செய்திகள் :

`குழந்தை பெறுவதற்கு மட்டுமா பெண்கள்?' மறுமணம் தவிர்த்து சொந்தகாலில் நிற்க போராடும் இளம் கைம்பெண்கள்

post image

மகாராஷ்டிராவின் விதர்பா மற்றும் மராத்வாடா பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொள்கின்றனர். மேற்கு விதர்பாவில் 2001 மற்றும் 2024 க்கு இடையில் அகோலா, அமராவதி, புல்தானா, வாஷிம் மற்றும் யவத்மால் மாவட்டங்களில் 30,969 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர்.

யவத்மாலில் மட்டும் 2026 ஜனவரி மற்றும் மே இடையே 102 விவசாயிகள் தற்கொலைகள் செய்து கொண்டுள்ளனர். இதனால் அவர்களின் மனைவிகள் கைம்பெண் ஆகும் நிலை ஏற்படுகிறது. அரசு கொடுக்கும் சொற்ப நிதியை கொண்டு அவர்கள் மேற்கொண்டு குழந்தைகளுடன் எப்படி வாழ்வது என்று தெரியாமல் திணறிக்கொண்டிருக்கின்றனர்.

மறுமணத்தை நிராகரிக்கும் பெண்கள்

ஆனால் சமீபத்திய ஆய்வின் படி தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளின் மனைவிகள் மற்றொரு திருமணத்தை பற்றி சிந்திக்காமல் சொந்தமாக சம்பாதித்து சொந்தக்காலில் நிற்கவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றனர். கைம்பெண் ஆனவர்களின் அதிகமானோர் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்கின்றனர்.

அவர்களை திருமணம் செய்து கொள்ள அதிகமானோர் முன் வருகின்றனர். அப்பெண்களின் பெற்றோரும் தங்களது மகளிடம் மறுதிருமணம் செய்து கொள்ளும்படி நிர்ப்பந்தம் செய்து வருகின்றனர்.

8 மாதம் கர்ப்பமாக இருந்தபோது...

ஆனால் அவர்களின் நிர்ப்பந்தத்திற்கு பணியாமல் தனியாகத்தான் வாழ்வேன் என்று கூறிக்கொண்டிருக்கின்றனர். மகாராஷ்டிராவின் விவசாயிகள் தற்கொலையின் மையப்பகுதியான விதர்பா பிராந்தியத்தின் யவத்மால் மாவட்டத்தில் உள்ள ஒரு தொலைதூர கிராமமான ஜட்கானில் வசிக்கும் நீலிமா 8 மாத கர்ப்பமாக இருந்தபோது அவரது கணவர் தற்கொலை செய்து கொண்டார். 2011ம் ஆண்டு திருமணமான நீலிமா தனது மேல்நிலைப் பள்ளிக் கல்வியை கூட முடிக்க முடியவில்லை. குடும்பத்தின் நிலத்தில் விவசாயம் செய்த அவரது கணவர், குடிபோதையில் போராடினார்.

இது குறித்து நீலிமா கூறுகையில்,''குடிப்பதை நிறுத்த எல்லா முயற்சிகளையும் செய்தேன், ஆனால் என்னால் முடியவில்லை. திருமணமாகி மூன்று வருடங்கள் ஆன நிலையில், அவர் தற்கொலை செய்து கொண்டார். என்னை 26 வயதில் விதவையாக்கிவிட்டார். அவர் இறந்த ஒரு மாதத்திற்குப் பிறகு, எனக்கு மகன் பிறந்தான். அடுத்தடுத்த ஆண்டுகளில், பெற்றோர் மற்றும் உறவினர்கள் மூலம் திருமண வரன்கள் வந்தன, பலர் என்னிடம் நேரடியாகவும் மறைமுகமாகவும் திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்தனர்.

ஆனால் நான் அனைத்தையும் நிராகரித்துவிட்டேன். எனது அந்த முடிவு சரியானதுதான்''என்று தனது இரு அறைகள் கொண்ட மண் வீட்டின் மூலையில் நின்றவாறு பேசினார்.

நீலிமாவின் மாமனார் மற்றும் மாமியார் வீட்டார், நீலிமா தங்கள் குடும்பத்தின் ஒரு பகுதியாக இல்லை என்றும், அவருக்கு தங்கள் நிலத்தில் உரிமை இல்லை என்றும் அறிவித்தனர். கணவரின் மரணத்திற்குப் பிறகு வழங்கப்பட்ட அரசு இழப்பீடு அவர்களின் கணக்கில் செலுத்தப்படாமல் நேரடியாக நீலிமா வங்கி கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டதால் அவர்கள் கோபமடைந்தனர்.

