செய்திகள் :

TNPL 2026: 40 பந்துகளில் சதம்... கோவையைச் சிதறடித்த சதுர்வேத்; மதுரையின் மிரட்டல் சேஸ்!

post image

திண்டுக்கல் NPR கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற TNPL 2026-ன் 7-வது போட்டியில், கோவை கிங்ஸ் - மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதின. 

முதலில் பேட்டிங் செய்த கோவை கிங்ஸ் 239 ரன்கள் குவிக்க, அதை 19.3 ஓவர்களில் துரத்தி பிடித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறது மதுரை பாந்தர்ஸ்.

239 ரன்கள்... டி20 போட்டியில் இதைவிட பெரிய இலக்கு வேண்டுமா? கோவை கிங்ஸ் அப்படித்தான் நினைத்திருக்கலாம். ஆனால், மதுரை பேட்டர்கள் களத்தில் இருந்த அடுத்த சில மணி நேரத்தில் அந்த எண்ணமே தலைகீழாக மாறியது.

ஒருபுறம் கோவையின் 239 ரன்கள். மறுபுறம், அதை அசால்ட்டாக சேஸ் செய்த மதுரை. இந்த இரண்டுக்கும் நடுவே, போட்டியின் போக்கையே மாற்றிய ஒரு பெயர் — என்.எஸ். சதுர்வேத்!

239 ரன்கள்... கோவையின் மிரட்டல் தொடக்கம்!

முதலில் பேட்டிங் செய்த கோவை கிங்ஸுக்குத் தொடக்கம் எதிர்பார்த்த அளவுக்கு அமையவில்லை. ஆனால், அடுத்தடுத்து வந்த பேட்டர்கள் ஆட்டத்தைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

லோகேஷ்வர் 38 ரன்கள் எடுத்து நல்ல அடித்தளம் அமைத்தார். அதன்பிறகு களமிறங்கிய பி. சச்சின், பவுண்டரிகளும் சிக்ஸர்களுமாக ரன்கள் அடிக்க, மறுமுனையில் ஆண்ட்ரே சித்தார்த் அவருக்குச் சரியான துணையாக நின்றார்.

இருவரும் இணைந்து மூன்றாவது விக்கெட்டுக்கு 143 ரன்கள் சேர்த்தனர். சச்சின் 84 ரன்களிலும், ஆண்ட்ரே சித்தார்த் 87 ரன்களிலும் அசத்த, 20 ஓவர்கள் முடிவில் கோவை கிங்ஸ் 239/4 என பிரமாண்ட ஸ்கோரை எட்டியது.

மதுரையின் முன் இருந்த இலக்கு 240...

கோவை பந்துவீச்சாளர்கள் இலக்கின் அழுத்தத்தை மதுரை பேட்டர்கள் மீது ஏற்ற முயன்றனர். ஆனால், சதுர்வேத் வேறு திட்டத்துடன் களத்தில் இருந்தார்.

ஒரு பந்து பவுண்டரி.. அடுத்த பந்து சிக்ஸர்.. மீண்டும் பவுண்டரி!

சதுர்வேத்தின் பேட் பேசத் தொடங்கியதும், 240 என்ற இலக்கு கொஞ்சம் கொஞ்சமாக மதுரையின் கைக்குள் வரத் தொடங்கியது. பந்துவீச்சாளர்கள் மாற்றப்பட்டார்கள். ஃபீல்டிங் மாற்றப்பட்டது. ஆனால், சதுர்வேத்தின் அதிரடி மட்டும் குறையவில்லை. ரன்ரேட் உயர்ந்துகொண்டே போனது. பவுண்டரிகள் பறந்துகொண்டே இருந்தன. 

வெறும் 40 பந்துகளில் சதம் அடித்து TNPL வரலாற்றிலேயே அதிவேக சதம் என்ற சாதனையைப் படைத்த சதுர்வேத், இறுதியில் 121 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். 

கடைசி ஓவர்... 16 ரன்கள்!

