செய்திகள் :

`ஈரான் தாக்கலாம்' - துருக்கியிலிருந்து உணவு லாரியில் பதுங்கி விமானநிலையம் சென்ற அதிபர் ட்ரம்ப்?

post image

கடந்த பிப்ரவரியில் இருந்து ஈரான் மீது இஸ்ரேலும், அமெரிக்காவும் தாக்குதல் நடத்தி வந்தன. கடந்த மாதம் இஸ்ரேல் நேரடி தாக்குதலில் இருந்து ஒதுங்கிக்கொண்ட நிலையில் அமெரிக்கா மட்டும் ஈரான் மீது தாக்கியது. ஈரானும் வளைகுடாவில் உள்ள அமெரிக்க நிலைகள் மீது தாக்குதல் நடத்தியது. தற்போது இரு நாடுகளும் தாக்குதல்களை நிறுத்தி இருக்கின்றன.

கடந்த மாதம் நேட்டோ அமைப்பின் கூட்டத்தில் பங்கேற்க அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் துருக்கி சென்று இருந்தார். அவர் துருக்கி செல்லும்போதே ஈரானின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் மிகவும் ரகசியமாகத்தான் சென்றார். கத்தார் நன்கொடையாக வழங்கிய ஜெட் விமானத்தை ட்ரம்ப் அங்காராவுக்கு செல்ல பயன்படுத்தினார்.

ஆனால் அவர் எதிர்பாராதவிதமாக துருக்கியை விட்டு வெளியேறும் போது பழைய ஏர்ஃபோர்ஸ் விமானம் ஒன்னைப் பயன்படுத்தினார், அந்த விமானம் மிகவும் சிறியது ஆகும். புதிய விமானத்தின் பாதுகாப்பின் மீது சந்தேகம் அடைந்து பழைய சிறிய விமானத்தை பயன்படுத்தினாரா அல்லது ஈரானுக்கு பயந்து பழைய சிறிய விமானத்தை பயன்படுத்தினாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. துருக்கியில் மாநாடு முடிந்த பிறகு அவர் ஈரானுக்கு பயந்து அங்கிருந்து தப்பித்து வந்தது போன்று வந்து சேர்ந்து இருக்கிறார் என்கிறார்கள்.

அங்காராவில் வழக்கமான பாதுகாப்பு வாகனத்தில் வந்தால் ஈரான் தாக்குதல் நடத்த வாய்ப்பு இருக்கிறது என்று கருதி மாநாடு நடந்த இடத்தில் இருந்து அங்காரா விமான நிலையத்திற்கு உணவு எடுத்துச்செல்லும் ஒரு லாரியில் ரகசியமாக பதுங்கி இருந்து விமான நிலையம் வந்திருப்பதாக அமெரிக்க செய்தி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. வந்து சேர்ந்த பிறகு அமெரிக்காவில் இருந்து வந்த விமானத்தை பயன்படுத்தாமல் வேறு விமானத்தை பயன்படுத்தி தனது நாட்டிற்கு சென்றார்.

இது குறித்து அமெரிக்காவின் தகவல் தொடர்பு இயக்குனர் ஸ்டீவ் சியுங் கூறுகையில், ''​​கத்தார் நன்கொடையாக வழங்கிய ஜெட் ஜனாதிபதி மற்றும் அவரது ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் உயர்மட்ட பாதுகாப்பு நெறிமுறைகளுடன் பொருத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி சமீபத்தில் கூறியது போல், அமெரிக்காவின் பல எதிரிகள் அவர் மீது கண் வைத்துள்ளனர். மேலும் அந்த அச்சுறுத்தல்களைத் தீர்க்க நாங்கள் எங்கள் வசம் உள்ள ஒவ்வொரு கருவியையும் பயன்படுத்துகிறோம்" என்று சியுங் கூறினார்.

இதற்கிடையே ஈரான் மீது ராணுவ தாக்குதல் நடத்துவதற்கு பதில் அந்நாட்டிற்கு அனைத்து வழிகளிலும் பொருளாதார நெருக்கடி கொடுக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது அவரது முந்தைய நிலைப்பாட்டில் இருந்து முற்றிலும் மாறுபட்டு இருக்கிறது. இதற்கு முன்பு அடிக்கடி ஈரான் மீது தாக்குவோம் என்று மிரட்டிக்கொண்டே இருந்தார்.