நீலிமா தனது தனது பெற்றோர் வீட்டில் தஞ்சம் புகுந்துள்ளார். அவர் தையல் வேலை செய்ய ஆரம்பித்துள்ளார். ஒரு இளம் பெண் ஆணின் ஆதரவின்றி தனியாக ஒரு குழந்தையை வளர்ப்பது சிரமமாக இருக்கும் என்று கூறி, அவரை மறுமணம் செய்து கொள்ளும்படி அவருடைய பெற்றோர் வற்புறுத்தினர்.

மறுமணம்

ஆனால் திருமண யோசனைகள் வந்தாலும், மீண்டும் அந்த "பொறிக்குள்" நுழைய விரும்பவில்லை என்று நீலிமா உறுதியாக தெரிவித்துவிட்டார்.

கணவன் வீட்டில் ஏற்க மறுப்பு

அவரது கணவர் வீட்டார் அவரையும் அவரது மகனையும் ஏற்க மறுத்ததால், அவர் தன் கணவனின் நிலத்தின் பங்கை கொடுக்கவேண்டும் என்று கேட்டார். மேலும் இதற்காக கிராம பெரியவர்களின் கூட்டத்தைக் கூட்டினார். இறுதியில், அவரது கணவர் வீட்டார் அவரை மூன்று ஏக்கர் நிலத்தில் பயிரிட அனுமதிக்க ஒப்புக்கொண்டார். இருப்பினும், நிலத்தின் சட்டப்பூர்வ உரிமை அவரது மகனுக்கு 18 வயது வந்தவுடன் மட்டுமே செல்லும் என்று அவர்கள் தெளிவுபடுத்தினர். நீலிமா மறுமணம் செய்து கொண்டால், நிலம் அவரது புதிய கணவனுக்குச் சென்றுவிடும் என்று அவரது கணவர் வீட்டார் மற்றும் சக கிராமவாசிகள் பயந்தனர்.

அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. நிலத்தில் இறங்கி, சாகுபடியைத் தொடங்குவதே எனது முன்னுரிமையாக இருந்தது,” என்று அவர் கூறுகிறார். இது போன்று தற்கொலை செய்த பல விவசாயிகளின் மனைவிகள் இரண்டாவது திருமணத்தை நிராகரித்துள்ளனர். மகாராஷ்டிராவில் திருமணம் செய்ய பெண் கிடைக்காமல் அதிக அளவில் இளம் விவசாயிகள் போராடிக்கொண்டிருக்கின்றனர்.

அவர்கள் கைம்பெண்களை திருமணம் செய்து கொள்ள தயாராக இருக்கின்றனர். ஆனால் அவர்கள் அனைவரும் 40 வயதை கடந்தவர்களாக இருக்கின்றனர். ்

தற்கொலையால் தங்கள் கணவனை இழந்தவர்கள் மற்றும் நீலிமாவின் பாதையில் நடந்தவர்கள் சுயஉதவிக்குழு உறுப்பினர்களாக மாறி கடன் பெற்று தொழில் தொடங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இது குறித்து தனது கணவனை இழந்த சபுதாய் என்ற பெண் கூறுகையில்,''வாழ்க்கை ஆண்களை சுற்றியே சுழல வேண்டும். இல்லையெனில் அதற்கு எந்த மதிப்பும் இல்லை என்று எனக்குக் கற்பிக்கப்பட்டது, அதை நான் இப்போது தினமும் அனுபவிக்கிறேன்," என்கிறார். பலமுறை பயிர் நஷ்டம் மற்றும் கடன் தொல்லையால் எனது கணவர் தற்கொலை செய்து கொண்டார். எனது இரண்டு மகள்களுக்கும் இப்போது திருமணமாகிவிட்டது.

மகன் இல்லாததால் நிலத்தை பறித்துக்கொண்டனர்

மகன் இல்லாத ஒரு பெண்ணுக்கு அது தேவையில்லை என்று கூறி எனது மைத்துனர் எனது நிலத்தைக் பறித்துக்கொண்டார். ஒரு ஆணின் ஆதரவு தேவை என்பதை நினைவூட்டி வளர்க்கப்பட்டேன். இருப்பினும் நான் நன்றாக சமாளித்து என் சொந்த வழியில் போராடினேன்," என்று அவர் கூறுகிறார். மறுமணம் பெரும்பாலும் நிவாரணத்தை விட அதிக சிக்கல்களைத் தருகிறது என்பதை அதிகமான கைம்பெண்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து வனிதா என்ற பெண் கூறுகையில்,''எங்களைப் போன்ற பெண்கள் அதிக உணர்ச்சி மற்றும் நிதி சுமைகளைச் சுமந்துகொண்டு திருமணத்தில் சிக்கித் தவித்தோம்.

குழந்தை பெற மட்டுமே பெண்களா?

