செய்திகள் :

Career: IOB-ல் வேலை, டிகிரி போதும்; தமிழ்நாட்டில் மட்டும் 100 பணியிடங்கள் - சம்பளம் ரூ.85,000 வரை!

post image

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

என்ன பணி?

உள்ளூர் வங்கி அலுவலர் (Local Bank Officer). முதல் இரண்டு ஆண்டுகள் புரோபேஷன் காலம். பின்னர், குறிப்பிட்ட நபரின் பணி பிடித்திருந்தால் பணி நிரந்தரம் செய்யப்படும்.

மொத்த காலிப்பணியிடங்கள்: 250 (தமிழ்நாட்டில் 100)

வயது வரம்பு: குறைந்தபட்சம் 20; அதிகபட்சம் 30 (சில பிரிவினருக்குத் தளர்வுகள் உண்டு)

சம்பளம்: ரூ.48,480 - 85,920

கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி - வேலைவாய்ப்பு
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி - வேலைவாய்ப்பு

குறிப்பு: கட்டாயம் அந்தந்தப் பிராந்திய மொழிகள் எழுத, பேச, படிக்க நன்கு தெரிந்திருக்க வேண்டும்.

எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?

ஆன்லை தேர்வு, மொழி திறன் தேர்வு, நேர்காணல்.

தேர்வு மையங்கள்: சென்னை, மதுரை, திருநெல்வேலி, சேலம், கோவை, திருச்சி, வேலூர், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், விருதுநகர், கன்னியாகுமரி அல்லது நாகர்கோயில், தஞ்சாவூர், கடலூர்.

விண்ணப்பிக்கும் இணையதளம்: ibpsreg.ibps.in

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஆகஸ்ட் 24, 2026.

மேலும், விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

உங்கள் நண்பர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு இந்தச் செய்தியைப் பகிருங்கள்!

B.E, B.Tech படித்திருக்கிறீர்களா? `ரூ.1.2 லட்சம் சம்பளம்' - இந்தியக் கடற்படையில் வேலை வாய்ப்பு!

இந்தியக் கடற்படையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. என்ன பணி?நிர்வாகப் பிரிவு (GS(X) / ஹைட்ரோ பிரிவு), விமானி, கடற்படை வான்வழிச் செயல்பாட்டு அதிகாரி (கண்காணிப்பாளர்/Observer), வான்வழிப் போக்க... மேலும் பார்க்க