செய்திகள் :

செங்கல்பட்டு : மாமியாரைக் கொலை செய்த மருமகள் - சிக்கியது எப்படி?

post image

செங்கல்பட்டில் பெரியநத்தம் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் பெருந்தேவி (61). இவரின் மகன் வெங்கடேசன் (34). அவரின் மனைவி இந்துஜா (28). இவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். செப்டம்பர் 13-ம் தேதி மாலை பெருந்தேவி, தன்னுடைய வீட்டின் குளியலறையில் வழுக்கி விழுந்தார். அவரை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார் மருமகள் இந்துஜா. அங்கு பெருந்தேவியை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். செங்கல்பட்டு நகர காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், உயிரிழந்த பெருந்தேவியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அதைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்தும் விசாரித்து வந்தனர். இந்தநிலையில் பெருந்தேவியின் சடலத்தை பிரேத பரிசோதனை செய்த டாக்டர்கள், கழுத்து நெரிக்கப்பட்டு பெருந்தேவி உயிரிழந்ததாக போலீஸாரிடம் தெரிவித்தனர். அதனால் பெருந்தேவியை கொலை செய்தது யார் என்று போலீஸார் விசாரணையை தொடங்கினர்.

மருமகள் இந்துஜா

போலீஸாரின் சந்தேகப் பார்வை மருமகள் இந்துஜா மீது விழுந்தது. அவரிடம் விசாரித்தபோது, சம்பவத்தன்று குளியலறையில் மயங்கி கிடந்த மாமியார் பெருந்தேவியை நான்தான் ஆஸ்பிட்டலுக்கு அழைத்துச் சென்றேன் என்று கூறினார். அதைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் போலீஸார் விசாரித்தனர். அப்போது மாமியார் பெருந்தேவிக்கும் மருமகள் இந்துஜாவுக்கும் இடையே அடிக்கடி சண்டை வரும் என்ற தகவல் போலீஸாருக்கு தெரியவந்தது. அதனால் மீண்டும் இந்துஜாவிடம் என்ன நடந்தது என்று விசாரித்தனர். அப்போது அவர் மாமியார், குளியலறையில் விழுந்ததில் இறந்துவிட்டார் என்று கூறினார். அதைத் தொடர்ந்து பி.எம். ரிப்போர்ட் குறித்து இந்துஜாவிடம் போலீஸார் கூறியபோது அவரின் முகம் மா

றியது. அதன்பிறகே அவர் மாமியாரைக் கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். இதையடுத்து கொலை வழக்குப் பதிவு செய்த போலீஸார் மருமகள் இந்துஜாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதுகுறித்து செங்கல்பட்டு மாவட்ட போலீஸார் கூறுகையில், ``மாமியார் பெருந்தேவிக்கும் மருமகள் இந்துஜாவுக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டிருக்கிறது. அதனால் மாமியார் மீது கடும் ஆத்திரத்திலிருந்திருக்கிறார் மருமகள் இந்துஜா. சம்பவத்தன்று குளியலறையில் மாமியார் பெருந்தேவி மயங்கி விழுந்ததும் அவரை அடித்து உதைத்திருக்கிறார் இந்துஜா. அதன்பிறகும் ஆத்திரம் தீராததால் மாமியாரின் கழுத்தை நெரித்திருக்கிறார். அதன்பிறகு தன் மீது யாருக்கும் சந்தேகம் வரக் கூடாது என்பதற்காக அவரே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். ஆனால் பிரேத பரிசோதனை (பி.எம்) ரிப்போர்ட்டால் மருமகள் இந்துஜா எங்களிடம் சிக்கிக் கொண்டார். ஆனால் விசாரணையின் போது கொலையை மறைக்க இந்துஜா கதறி அழுது நாடகமாடினார். ஆனால் அவரால் நீண்ட நேரம் நடிக்க முடியவில்லை. நாங்கள் கேட்ட கேள்விகளுக்கு முன்னுக்குப் பின் முரணான தகவல்களை தெரிவித்து மாட்டிக் கொண்டார். தன்னுடைய அம்மாவை மனைவியே கொலை செய்த தகவல் தெரிந்ததும் காவல் நிலையத்திலேயே வெங்கடேசன் கதறி துடித்தார். அவருக்கு உறவினர்கள் ஆறுதல் கூறினர். இந்தக் கொலை குறித்து தொடர்ந்து விசாரித்து வருகிறோம்'' என்றனர்.

