன்னு திட்டுறாங்க' - புரொமோதினி ஷேர்ஸ்

ஜியோ ஹாட்ஸ்டார் வெப்சீரிஸில் நல்ல வரவேற்பை பெற்று வரும் சீரிஸ் `Brothers And Sisters'. இந்த சீரிஸில் `கிரிஜா' கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருப்பவர் புரொமோதினி. அவரை நம் அலுவலகத்தில் சந்தித்துப் பே... மேலும் பார்க்க

`கனத்த இதயத்துடன்...' - சின்னத்திரை நடிகர் சங்க செயலாளர் நவீந்தர் திமுகவிலிருந்து வெளியேறியது ஏன்?

திமுக-வில் தலைமைக் கழகப் பேச்சாளராகவும் சின்னத்திரை நடிகர் சங்கத்தில் செயலாளராகவும் இருக்கும் நடிகர் நவீந்தர் திமுகவிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.நாதஸ்வரம், அழகு உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்தவ... மேலும் பார்க்க