சதுர்வேத் ஆட்டமிழந்ததும் போட்டியில் மீண்டும் பரபரப்பு. மதுரைக்கு வெற்றி பெற கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டது.

“இவ்வளவு தூரம் வந்துவிட்டோம்... இங்கே கோட்டைவிடக் கூடாதே!” என்ற பதற்றம். ஆனால், பால்சந்தர் அனிருத் அதற்கெல்லாம் இடம் கொடுக்கவில்லை. கடைசி ஓவரில் அடுத்தடுத்து சிக்ஸர்களை விளாசி, மீதமிருந்த பதற்றத்தையும் துடைத்தெறிந்தார். 

19.3 ஓவர்களில் 240/4 என்று கோவை கிங்ஸை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது மதுரை பாந்தர்ஸ். இதன்மூலம் TNPL வரலாற்றிலேயே மிகப்பெரிய வெற்றிகரமான ரன் சேஸை நிகழ்த்தி மதுரை பாந்தர்ஸ் புதிய சாதனை படைத்திருக்கிறது.

பிரிட்டன் குடியுரிமை; ஐபிஎல் போட்டியில் பாகிஸ்தான் வீரரா? - யார் இந்த முகமது அமீர்?

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர இடதுகை வேகப்பந்துவீச்சாளர் முகமது அமீர் 2024 டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். தற்போது பிரிட்டன் குடியுரிமை ... மேலும் பார்க்க

TNPL 2026: சச்சினின் அதிரடி... நிதிஷின் போராட்டம் - சேலத்தை வீழ்த்திய கோவை கிங்ஸ்!

தமிழ்நாடு பிரீமியர் லீக் 2026 தொடரின் 4-வது லீக் போட்டி, திண்டுக்கல் NPR கல்லூரி மைதானத்தில் கோவை கிங்ஸ் - சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. பேட்டிங்கிலும் பந்துவீச்சிலும் பரபரப்பாக நகர்ந... மேலும் பார்க்க

RBI வங்கி மேலாளராக கிரிக்கெட் வீரர் இஷான் கிஷன்; சம்பளம் எவ்வளவு தெரியுமா?| வைரல் புகைப்படங்கள்!

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான இஷான் கிஷன், பாட்னாவில் உள்ள ரிசர்வ் வங்கி (RBI) கிளையில் உதவி மேலாளராக பணியாற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. வங்கி ஊழியர்களுடன் அவர... மேலும் பார்க்க

Auqib Nabi: காஷ்மீரில் இருந்து இந்திய டெஸ்ட் அணிக்கு தேர்வான முதல் வீரர் - யார் இந்த ஆகிப் நபி?

சிறிய கிராமத்தில் இருந்து இந்திய அணிக்குச் செல்ல முடியுமா? இந்தியாவின் பாரம்பரிய கிரிக்கெட் மையங்களுக்கு வெளியே வளரும் ஆயிரக்கணக்கான இளம் வீரர்களைப் போலவே இந்தக் கேள்வியை பலமுறை எதிர்கொண்டவர் ஆகிப் நப... மேலும் பார்க்க

10-வது ஆண்டில் TNPL: புதிய சீசன், புதிய எதிர்பார்ப்புகளுடன் இன்று தொடக்கம்!

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் (TNCA) நடத்தும் தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) டி20 கிரிக்கெட் திருவிழாவின் 10-வது சீசன் இன்று (ஆகஸ்ட் 4) திண்டுக்கல்லில் கோலாகலமாகத் தொடங்குகிறது. தமிழ் திரை மற்றும் விளை... மேலும் பார்க்க

"டெஸ்ட் போட்டிகளில் எனக்குப் பிடித்த பேட்டிங் பார்ட்னர் நீங்கள்தான்" - ரஹானே குறித்து விராட் கோலி

இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரரும், டெஸ்ட் அணியின் தூணாக விளங்கியவருமான அஜின்கியா ரஹானே அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வுபெறுவதாக அதிகாரப்பூர்வமாக நேற்று (ஜூலை.30) அறிவித்திரு... மேலும் பார்க்க