ஆனால் இப்போது மிரட்டுவதை கைவிட்டுவிட்டு பொருளாதார நெருக்கடி குறித்து ட்ரம்ப் பேச ஆரம்பித்து இருக்கிறார். அதோடு அணு ஆயுதம் தொடர்பாக பேசாமல் ஹார்மூஸ் ஜலசந்தியை திறப்பது தொடர்பாக பேசி ஒப்பந்தம் செய்து கொள்ளலாம் என்றும் ட்ரம்ப் கூறி தனது நிலையில் இருந்து இறங்கி வந்திருக்கிறார்.

அப்படி இருந்தும் அமெரிக்காவுடன் பேசுவதில்லை என்ற முடிவில் ஈரான் உறுதியாக இருப்பதாக தெரிகிறது. இதனால் தொடர்ந்து பதட்டம் நிலவி வருகிறது.

தனியாக 4 பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கிய தந்தை; முதியோர் இல்லத்தில் இறந்தபோது பார்க்கவராத பிள்ளைகள்

மத்தியப் பிரதேசத்தில் உள்ள இந்தூரைச் சேர்ந்த கன்ஷ்யாம் என்பவர் தனது மனைவி இளம் வயதில் 4 குழந்தைகளை விட்டுவிட்டு இறந்துவிட்ட நிலையில் தனியாக வேறு திருமணம் செய்து கொள்ளாமல் தனது குழந்தைகளைப் போராடி வளர்... மேலும் பார்க்க

`இந்தியாவிலேயே அதிக விலை' டெல்லியில் ரூ.271 கோடிக்கு சொகுசு பங்களா வாங்கிய தொழிலதிபர் மானவ் சர்தானா

டெல்லி மற்றும் அதன் அருகில் உள்ள குருகிராம் பகுதியில் சொகுசு அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் பங்களாக்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் ... மேலும் பார்க்க

குடும்பத்துக்கு பயந்து ரூ.5 லட்சத்தை புதைத்து வைத்த விவசாயி - அரித்து சேதப்படுத்திய கரையான்கள்

பொதுவாக பண்டைய காலத்தில் தங்கம் போன்ற உலோகங்களை யாருக்கும் தெரியாமல் மறைத்து வைக்க பூமிக்கு அடியில் புதைத்து வைப்பது வழக்கம். ஆனால் ராஜஸ்தான் மாநிலம் லோத்ரா மாவட்டத்தில், விவசாயி ஒருவர் தனது பணத்தை தன... மேலும் பார்க்க

`குழந்தை பெறுவதற்கு மட்டுமா பெண்கள்?' மறுமணம் தவிர்த்து சொந்தகாலில் நிற்க போராடும் இளம் கைம்பெண்கள்

மகாராஷ்டிராவின் விதர்பா மற்றும் மராத்வாடா பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொள்கின்றனர். மேற்கு விதர்பாவில் 2001 மற்றும் 2024 க்கு இடையில் அகோலா, அமராவ... மேலும் பார்க்க

சேரும் முன்பே சேட்டை; "லேப்டாப்பைத் தரவில்லை என்றால் சட்ட நடவடிக்கை" - கடுப்பான CEO-வின் பதிவு வைரல்

ஜெய்ப்பூரில் உள்ள 'வன்ஷிவ் டெக்' நிறுவனத்தின் சி.இ.ஓ கவுரவ் கதேர்பால், சமீபத்தில் பகிர்ந்த எக்ஸ் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.அவரது நிறுவனத்தில் 15 LPA சம்பளத்தில் தேர்வான ஒரு பெண், 3 மாத நோட்டீஸ... மேலும் பார்க்க

மும்பையில் அமேசான், ஐ.ஐ.டி உணவு லைசென்ஸ் ரத்து: `கொசுவை வாளால் கொல்லாதீர்கள்' - ஐகோர்ட் விமர்சனம்

மகாராஷ்டிராவில் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் புதிய கமிஷனராக ஐ.ஏ.எஸ் அதிகாரி துகாராம் முண்டே நியமிக்கப்பட்டதில் இருந்து அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அவரது செயல்பாடுகளால் மும்பை உட்பட மக... மேலும் பார்க்க