மறுமணம் பற்றிய எண்ணம் ஒரு மேலான பயத்தை எழுப்புகிறது. இரண்டாவது கணவர் முதல் கணவரைப் போல் இருந்தால் என்ன செய்வது? அது ஒரு அதிர்ச்சியிலிருந்து இன்னொரு அதிர்ச்சிக்கு நகர்கிறது. பல இளம் கைம்பெண்கள், குழந்தைகளாக இருந்தபோதே திருமணம் செய்து, அடிப்படைக் கல்வி கூட மறுக்கப்பட்டனர். இளம் வயதிலேயே தாயாகி, பின் கைம்பெண்ணாகி, கனவுகளுக்கு இடமில்லாமல் போய்விட்டது. இங்கு பெண்கள் திருமணம் செய்து குழந்தைகளைப் பெறுவதற்காக மட்டுமே வளர்க்கப்படுகிறார்கள்" என்று வனிதா மேலும் கூறினார்.

நீலிமாவும் வனிதாவும் தங்களின் தோட்டத்தில் விளைந்த சோயாபீன் மற்றும் பருத்தியை ராலேகானில் உள்ள வேளாண் உற்பத்தி சந்தைக் குழுவிற்கு (ஏபிஎம்சி) முதல் முறையாக எடுத்துச் சென்றபோது, ​​வியாபாரிகளிடமிருந்து அவர்களுக்கு சிறிய ஊக்கம் மட்டுமே கிடைத்தது. ஆனாலும் இதுவும் கடந்து போகும் என்று கூறி தங்களது பயணத்தை தொடர்கின்றனர் நம்பிக்கையாக.

`ஈரான் தாக்கலாம்' - துருக்கியிலிருந்து உணவு லாரியில் பதுங்கி விமானநிலையம் சென்ற அதிபர் ட்ரம்ப்?

கடந்த பிப்ரவரியில் இருந்து ஈரான் மீது இஸ்ரேலும், அமெரிக்காவும் தாக்குதல் நடத்தி வந்தன. கடந்த மாதம் இஸ்ரேல் நேரடி தாக்குதலில் இருந்து ஒதுங்கிக்கொண்ட நிலையில் அமெரிக்கா மட்டும் ஈரான் மீது தாக்கியது. ஈரா... மேலும் பார்க்க

தனியாக 4 பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கிய தந்தை; முதியோர் இல்லத்தில் இறந்தபோது பார்க்கவராத பிள்ளைகள்

மத்தியப் பிரதேசத்தில் உள்ள இந்தூரைச் சேர்ந்த கன்ஷ்யாம் என்பவர் தனது மனைவி இளம் வயதில் 4 குழந்தைகளை விட்டுவிட்டு இறந்துவிட்ட நிலையில் தனியாக வேறு திருமணம் செய்து கொள்ளாமல் தனது குழந்தைகளைப் போராடி வளர்... மேலும் பார்க்க

`இந்தியாவிலேயே அதிக விலை' டெல்லியில் ரூ.271 கோடிக்கு சொகுசு பங்களா வாங்கிய தொழிலதிபர் மானவ் சர்தானா

டெல்லி மற்றும் அதன் அருகில் உள்ள குருகிராம் பகுதியில் சொகுசு அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் பங்களாக்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் ... மேலும் பார்க்க

குடும்பத்துக்கு பயந்து ரூ.5 லட்சத்தை புதைத்து வைத்த விவசாயி - அரித்து சேதப்படுத்திய கரையான்கள்

பொதுவாக பண்டைய காலத்தில் தங்கம் போன்ற உலோகங்களை யாருக்கும் தெரியாமல் மறைத்து வைக்க பூமிக்கு அடியில் புதைத்து வைப்பது வழக்கம். ஆனால் ராஜஸ்தான் மாநிலம் லோத்ரா மாவட்டத்தில், விவசாயி ஒருவர் தனது பணத்தை தன... மேலும் பார்க்க

சேரும் முன்பே சேட்டை; "லேப்டாப்பைத் தரவில்லை என்றால் சட்ட நடவடிக்கை" - கடுப்பான CEO-வின் பதிவு வைரல்

ஜெய்ப்பூரில் உள்ள 'வன்ஷிவ் டெக்' நிறுவனத்தின் சி.இ.ஓ கவுரவ் கதேர்பால், சமீபத்தில் பகிர்ந்த எக்ஸ் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.அவரது நிறுவனத்தில் 15 LPA சம்பளத்தில் தேர்வான ஒரு பெண், 3 மாத நோட்டீஸ... மேலும் பார்க்க

மும்பையில் அமேசான், ஐ.ஐ.டி உணவு லைசென்ஸ் ரத்து: `கொசுவை வாளால் கொல்லாதீர்கள்' - ஐகோர்ட் விமர்சனம்

மகாராஷ்டிராவில் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் புதிய கமிஷனராக ஐ.ஏ.எஸ் அதிகாரி துகாராம் முண்டே நியமிக்கப்பட்டதில் இருந்து அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அவரது செயல்பாடுகளால் மும்பை உட்பட மக... மேலும் பார்க்க