திண்டுக்கல்: வைக்கோல் லாரியில் சென்ற சிறுவன்; மின்சாரம் தாக்கி உயிரிழந்த சோகம்!
"நாங்கள் ஒரு மேடைக்கு சென்றால் கீபோர்டு ப்ளேயர் எழுந்து சென்றுவிடுவார்.!"- கானா வினோத்
2017 ஆம் ஆண்டு வெளியான 'மீசைய முறுக்கு’ திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து ‘மீசைய முறுக்கு 2’ படத்தை ஹிப் ஹாப் ஆதி இயக்கி, கதாநாயகனாக நடித்திருக்கிறார்.
சுந்தர் சி - குஷ்பு தயாரிக்கும் ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படத்தில் சைத்ரா, ரம்யா ரங்கநாதன் ஆகியோர் நடித்திருக்கின்றனர்.
தவிர யூடியூபர் ஹர்ஷத் கான், நாசர், கருணாஸ், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

இந்தப் படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நேற்று (செப். 17) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய கானா வினோத், "ஹிப் ஹாப் ஆதி அண்ணன் உடன் ஒரு பன்னிரண்டு வருடமாகப் பயணிக்கிறேன்.
அவர் இசையமைக்கும் எல்லாப் படங்களிலும் எனக்கு வாய்ப்பு கொடுப்பார். இப்போது வரைக்கும் வாய்ப்பு கொடுக்கிறார். கானாவில் இருக்கும் பிரச்னைகளைப் பேச வேண்டும் என்று நினைக்கக் கூடியவர்.
கானா பாடகர்கள் நல்ல பெயர் எடுத்திருந்தாலும் நாங்கள் ஒரு மேடைக்கு சென்றால் அங்கிருக்கும் கீபோர்டு ப்ளேயர் எழுந்து சென்றுவிடுவார். ரொம்ப கஷ்டப்பட்டிருக்கிறேன். இப்போது இருக்கும் கானா பாடகர்களுக்கு மொஃபைல் இருப்பதால் ஈஸியாக சில விஷயங்களைச் செய்ய முடிகிறது. வளர்வதற்கான மேடைகள் நிறைய இருக்கிறது.

அவர்களது திறமைகளை உடனடியாக வெளிப்படுத்திவிடலாம். ஆனால் அப்போது அப்படி கிடையாது. உழைக்கும் மக்களின் வலிகளை கானா பாடல்களாகப் பாடிக்கொண்டிருந்தோம்.
அதற்குரிய மேடை கிடைக்காததால் இரங்கல் வீடுகளுக்கு சென்று பாடினோம். தற்போது இந்த அளவிற்கு மக்களிடையே கானா வரவேற்பு பெற்றிருக்கிறது. கானா பாடகர்கள் படும் கஷ்டத்தை பத்திரிகையாளர்கள் மக்களிடம் எடுத்து செல்ல வேண்டும்" என்று பேசியிருக்கிறார்.









.jpeg)





