செய்திகள் :

"யாரும் என்னை மிரட்ட முடியாது; பண்ணையார் அரசியல் எல்லாம்..!"- கே.என் நேருவுக்கு துரை வைகோ பதில்

post image

மதிமுக எம்.பி துரை வைகோ செப்.15 செய்தியாளர்களைச் சந்தித்தபோது, “திமுக என்ன மன்னர் கட்சியா? அவர்கள் கொடுக்கும் பிச்சையை பெற்றுத்தான் எம்.பி. ஆக வேண்டுமா?

எனது எம்.பி பதவி அப்படியே திமுக பிச்சை போட்டதாக வைத்துக்கொண்டாலும், கொளத்தூரில் திமுக தலைவருக்கே மக்கள் பிச்சை போடவில்லையே.. அதற்கு என்ன பதில்?” என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

கே.என் நேரு
கே.என் நேரு

இதனைத் தொடர்ந்து செப். 17 ஆம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்த திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவிடம், துரை வைகோ பேசியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், " நான் திமுகவில் சேர்ந்துவிடுகிறேன் என்று எங்களிடம் சொன்னவர்தான் துரை வைகோ. எங்கள் அப்பா கோவக்காரர், என்னால் கட்சி நடத்த முடியாது என்றார். சின்னப் பிள்ளையாக இருந்துகொண்டு ரொம்ப அதிகமாக பேசுகிறார் துரை.

எங்களின் வளர்ச்சி நின்று போய் விட்டது என்கிறார். வெற்றி அடைந்த வேட்பாளர் அவர்களுடன் சென்றிருந்தால் வளர்ச்சி வந்திருக்குமா? எனத் தெரியவில்லை. கடுமையாக தான் பேசுகிறார். அது நியாயமில்லை. தளபதி ஸ்டாலினை பற்றி வயதில் சிறியவராக இருக்கும் துரை வைகோ பேசலாமா? மிசா காலத்தில் அவர் பிறந்திருக்கவே மாட்டார்" என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் மீண்டும் செய்தியாளர்களைச் சந்தித்த எம்.பி துரை வைகோவிடம் கே.என். நேரு பேசியது குறித்து கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது. அதற்கு பதிலளித்த அவர், " நான் மக்கள் பணி செய்துகொண்டு நல்ல அரசியலை செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன்.

துரை வைகோ
துரை வைகோ

ஆனால் என்னை கொச்சையாகப் பேசுவது தனி மனித தாக்குதல் நடத்துவது போன்ற விஷயங்களைச் செய்கிறார்கள். அதற்கெல்லாம் நான் பயப்படமாட்டேன். அண்ணன் நேரு மறைமுகத் தாக்குதலை நடத்துவார்.

அவர்கள் கட்சியில் இருக்கும் எத்தனை எம்எல்ஏ-க்களை அவர் காலி செய்திருக்கிறார். யாரும் என்னை மிரட்ட முடியாது. இந்தப் பண்ணையார் அரசியல் இதெல்லாம் என்னிடம் நடக்காது; என்னை மதித்தால் மதிப்பேன்" என்று ஆவேசமாகப் பேசியிருக்கிறார்.

பள்ளி மாணவன் இறப்பு விவகாரம்: மதுரை ஆட்சியர் அலுவலகம் முற்றுகை; தள்ளுமுள்ளு... பரபரப்பு!

மதுரை ஆனையூர் கூடல்புதூர் வானவில் தெரு பகுதியை சேர்ந்தவர் 11-ம் வகுப்பு பள்ளி மாணவன் தமிழ்ச்செல்வன். இவர் கடந்த வாரம் முட்புதர் குட்டை ஒன்றில் இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இது தொடர்பாக காவல்த... மேலும் பார்க்க

``மூளை திசு ஆய்வு படிப்பை இவர் மட்டுமே படிக்கிறார்; அரசு உறுதுணையாக இருக்கும்" - அமைச்சர் வன்னி அரசு

அயலக மாணவர் பாரதிதாசனுக்குத் தேவையான அனைத்து கல்வி உதவித்தொகைகளும் தமிழ்நாடு அரசால் உடனடியாக வழங்கப்படும் என்று சமூக நீதித் துறை அமைச்சர் வன்னியரசு உறுதியளித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் ப... மேலும் பார்க்க

'அது தவெக-வுக்குச் சாதகமாக முடியும்.!'- இடைத்தேர்தலில் பாமக போட்டியிடாதது ஏன்? அரசியல் கணக்கு என்ன?

அக்டோபர் 6 ஆம் தேதி நடக்க இருக்கும் மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தவெக, திமுக, அதிமுக, நாதக, கம்யூனிஸ்ட் கட்சிகள் என ஐந்து முனை போட்டி உருவாகி இருக்கி... மேலும் பார்க்க

தொடரும் பெண்களுக்கு எதிரான சமத்துவமின்மை: `இலக்கு 2030; எட்டப்போவதோ 2197!' - ஐ.நா அறிக்கை

2030-ம் ஆண்டுக்குள் பாலின சமத்துவத்தை அடைய வேண்டும் என்ற உலகளாவிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும், தற்போதைய முன்னேற்ற வேகத்தின்படி பார்த்தால் அந்த இலக்கு 2197-ம் ஆண்டில்தான் சாத்தியமாகும் என ஐ.நா.... மேலும் பார்க்க

`திமுக-வைத்தான் சொன்னேன், தேமுதிகவை அல்ல!’ - பிரேமலதா விஜயகாந்துக்கு திருமாவளவன் பதில்

வி.சி.க தலைவரும், எம்பியுமான திருமாவளவன் சமீபத்தில் கலந்துகொண்ட திருமண நிகழ்ச்சியில் பேசியபோது, "நீண்டகாலம் திமுகவோடு பயணித்த கட்சிகளுக்கான தொகுதிகளைக் குறைத்து, திடுமெனக் கூட்டணியில் இணைந்த கட்சிக்கு... மேலும் பார்க்க

'பாஜகவும் தேர்தல் ஆணையமும் கைகோத்து ஒரு கட்சியைப் பிளவுபடுத்துகின்றன'- மம்தாவுக்கு ராகுல் ஆதரவு

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு திரிணமுல் காங்கிரஸ் கட்சி இரண்டாக உடைந்த நிலையில் மம்தா பானர்ஜி தலைமையில் ஒரு பிரிவினரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் ரிதப்ரத பானர்ஜி தலைமையில் மற்... மேலும் பார்க்க