"அமைச்சர் நிர்மல்குமார் கண்ணியக் குறைவாக பேசவில்லை.. பேசியது தி.மு.க-தான்! - வ...
திண்டுக்கல்: வைக்கோல் லாரியில் சென்ற சிறுவன்; மின்சாரம் தாக்கி உயிரிழந்த சோகம்!
திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அருகேயுள்ள மார்க்கம்பட்டி எல்லைப்பட்டியைச் சேர்ந்தவர் தினேஷ்குமார் (23). லாரி ஓட்டுநரான இவர் தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து வைக்கோல் ஏற்றிக்கொண்டு ஈச்சர் லாரியில் எல்லைப்பட்டிக்கு வந்தார்.
லாரியில் இருந்து வைக்கோலை கீழே இறக்குவதற்காக தார்ப்பாயை அகற்ற முயன்றபோது, அது சிக்கிக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, தார்ப்பாயை எடுப்பதற்காக எல்லைப்பட்டியைச் சேர்ந்த 15 வயது சிறுவன் பெரியகருப்பன் லாரியின் மேல் ஏறியுள்ளார்.
அப்போது மின்சாரம் தாக்கி சிறுவன் துடிதுடித்து போனான். மேலும், அறுந்து விழுந்த மின் வயரால் வைக்கோல் லாரியிலும் தீப்பற்றியது. சிறுவன் தீயில் சிக்கி பரிதாபமாக இறந்து போனான். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த திண்டுக்கல் தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்து கட்டுப்படுத்தினர்.

இதுகுறித்து சாணார்பட்டி போலீஸார் சிறுவனின் உடலைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












.jpeg)



