செய்திகள் :

"சௌமியாவுக்கு Fans Club தொடங்க இருக்கோம்னு சொன்னாங்க..!"- பாமக தலைவர் அன்புமணி சொன்ன தகவல்!

post image

பாமக பொதுக்குழு கூட்டம் நேற்று விக்ரவாண்டியில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், "இப்போது தான் நம்மைப் பற்றி எல்லோரும் கொஞ்சம் நன்றாக பேசுகிறார்கள். இல்லையென்றால் அய்யோ இவர்களா? சாதி கட்சி என்று ஒரே வார்த்தையில் சொல்லி முடித்துவிடுவார்கள்.

சட்டமன்றத்தில் சௌமியா அன்புமணியும், நம் எம்எல்ஏ-க்களும் ஆக்கப்பூர்வமாக பேசும் கருத்துகள் இப்போது எல்லோருக்கும் சென்றடைகிறது. ஆனால் 30 வருடமாக நாம் பேசிய கருத்துகள் மக்களை சென்றடைய வில்லை. இருப்பினும் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது.

சௌமியா அன்புமணி
சௌமியா அன்புமணி

இப்படி எல்லாம் ஸ்கோர் செய்கிறார்கள் என்று பொறாமைப்படுகிறார்கள். கடந்த வாரம் ஈரோட்டில் நடைபெற்ற ஒரு முக்கியத் திருமண நிகழ்வுக்கு நான் சென்றிருந்தேன்.

அப்போது அங்கு எனது பழைய பள்ளி நண்பர்களும், அவர்களது மனைவிகளும் திரண்டு வந்திருந்தார்கள்.

அவர்கள் அனைவரும் என்னிடம் வந்து, சௌமியா அன்புமணி தற்பொழுது சட்டமன்றத்திற்குள் தமிழ்நாட்டு மக்களின் நல்வாழ்விற்காகவும், கல்வி மற்றும் உரிமைகளுக்காகவும் எத்தனையோ ஆக்கப்பூர்வமான நல்ல விஷயங்களைப் பேசி வருகிறார்.

சௌமியா அன்புமணி
சௌமியா அன்புமணி

அவரது இந்த மாஸ் பேச்சுகளைப் பார்த்து நாங்கள் அனைவரும் அவருக்குப் பெரிய ரசிகர்களாக மாறிவிட்டோம், எனவே சௌமியா அன்புமணிக்குத் தமிழ்நாட்டில் ஒரு புதிய 'ரசிகர் மன்றம்' (Fans Club) ஆரம்பிக்கப் போகிறோம் என்று ஆசையோடு கூறினார்கள்" என்று மேடையில் பேசியிருக்கிறார்.

'பாஜகவும் தேர்தல் ஆணையமும் கைகோத்து ஒரு கட்சியைப் பிளவுபடுத்துகின்றன'- மம்தாவுக்கு ராகுல் ஆதரவு

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு திரிணமுல் காங்கிரஸ் கட்சி இரண்டாக உடைந்த நிலையில் மம்தா பானர்ஜி தலைமையில் ஒரு பிரிவினரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் ரிதப்ரத பானர்ஜி தலைமையில் மற்... மேலும் பார்க்க

"காங்கிரஸுக்காக மிகப்பெரிய ரிஸ்க் எடுத்திருக்கிறது த.வெ.க!" - சொல்கிறார் ரவிக்குமார் எம்.பி

"த.வெ.க தலைவர் விஜய், கரூர் கூட்டத்துக்கு வேண்டுமென்றே காலம் தாழ்த்தி வந்ததால்தான் கூட்ட நெரிசல் ஏற்பட்டு அத்தனை உயர் பலிகளும் நடந்தன. எனவே, விஜய் மீது வழக்குப் பதிந்து அவரது அரசியலை அம்பலப்படுத்த வேண... மேலும் பார்க்க

அயலக மாணவர் விவகாரம்: ``இதோ ஆதாரம்; உங்க IT Wing மூலம் தவறான தகவல பரப்புறீங்க" - மாணவர் பாரதிதாசன்

அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி திட்டத்தின் கீழ் மலேசியா தேசிய பல்கலைக்கழகத்தில் படிக்கச் சென்ற பாரதிதாசன் என்ற மாணவர், கல்வி உதவித்தொகை கிடைக்காமல் தாம் மிகவும் சிரமப்படுவதாக ஏப்ரல் மாதம் முதல் தொடர... மேலும் பார்க்க

அயலக மாணவரின் குற்றச்சாட்டு: ``அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கத்துடன்"- சமூக நீதித்துறை அமைச்சகம் பதில்

அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி திட்டத்தின் கீழ் மலேசியா தேசிய பல்கலைக்கழகத்தில் படிக்கச் சென்ற பாரதிதாசன் என்ற மாணவர், கல்வி உதவித்தொகை கிடைக்காமல் தாம் மிகவும் சிரமப்படுவதாக ஏப்ரல் மாதம் முதல் தொடர... மேலும் பார்க்க

Vijay: "படங்களில் மீனவர்களைக் காப்பது போல் நடித்துவிட்டு, நிஜத்தில்..."- நயினார் நாகேந்திரன் காட்டம்

பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் புதிய தலைமைச் செயலகம் மற்றும் முதலமைச்சரின் லண்டன் பயணம் குறித்து காட்டமான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ``நடைபெறவுள்ள... மேலும் பார்க்க

"அந்தத் தம்பியின் கண்ணீர் நெஞ்சைக் கனக்கச் செய்கிறது..!"- அயலக மாணவர் விவகாரத்தில் ஸ்டாலின் கண்டனம்

அம்பேத்கர் அயலக உயர்கல்வி திட்டத்தின் கீழ் உதவித்தொகை கிடைக்கவில்லை என மாணவர் பாரதிதாசன் மீண்டும் கண்ணீருடன் வீடியோ வெளியிட்டிருந்தார். இதற்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், தற்போத... மேலும் பார்க்க