செய்திகள் :

சோளிங்கர்: பேருந்து மோதி விபத்து - தந்தை, மகள் பலியான சோகம்!

post image

ந்திர மாநிலம், சித்தூரைச் சேர்ந்தவர் சுரேஷ் பாபு (வயது 47). இவர் அங்குள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். இவரது மகள் மதுமிதா (21). இவர் அங்குள்ள கல்லூரியில் பயின்று வந்தார். சுரேஷ் பாபுவின் மனைவி மஞ்சுளாவுக்குத் தாய் வீடு திருத்தணி. திருத்தணியில் உள்ள உறவினரின் வீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக முன்கூட்டியே புறப்பட்டு வந்துவிட்டார் மஞ்சுளா. இந்த நிலையில், சுரேஷ் பாபு தனது மகள் மதுமிதாவை இன்று அழைத்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் சித்தூரில் இருந்து திருத்தணி நோக்கி வந்துகொண்டிருந்தார்.

விபத்து பகுதி

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்துள்ள பில்லாஞ்சி பகுதியில் வந்தபோது எதிரே வந்த அரசுப் பேருந்து எதிர்பாராத விதமாக இவர்கள் பயணித்த இருசக்கர வாகனம் மீது மோதியது. இந்த விபத்தில் சுரேஷ்பாபுவும், மகள் மதுமிதாவும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்ததும் சோளிங்கர் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப் பதிவு விபத்து ஏற்படுத்திய பேருந்து ஓட்டுரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த துயரச் சம்பவம், அவர்களின் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை : நாளை திருமணம் நடைபெற இருந்த நிலையில் மணப்பெண் விபத்தில் உயிரிழந்த சோகம்!

திண்டுக்கல் மாவட்டம் வெள்ளோடு கவின் நர்சரியை சேர்ந்தவர் சிமியோன் மகன் ஜெப பாஸ்டின் (வயது 29) காஷ்மீரில் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும்திண்டுக்கல் மாவட்டம் காமலாபுரம் சக்கையா நாயக... மேலும் பார்க்க

மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகேயுள்ள பிரபல திரையங்கு கட்டிடத்தில் தீ விபத்து!

மதுரை மீனாட்சியம்மன் கோவில் மேற்கு கோபுரம் அருகேயுள்ள மேற்கு கோபுர வீதி பகுதியில் 1939ஆம் ஆண்டு முதல் பழமையான சென்ட்ரல் தியேட்டர் செயல்பட்டுவந்த நிலையில் கொரோனா காலகட்டத்தில் போதிய ரசிகர்கள் வருகையின்... மேலும் பார்க்க

காட்பாடி: தேவாலய கட்டுமானப் பணியின்போது விபத்து - இடிபாடுகளில் சிக்கிய 12 தொழிலாளிகள்; இருவர் பலி?

வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்துள்ள மஞ்சு கிருஷ்ணாபுரம் கிராமத்தில் சி.எஸ்.ஐ சியோன் மலை தேவாலய நிர்வாகத்தின் சார்பாக போதகர் ஜோன் கிருபாகரன் என்பவரால் புதிதாக பெரிய தேவாலயம் கட்டும் பணி நடைபெற்று வருக... மேலும் பார்க்க

மதுரை: லாரியிலிருந்து விழுந்த இரும்புப் பொருள் - ஜல்லிக்கட்டு நண்பர்கள் இருவர் உயிரிழந்த சோகம்

சோழவந்தான் அருகேயுள்ள சித்தாலங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கோபால் மற்றும் அய்யனார். இருவரும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமின்றி, ஜல்லிக்கட்டு போட்டிகளில் ஆர்வத்துடன் பங்கேற்று வந்த மாடுபிடி வீரர்கள்.ப... மேலும் பார்க்க

சரிந்து விழுந்த 5 மாடி மாணவர் விடுதி: 6 பேர் உயிரிழந்த சோகம் - மீட்புப் பணி தீவிரம்

தெற்கு டெல்லியின் சத்யா நிகேதன் பகுதியில் சுமார் 30 ஆண்டுகள் பழமையான 5 மாடி கட்டிடம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இடிந்து விழுந்த விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மாணவர்களுக்கான விடுதியாகச் செயல்ப... மேலும் பார்க்க

"பார்க்கவே முடியாத கோரமான காட்சி" - திருச்சூர் விபத்தில் திண்டுக்கல் கல்லூரி மாணவர்கள் 8 பேர் மரணம்

கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள கைப்பமங்கலத்தில், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு லாரியின் பின்புறம் கார் மோதிய விபத்தில் 8 கல்லூரி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.​ ... மேலும் பார்க்க