செய்திகள் :

மேற்கு வங்கம்: நந்திகிராம் தொகுதியில் தேர்தல்; காங்கிரஸுக்கு மம்தா ஆதரவு - வேட்பாளர் திடீர் கைது!

post image

மேற்கு வங்கத்தின் தற்போதைய முதலமைச்சர் சுவேந்து அதிகாரி பவானிபூர், நந்திகிராம் என இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். இரண்டிலுமே வெற்றி பெற்றார்.

இதில் பவானிபூர் தொகுதி என்பது மேற்கு வங்கத்தின் முன்னாள் முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் சொந்தத் தொகுதி. அரசியல் காரணங்களுக்காக பவானிபூர் தொகுதியின் எம்எல்ஏவாகச் சுவேந்து அதிகாரி தொடர முடிவு செய்திருக்கிறார்.

நந்திகிராம் தொகுதி

இதனால், 2016, 2021, 2026 என மூன்று தேர்தல்களில் தனக்கு வெற்றியைத் தந்து தந்த நந்திகிராம் தொகுதியின் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டார்.

சுவேந்து அதிகாரி, மம்தா பானர்ஜி
சுவேந்து அதிகாரி, மம்தா பானர்ஜி

2021-ஆம் ஆண்டு நந்திகிராம் தொகுதியில் சுவேந்து அதிகாரி vs மம்தா பானர்ஜி என்று தேர்தல் களம் கண்டபோதும், சுவேந்து அதிகாரிக்கே வெற்றியைத் தந்தனர் நந்திகிராம் மக்கள் என்பது இங்கே நினைவில் கொள்ள வேண்டும்.

நந்திகிராம் தொகுதியில் வருகிற அக்டோபர் 6-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

மம்தாவிற்கு நெருக்கடி

ஆனால், அந்த வேட்பாளரோ வேட்புமனு தாக்கல் செய்வதற்குக் கடைசி நாளுக்கு முந்தைய நாள் சுவேந்து அதிகாரியைச் சந்தித்தார். இதன் விளைவாக, தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றுவிட்டார்.

இதில் மம்தாவிற்குக் கடுமையான நெருக்கடி. இதனால், மம்தா, ‘நாட்டின் நலனுக்காக’ காங்கிரஸ் அறிவித்த நந்திகிராம் வேட்பாளரை ஆதரிப்பதாக இன்று அறிவித்தார்.

காங்கிரஸ் வேட்பாளர் கைது

இதற்கிடையில் , காங்கிரஸ் வேட்பாளரான மிலன் பிரதானைக் கைது செய்திருக்கிறது மேற்கு வங்க போலீஸ். இவரது கைதுக்குப் பழைய கொலை வழக்கு காரணமாகக் கூறப்படுகிறது.

நந்திகிராமைத் தனது கட்டுப்பாட்டிலேயே வைத்துக்கொள்ள வேண்டும்... மிலனுக்கு மம்தா கொடுக்கும் ஆதரவு பாஜகவிற்கு பின்னடைவாக அமையுமோ என்பதற்காகத்தான் சுவேந்து அதிகாரி இந்தக் கேம் ஆடுகிறார் என்று கூறப்படுகிறது.

“இந்தி வேண்டாம் என்பதால் தமிழ்நாடு தனிநாடு ஆகவில்லை; தனித்தன்மையுடன் இயங்குகிறது” - உதயநிதி

தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகள் வேண்டாம் என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்."தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகள் வேண்டாம்; தேவைப்பட்டால், சிறப்புச் சட்டமன்றக் கூட்டத்தொடர் க... மேலும் பார்க்க

'உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்...' - முதல்வர் விஜய்யின் இடைத்தேர்தல் பிரசார பிளான் என்ன?

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பிரசாரம் தொடங்கியிருக்கிறது. தவெக சார்பில் இரண்டு தொகுதிகளிலும் முதலமைச்சர் விஜய்யே களமிறங்கி பிரசாரம் செய்யவிருக்கிறார். இடைத்தேர்தலும் முதல்வர் விஜ... மேலும் பார்க்க

”அது AI போட்டோ; போலி புகார்; என் மீதான நடவடிக்கையை ஏற்க முடியாது" - கருப்பு முருகானந்தம்!

திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த கருப்பு முருகானந்தம் தஞ்சாவூரில் வசித்து வருகிறார். தமிழக பா.ஜ.க-வின் மாநில பொதுச்செயலாளராக பதவி வகித்து வந்தார். டெல்டா பா.ஜ.க-வின் முகமாக இருந்தவர். டெல்டாவில் கட்சிய... மேலும் பார்க்க

"16 ஆயிரம் பேருக்கு டெங்கு பாதிப்பு; நிர்வாக சீர்கேட்டின் உச்சம் இது.!"- சீமான் கண்டனம்

"16 ஆயிரம் பேர் பாதிக்கப்படும் அளவிற்கு தமிழ்நாட்டில் வேகமாகப் பரவிவரும் டெங்கு காய்ச்சலைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்காத தவெக அரசின் அலட்சியப்போக்கு நிர்வாக சீர்கேட்டின் உச்சம்" என்று நாம் தமிழர் கட... மேலும் பார்க்க

பள்ளி மாணவன் இறப்பு விவகாரம்: மதுரை ஆட்சியர் அலுவலகம் முற்றுகை; தள்ளுமுள்ளு... பரபரப்பு!

மதுரை ஆனையூர் கூடல்புதூர் வானவில் தெரு பகுதியை சேர்ந்தவர் 11-ம் வகுப்பு பள்ளி மாணவன் தமிழ்ச்செல்வன். இவர் கடந்த வாரம் முட்புதர் குட்டை ஒன்றில் இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இது தொடர்பாக காவல்த... மேலும் பார்க்க

"யாரும் என்னை மிரட்ட முடியாது; பண்ணையார் அரசியல் எல்லாம்..!"- கே.என் நேருவுக்கு துரை வைகோ பதில்

மதிமுக எம்.பி துரை வைகோ செப்.15 செய்தியாளர்களைச் சந்தித்தபோது, “திமுக என்ன மன்னர் கட்சியா? அவர்கள் கொடுக்கும் பிச்சையை பெற்றுத்தான் எம்.பி. ஆக வேண்டுமா? எனது எம்.பி பதவி அப்படியே திமுக பிச்சை போட்டதாக... மேலும் பார்க்க