50 ஆண்டுகால அவதி... சுமார் 1 கிலோ மீட்டர் சாலைக்காக அலையும் எம்.செட்டிப்பட்டி மக...
Career: 'டிகிரி போதும்' SBI-ல் வேலைவாய்ப்பு; ஒரு மாதத்திற்கே குறைந்தபட்ச சம்பளம் ரூ.2.25 லட்சம்!
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI)-ல் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
என்ன பணி?
ஒப்பந்தம் அடிப்படையில் ஸ்பெஷலிஸ்ட் கேடர் ஆபீசர் (Specialist Cadre Officer). இது ஐந்து ஆண்டுகால ஒப்பந்தப் பணி.
மொத்த காலிப்பணியிடங்கள்: 207
வயது வரம்பு: குறைந்தபட்சம் 23, அதிகபட்சம் 50.
சம்பளம்: அதிகபட்சமாக ஆண்டுக்கு ரூ.97 லட்சம் (மாதம் ரூ.8.08 லட்சம்); குறைந்தபட்சமாக ஆண்டுக்கு ரூ.27 லட்சம் (மாதம் ரூ.2.25 லட்சம்)

கல்வித் தகுதி: பணிக்குப் பணி கல்வித் தகுதி மாறுபடுகிறது. ஆனால், அதில் குறைந்தப்பட்ச கல்வித் தகுதி ஏதேனும் ஒரு டிகிரி. மேலும், சில அனுபவங்களும் கேட்கப்படுகிறது. இதை பக்கம் 6 - 12-ல் தெரிந்துகொள்ளலாம்.
எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?
பெர்சனல், தொலைபேசி அல்லது வீடியோ நேர்காணல்.
விண்ணப்பிக்கும் இணையதளம்:recruitment.sbi.bank.in
விண்ணப்பிக்க கடைசி தேதி: செப்டம்பர் 25, 2026.
மேலும் விவரங்களை தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.
உங்கள் நண்பர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு இந்தச் செய்தியைப் பகிருங்கள்!

















