செய்திகள் :

10 ஆண்டுகளாக வெட்டவேயில்லை: கின்னஸ் சாதனையில் இடம்பிடித்த 9 அடி நீள முடியுடைய உத்தரகாண்ட் பெண்

post image

பெண்கள் தங்கள் தலைமுடியை பராமரிப்பதில் அதிக கவனம் எடுத்துக்கொள்வார்கள். இப்போது அதிகமான பெண்கள் முடியை நீளமாக வளரவிடாமல் வெட்டி விடுகிறார். ஆனால் சில பெண்கள் தங்களது முடி மிகவும் நீளமாக இருக்கவேண்டும் என்று விரும்புவதுண்டு. உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர் தனது தலைமுடியை 9 அடி நீளத்திற்கு வளர்த்து இருக்கிறார். உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஹல்டிவானி என்ற இடத்தை சேர்ந்தவர் ரேனு தாரியல். இவர் தனது தலைமுடிக்கு பிரத்யேக கவனம் செலுத்தி வளர்த்து வருகிறார். தற்போது அவரது தலைமுடி 9 அடி நீளத்திற்கு வளர்ந்துவிட்டது.

இந்த சாதனை இப்பொது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துவிட்டது. கடந்த ஏப்ரல் மாதம் கின்னஸ் சாதனை புத்தக அதிகாரிகள் நேரில் வந்து ரேனுவின் முடி நீளத்தை அளந்து சென்றனர்.

இதில் ரேனுவின் முடி நீளம் 271.50 செண்டிமீட்டர் நீளம் இருந்தது. இதற்கு முன்பு 257 செண்டி மீட்டர் முடிதான் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்று இருந்தது. அந்த சாதனையை ரேனு முறியடித்து புதிதாக கின்னஸ் சாதனையில் இடம் பிடித்துள்ளார்.

இது குறித்து ரேனு கூறுகையில்,''2015-ஆம் ஆண்டில் இருந்து தலைமுடியை வளர்க்கத் தொடங்கினேன். அதன்பிறகு நான் அதை வெட்டவே இல்லை. நீண்ட முடி என்பது அழகு மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படுவதால் அதனால் ஈர்க்கப்பட்டு முடியை வளர்க்க முடிவு செய்தேன். ஒன்பது அடி நீளமுள்ள முடியைப் பராமரிப்பதற்கு அதிக கவனம் தேவைப்படுகிறது. முடியை ஆரோக்கியமாகவும் சேதமின்றியும் வைத்திருக்க, அதைக் கழுவுவதற்கும், உலர்த்துவதற்கும், சிக்கல்களை நீக்குவதற்கும் பல மணிநேரங்களைச் செலவிடுகிறேன்.

முடிகளை பராமரிக்க கடைகளில் விற்கப்படும் பொருட்களுக்கு பதிலாக, இயற்கையான கூந்தல் பராமரிப்பு முறையைப் பின்பற்றி, வீட்டிலேயே கூந்தல் எண்ணெய்களையும், ஷாம்புகளையும் தயாரிக்கிறேன். மேலும், இந்த பாரம்பரிய அழகு குறிப்புகளைத் தனது ஆன்லைன் தளத்தில் தன்னை பின்தொடர்பவர்களுடன் பகிர்ந்து, மற்றவர்களையும் இரசாயனங்கள் இல்லாத கூந்தல் பராமரிப்பை ஏற்றுக்கொள்ள ஊக்குவிக்கிறேன்''என்று தெரிவித்தார்.

ரேணுவின் சாதனை அவரை இணையத்திலும் பொதுவெளியிலும் பிரபலமான ஒருவராக மாற்றியுள்ளது. மக்கள் பெரும்பாலும் அவரது நீண்ட முடியைக் கண்டு வியப்படைகிறார்கள். தனது சாதனை ஒரு உலக சாதனையைத் தாண்டி இன்னும் பெரியதொரு விஷயத்தைப் பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும் என்று ரேனு விரும்புகிறார்.

'கடனை வசூலிக்க மிரட்டவோ நள்ளிரவில் போன் பண்ணவோ கூடாது' - ரிசர்வ் வங்கி புதிய உத்தரவு

கடன் வழங்கும் நிதி நிறுவனங்கள் அல்லது வங்கிகள் அதனை வசூலிக்க கடுமையாக நடந்து கொள்வதுண்டு. அதுவும் கிரெடிட் கார்டு போன்றவற்றிற்கு சரியான நேரத்தில் பணம் கட்டவில்லையெனில் இரவு நேரங்களில் போன் செய்து மிரட... மேலும் பார்க்க

`உன் அப்பாவை கொன்றேன், நீதான் அடுத்த குறி'- கொலை செய்யப்பட்ட மகா., அமைச்சர் மகனுக்கு கொலை மிரட்டல்

மும்பையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பாபா சித்திக் என்பவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு படுகொலை செய்யப்பட்டார். பாபா சித்திக் நடிகர் சல்மான் கானுக்கு மிகவும் நெருக்கமானவர் என்ற ஒரே காரணத்... மேலும் பார்க்க

உ.பி.யில் நூதன முயற்சி: நெடுஞ்சாலை ஈரத்தை காய வைக்க மின் விசிறிகளை கொண்டு வந்து வைத்த அதிகாரிகள்!

வடமாநிலங்களில் இப்போது மழை அதிக அளவில் பெய்து வருகிறது. இதனால் அனைத்து சாலைகளும் சேதமடைந்த நிலையில் இருக்கிறது. எனவே வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர். உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர... மேலும் பார்க்க

திடீரென நிரம்பி குலுங்கும் கிணற்று தண்ணீர்: குஜராத்தில் மர்ம கிணற்றை பார்க்க திரளும் மக்கள்! | Video

குஜராத் மாநிலம் மோர்பி அருகில் உள்ள விர்பர்தா என்ற கிராமத்தில் இருக்கும் கிணறு ஒன்று அங்குள்ள மக்களின் கவனத்தை ஈர்த்து இருக்கிறது. கடந்த 5 நாட்களாக அக்கிணற்றில் ஒரு அசாதாரண செயல்பாடு இருந்து வருகிறது.... மேலும் பார்க்க

An Ordinary Man : இயக்குநர் ரவி மோகன்; ஹீரோ யோகி பாபு - ஷூட்டிங் ஸ்பாட் ஜாலி போட்டோஷூட்!

An Ordinary Man Exclusive: “சாதாரண மனிதன் கடவுளாகுற கதைதான் An Ordinary Man” - இயக்குநர் ரவி மோகன் மேலும் பார்க்க

`எங்களுக்கு வர நேரமில்லை' - இறந்த தந்தை; இறுதிச்சடங்கை வீடியோ காலில் பார்த்த மகள்கள்

மும்பையை சேர்ந்த சிவ்சரண் ராம் ரத்தன் குப்தா. இவருக்கு மூன்று பெண் குழந்தைகள் இருக்கின்றனர். மூன்று பேருக்கும் திருமணம் செய்து கொடுத்துவிட்டார். அவர்கள் தங்களது குடும்பத்தோடு மகிழ்ச்சியாக இருக்கின்றனர... மேலும் பார்க்க