செய்திகள் :

சரிந்து விழுந்த 5 மாடி மாணவர் விடுதி: 6 பேர் உயிரிழந்த சோகம் - மீட்புப் பணி தீவிரம்

post image

தெற்கு டெல்லியின் சத்யா நிகேதன் பகுதியில் சுமார் 30 ஆண்டுகள் பழமையான 5 மாடி கட்டிடம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இடிந்து விழுந்த விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மாணவர்களுக்கான விடுதியாகச் செயல்பட்டு வந்த இக்கட்டடத்தின் தரைத்தளத்தில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வந்த நிலையில், கடந்த சில நாட்களாகப் பெய்த மழையால் நிலத்தடியில் நீர் தேங்கி கட்டிடத்தின் அடித்தளம் பலவீனமடைந்ததாக உள்ளூர்வாசிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த இடிபாடுகளுக்குள் 15 முதல் 20 பேர் வரை சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதால், தீவிர மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மீட்புப் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF), டெல்லி தீயணைப்புத் துறை, காவல்துறை, டெல்லி மாநகராட்சி (MCD) மற்றும் சிவில் டிஃபென்ஸ் ஆகிய அமைப்புகள் இணைந்து செயல்பட்டு வருகின்றன.

இடிந்து விழுந்த கட்டடம்
இடிந்து விழுந்த கட்டடம்

NDRF அமைப்பின் 70 வீரர்கள் மற்றும் மோப்ப நாய் படைகள் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்கள் சுவாசிப்பதற்காக ஆக்சிஜன் சிலிண்டர்கள் இடிபாடுகளுக்கு இடையே இறக்கப்பட்டுள்ளன. இடிபாடுகளில் சிக்கிய மாணவர்கள் சிலர் தங்களது செல்போன்கள் மூலம் உதவி கேட்டு அழைத்த காட்சிகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

மீட்கப்பட்டவர்கள் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒருவருக்குக் கை, கால்களில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்த விபத்தைத் தொடர்ந்து, முதலமைச்சர் ரேகா குப்தா சம்பவ இடத்தைப் பார்வையிட்டு, காயமடைந்தவர்களை மருத்துவமனையில் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், இச்சம்பவம் தொடர்பாக விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளார். மேலும், கட்டட உரிமையாளர் ஹரிராம் மற்றும் சிலர் மீது முறையற்ற பராமரிப்பு மற்றும் மனித உயிருக்கு ஆபத்து விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

"பார்க்கவே முடியாத கோரமான காட்சி" - திருச்சூர் விபத்தில் திண்டுக்கல் கல்லூரி மாணவர்கள் 8 பேர் மரணம்

கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள கைப்பமங்கலத்தில், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு லாரியின் பின்புறம் கார் மோதிய விபத்தில் 8 கல்லூரி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.​ ... மேலும் பார்க்க

நேபாளம்: சடலங்கள் கிடைக்காததால் பொம்மைகளை வைத்து இறுதிச்சடங்கு - நெஞ்சை உலுக்கும் சோகம்

நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதிகளில் ஏற்பட்ட திடீர் பேரழிவு வெள்ளத்தால் பல கிராமங்கள் தடம் தெரியாமல் அழிந்துபோயிருக்கின்றன. பயங்கர அதிர்வுடன் பெருக்கெடுத்து வந்த சேறும் சகதியுமான வெள்ளப்பெருக்கில... மேலும் பார்க்க

Nepal: ஒரே கட்டடத்துக்குள் 24 சடலங்கள்; சேற்றுக்குள் உறைந்த உடல்கள் - போராடி மீட்ட மீட்புக்குழு

நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதிகளில் ஏற்பட்ட திடீர் பேரழிவு வெள்ளத்தால் பல கிராமங்கள் தடம் தெரியாமல் அழிந்துபோயிருக்கின்றன. பயங்கர அதிர்வுடன் பெருக்கெடுத்து வந்த சேறும் சகதியுமான வெள்ளப்பெருக்கில... மேலும் பார்க்க

கோவை: அடுத்தடுத்து 20 சிலிண்டர்கள் வெடித்து விபத்து - தீக்கிரையான 50 வீடுகள்!

கோவை நவஇந்தியா பகுதியில் தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இங்கு பணிபுரியும் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்குவதற்காக அப்பகுதியில் தகரத்திலான தற்காலிக குடியிருப்புகள்... மேலும் பார்க்க

Nepal: `நேபாளத்துக்கு மீண்டும் 72 மணி நேரத்தில் ஆபத்து' - சீனா எச்சரிக்கை | முழு விவரம்

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கின் காரணமாக உயிரிழப்புகளின் எண்ணிக்கை இன்னும் முழுமையாக வெளியாகாத நிலையில், அங்கு மற்றொரு இயற்கை பேரிடர் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதாக சீனா எச்சரித்துள்ளது. நேப... மேலும் பார்க்க

Nepal: ”கடைசியாக எடுத்த போட்டோவை அனுப்பினார்” - அம்மாவைப் பற்றி தகவல் கிடைக்காததால் மகன் வேதனை

கும்பகோணம் நாகேஸ்வரன் வீதியில் உள்ள சூப்பர் யாத்ரா ஏஜென்ஸி மூலம் கடந்த 23ம் தேதி தமிழகத்தின் பல மாவட்டங்களைச் சேர்ந்த குறிப்பாக தஞ்சாவூர், திருச்சி, கும்பகோணம், சிதம்பரம், மயிலாடுதுறை, சென்னை உள்ளிட்ட... மேலும் பார்க்க