செய்திகள் :

அமித் ஷா, இன்று மாலை திருவண்ணாமலை கோயிலுக்கு வருகை; பாதுகாப்பு முன்னேற்பாடுகள் தீவிரம்!

post image

த்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம், புதுச்சேரியில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று மதியம் மும்பையில் இருந்து விமானத்தில் சென்னைக்கு வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவண்ணாமலைக்கு இன்று மாலை 4.20 மணியளவில் வரும் அமித் ஷா ரமண ஆசிரமத்துக்குச் சென்று, அங்கு சுமார் 1 மணிநேரம் நடைபெறும் சிறப்புப் பூஜைகளில் பங்கேற்கிறார்.

அதன்பிறகு, அண்ணாமலையார் கோயிலில் மாலை 6 மணியளவில் நடைபெறும் அபிஷேகத்தில் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்கிறார். இதையடுத்து, சாலைவழியாக இரவு 7 மணியளவில் புதுச்சேரிக்கு பயணம் மேற்கொள்கிறார். நாளை புதுச்சேரியில் நடைபெறும் விழாவில் காவலர்களுக்கு அமித்ஷா விருது வழங்குகிறார்.

அமித்ஷா

அமித்ஷா வருகையையொட்டி, திருவண்ணாமலையில் பாதுகாப்புப் பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரி மைதானம் மற்றும் கிரிவலப்பாதை உண்ணாமலை அம்மன் நகரில் ஹெலிபேடுகள் தயார்ச் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து, இங்கு ஹெலிகாப்டரை இறக்கி ஒத்திகையும் பார்க்கப்பட்டது.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் வந்தனா கார்க், எஸ்.பி உதயகுமார் ஆகியோருடன் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து உள்துறை பாதுகாப்பு அதிகாரிகளும் ஆலோசனை நடத்தினர். டிரோன்கள் பறக்கவிடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 3 அடுக்கு பாதுகாப்புடன் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள்.

ஈரான்: ``உயிருடன் இருக்கிறாரா மொஜ்தபா கமேனி?" - இஸ்ரேல் ஊடகங்கள் சொல்லும் தகவல்?

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளின் கூட்டு வான்வழித் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவரான அயதுல்லா அலி கமேனி கடந்த பிப்ரவரி 28 அன்று கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து, மொஜ்தபா காமேனி உச்சத் தலைவராகப் பொறுப்... மேலும் பார்க்க

``முதலமைச்சரிடம் பலமுறை வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லை" - அன்புமணி ராமதாஸ்

சென்னையில் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ``காவிரி பிரச்னையில் தி.மு.க தொடர்ந்து தமிழகத்திற்குத் துரோகம் செய்து வருகிறது. 1971-ல் உச்ச நீதிமன்றத்தில் நட... மேலும் பார்க்க

'வனத்துறையினர் ஏதாவது செய்தால் என்னுடைய எம்.பி பதவியை ராஜினாமா செய்வேன்' – தங்கதமிழ்செல்வன்

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே வருசநாடு, மேகமலை உள்ளிட்ட 90- க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்களில் மூன்று தலைமுறைகளுக்கும் மேலாக வசித்து வருவதோடு விவசாய தொழிலை செய்து வருகின்றனர். வருசநாடு உள்ளிட்ட 9 ... மேலும் பார்க்க

பழனி மட நில மோசடி வழக்கில் கைதானவர் சிறையில் உயிரிழப்பு!

பழனி தண்டபாணி சுவாமிகள் மடத்திற்கு சொந்தமான, ரூ.100 கோடி மதிப்பிலான 1.4 ஏக்கர் நிலம் கடந்த ஜூலை 6 ஆம் தேதி ரூ. 2 கோடிக்கு முறைகேடாக பத்திரபதிவு செய்யப்பட்டது தொடர்பாக பழனி அடிவார காவல் நிலையம் சார்பில... மேலும் பார்க்க

``அமெரிக்காவிடம் பல ஆண்டுகள் சரணடைந்தும்.!" - சவூதி அரேபியாவை சாடும் ஈரான்; காரணம் என்ன?

சவூதி அரேபியா, பாகிஸ்தான், துருக்கி இடையே பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகியிருப்பதை ஈரான் விமர்சித்திருக்கிறது. சவுதி அரேபியாவின் இளவரசர் முகமது பின் சல்மான், துருக்கி அதிபர் ரெசெப் தயிப் எர்டோகன் மற... மேலும் பார்க்க