திண்டுக்கல்: வைக்கோல் லாரியில் சென்ற சிறுவன்; மின்சாரம் தாக்கி உயிரிழந்த சோகம்!

திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அருகேயுள்ள மார்க்கம்பட்டி எல்லைப்பட்டியைச் சேர்ந்தவர் தினேஷ்குமார் (23). லாரி ஓட்டுநரான இவர் தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து வைக்கோல் ஏற்றிக்கொண்டு ஈச்சர் லாரியில் எல்... மேலும் பார்க்க

கூட்டு பாலியல் வன்கொடுமை ; கொலை - உடலை திறந்தவெளியில் வீசிய கும்பல்; கடித்து குதறிய நாய்கள்

டெல்லியின் வடமேற்குயில் உள்ள குஷாக் சாலையில் உள்ள ஸ்வரூப் நகர் பகுதியில் ஜெய்பால் ராணாவின் வயல் பகுதிக்கு அருகே மைனர் பெண் ஒருவரின் சிதைந்த உடல் கடந்த 13ம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது. உடலின் சில பகுதிக... மேலும் பார்க்க

பிச்சை போட மறுத்த பெண்; மூக்கைக் கடித்து மூக்குத்தியைப் பறித்த யாசகர்; உத்தரப்பிரதேசத்தில் துணிகரம்

மும்பை புறநகரில் உள்ள நவிமும்பை கோபர் கைர்னே என்ற இடத்தைச் சேர்ந்த மோனிகா ரெய்னா என்ற பெண் உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் உள்ள கோவர்தனில் கடந்த ஆறு மாதங்களாகத் தங்கி இருந்து மத சடங்குகளில் பங்கேற்று ... மேலும் பார்க்க

சௌதி அரேபியாவில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழக மீனவர்கள்; அரசின் நடவடிக்கை- திருச்சி வந்தடைந்த உடல்கள்!

சவுதி அரேபியாவில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்த மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியை அடுத்துள்ள தொடுவாய் கிராமத்தைச் சேர்ந்த மாவீரன் மற்றும் கீழமூவர்கரையைச் சேர்ந்த சங்கர் ஆகிய இரண்டு மீனவர்கள், கடந்த... மேலும் பார்க்க

சிவகங்கை: கண்மாய்க்குள் ஓட ஓட விரட்டிக் கொல்லப்பட்ட இருவர்; 5 பேர் அதிரடி கைது!

சிவகங்கை அருகே செப்டம்பர் 16 அன்று 2 இளைஞர்கள் கொடூரமாக வெட்டிக் கொலைசெய்யப்பட்ட சம்பவத்தில், தொடர்புடைய 5 நபர்களை போலீஸார் கைதுசெய்துள்ளனர்.கொலை பின்னணிசிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே உள்ள கு... மேலும் பார்க்க

பரிகார ரூமில் பள்ளி சீருடை, லேப்டாப் முழுக்க ஆபாச வீடியோக்கள்; சேலம் சாமியாரின் அதிர்ச்சிப் பின்னணி

சேலம் மாவட்டம் வாழப்பாடியைச் சேர்ந்த 50 வயதான விஜயராஜா ஃபிரிட்ஜ், மிக்ஸி, கிரைண்டர் பழுது பார்க்கும் வேலை செய்து வந்திருக்கிறான்.‌‌ மேலும், சனீஸ்வரா பரிகார நிலையம் என்கிற பெயரில் போலியாக மாந்திரீக மைய... மேலும் பார்க்க