செய்திகள் :

சேரும் முன்பே சேட்டை; "லேப்டாப்பைத் தரவில்லை என்றால் சட்ட நடவடிக்கை" - கடுப்பான CEO-வின் பதிவு வைரல்

post image

ஜெய்ப்பூரில் உள்ள 'வன்ஷிவ் டெக்' நிறுவனத்தின் சி.இ.ஓ கவுரவ் கதேர்பால், சமீபத்தில் பகிர்ந்த எக்ஸ் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

அவரது நிறுவனத்தில் 15 LPA சம்பளத்தில் தேர்வான ஒரு பெண், 3 மாத நோட்டீஸ் பீரியடுக்குப் பிறகு பணியில் சேரவிருந்தார்.

கடைசி நேரத்தில் ரூ.50,000 கூடுதல் சம்பளம், ‘வொர்க் ஃபிரம் ஹோம்’ வசதி எனக் கேட்ட அனைத்து நிபந்தனைகளுக்கும் நிறுவனம் ஒப்புக்கொண்டது. பயிற்சிகள் வழங்கப்பட்டு, லேப்டாப்பும் அனுப்ப்பட்டது.

ஆனால், வேலைக்குச் சேர வேண்டிய முதல் நாளன்று அந்தப் பெண் அழைப்புகளை ஏற்கவில்லை. பின்னர், "தனிப்பட்ட காரணங்களால் பணியில் சேர முடியாது; லேப்டாப்பை நேரில் வந்து பெற்றுக்கொள்ளுங்கள்" எனக் கூறியுள்ளார்.

AI
AI

கோபமடைந்த சி.இ.ஓ, "லேப்டாப்பை உடனடியாகத் தராவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என மின்னஞ்சல் அனுப்பிய பிறகே அப்பெண் அதைத் திருப்பிக் கொடுத்தார்.

விசாரித்ததில், வேறொரு நிறுவனம் ரூ.25,000 கூடுதலாகத் தருவதாகக் கூறியதால் அந்தப் பெண் அங்கு சேர்ந்தது தெரியவந்தது. தொழில்முறையற்ற இந்தச் செயலால் அதிருப்தியடைந்த சி.இ.ஓ இச்சம்பவத்தைப் பதிவிட்டார்.

இதற்கு நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். "அந்தப் பெண் வேறு ஏதேனும் நியாயமான காரணத்திற்காக இப்படிச் செய்திருக்கலாம்" எனச் சிலர் ஆதரவாகப் பேச, பெரும்பாலானோர், "நிறுவனங்களை ஏமாற்றும் இதுபோன்ற போக்குகளைத் தடுக்க கடுமையான விதிமுறைகள் கொண்டுவரப்பட வேண்டும்" என வலியுறுத்தி வருகின்றனர்.

மும்பையில் அமேசான், ஐ.ஐ.டி உணவு லைசென்ஸ் ரத்து: `கொசுவை வாளால் கொல்லாதீர்கள்' - ஐகோர்ட் விமர்சனம்

மகாராஷ்டிராவில் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் புதிய கமிஷனராக ஐ.ஏ.எஸ் அதிகாரி துகாராம் முண்டே நியமிக்கப்பட்டதில் இருந்து அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அவரது செயல்பாடுகளால் மும்பை உட்பட மக... மேலும் பார்க்க

10 ஆண்டுகளாக வெட்டவேயில்லை: கின்னஸ் சாதனையில் இடம்பிடித்த 9 அடி நீள முடியுடைய உத்தரகாண்ட் பெண்

பெண்கள் தங்கள் தலைமுடியை பராமரிப்பதில் அதிக கவனம் எடுத்துக்கொள்வார்கள். இப்போது அதிகமான பெண்கள் முடியை நீளமாக வளரவிடாமல் வெட்டி விடுகிறார். ஆனால் சில பெண்கள் தங்களது முடி மிகவும் நீளமாக இருக்கவேண்டும்... மேலும் பார்க்க

'கடனை வசூலிக்க மிரட்டவோ நள்ளிரவில் போன் பண்ணவோ கூடாது' - ரிசர்வ் வங்கி புதிய உத்தரவு

கடன் வழங்கும் நிதி நிறுவனங்கள் அல்லது வங்கிகள் அதனை வசூலிக்க கடுமையாக நடந்து கொள்வதுண்டு. அதுவும் கிரெடிட் கார்டு போன்றவற்றிற்கு சரியான நேரத்தில் பணம் கட்டவில்லையெனில் இரவு நேரங்களில் போன் செய்து மிரட... மேலும் பார்க்க

`உன் அப்பாவை கொன்றேன், நீதான் அடுத்த குறி'- கொலை செய்யப்பட்ட மகா., அமைச்சர் மகனுக்கு கொலை மிரட்டல்

மும்பையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பாபா சித்திக் என்பவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு படுகொலை செய்யப்பட்டார். பாபா சித்திக் நடிகர் சல்மான் கானுக்கு மிகவும் நெருக்கமானவர் என்ற ஒரே காரணத்... மேலும் பார்க்க

உ.பி.யில் நூதன முயற்சி: நெடுஞ்சாலை ஈரத்தை காய வைக்க மின் விசிறிகளை கொண்டு வந்து வைத்த அதிகாரிகள்!

வடமாநிலங்களில் இப்போது மழை அதிக அளவில் பெய்து வருகிறது. இதனால் அனைத்து சாலைகளும் சேதமடைந்த நிலையில் இருக்கிறது. எனவே வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர். உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர... மேலும் பார்க்க

திடீரென நிரம்பி குலுங்கும் கிணற்று தண்ணீர்: குஜராத்தில் மர்ம கிணற்றை பார்க்க திரளும் மக்கள்! | Video

குஜராத் மாநிலம் மோர்பி அருகில் உள்ள விர்பர்தா என்ற கிராமத்தில் இருக்கும் கிணறு ஒன்று அங்குள்ள மக்களின் கவனத்தை ஈர்த்து இருக்கிறது. கடந்த 5 நாட்களாக அக்கிணற்றில் ஒரு அசாதாரண செயல்பாடு இருந்து வருகிறது.... மேலும் பார்க்க