செய்திகள் :

Jason Sanjay: "அதை என் அப்பாவிடம் சொன்னபோது, அவர் யோசிக்கக்கூட இல்லை" - ஜேசன் சஞ்சய்

post image

முதல்வர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கியிருக்கும் 'சிக்மா' திரைப்படம் ரிலீஸுக்குத் தயாராகி வருகிறது. இந்தப் படத்தில் சந்தீப் கிஷன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இப்படத்தின் புரோமோஷனுக்காக ஐதராபாத்தில் தொகுப்பாளினி சுமாவின் யூடியூப் சேனலுக்குப் பேட்டியளித்திருக்கிறார் ஜேசன் சஞ்சய்.

ஜேசன் சஞ்சய்
ஜேசன் சஞ்சய்

அவர் பேசுகையில், "சிறுவயதிலிருந்தே நான் சினிமா படப்பிடிப்புத் தளங்களுக்குச் சென்று வந்திருக்கிறேன். என் நண்பர்கள் பலர் சினிமாவை வெறும் பார்வையாளர்களாகப் பொழுதுபோக்காக மட்டுமே பார்த்தார்கள்.

ஆனால், நான் அதற்குள்ளேயே வளர்ந்ததாலும், என் தந்தை இத்தனை ஆண்டுகளாக இந்தத் துறையில் இருப்பதைப் பார்த்து வந்ததாலும், எனக்குச் சிறுவயதிலிருந்தே சினிமா மீது இயல்பான ஈர்ப்பு இருந்தது.

ஒரு கட்டத்தில், நான் வெளிநாட்டிற்குச் சென்று திரைப்படத் தயாரிப்புப் படிப்பைப் படிக்க வேண்டும் என்று என் தந்தையிடம் கூறியபோது, அவர் ஒரு கணம்கூட யோசிக்கவில்லை.

அவர் சினிமா துறையிலேயே இருப்பதால், எனக்குச் சம்மதம் தெரிவித்தார். என் அம்மா மற்றும் சகோதரியை விடவும், இந்தப் படிப்பின் முக்கியத்துவத்தை அவர்தான் நன்றாகப் புரிந்துகொண்டார்.

 ஜேசன் சஞ்சய்
ஜேசன் சஞ்சய்

மேலும், சினிமா மற்றும் திரைப்படத் தயாரிப்பு குறித்து இன்று பல நல்ல படிப்புகள் இருப்பதையும், பல்வேறு துறைகளையும் கலைகளையும் நாம் அதில் கற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் யோசித்தார்.

அவர் என்னிடம், 'நீ முதலில் போய் அந்தப் படிப்பைப் படி. அப்போதுதான் உனக்கு எது பிடிக்கும், எது சரியாக வரும், அல்லது உண்மையில் இந்தத் துறை உனக்குச் செட் ஆகுமா என்பதைப் பற்றி உனக்கே ஒரு தெளிவு கிடைக்கும்' என்று கூறினார். அந்த விஷயத்தில் அவர் எனக்கு மிகப்பெரிய ஆதரவாக இருந்தார்" எனக் கூறியிருக்கிறார்.

Toxic: புரொமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாதது ஏன்? - நயன்தாரா ஓப்பன் டாக்

கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யஷ் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் ‘டாக்ஸிக்’. இந்தப் படத்தில் கியாரா அத்வானி, நயன்தாரா, ருக்மணி வசந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படம் வரும் 26-ம் தேதி திரையரங்குகளில் ... மேலும் பார்க்க

Hip Hop Tamizha: கட்டுக்கடங்காத கூட்டம்; நிரப்பிய ஃபீனிக்ஸ் மால்; ரத்தான நிகழ்ச்சி; என்ன நடந்தது?

சென்னை ஃபீனிக்ஸ் மாலில் நேற்று மாலை 'மீசைய முறுக்கு 2' பட நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், நிகழ்ச்சியை நேரில் காண கட்டுக்கடங்காத கூட்டம் கூடியதால் நிகழ்வு ரத்து செய்யப்பட்டது.ஹிப் ஹாப் தமிழ... மேலும் பார்க்க

மகுடம்: ``ஒரு வாரம் அந்த அனுபவத்திலிருந்து வெளியே வர முடியவில்லை" - நடிகை அஞ்சலி

நடிகர் விஷால் இயக்கி, நடித்திருக்கும் 'மகுடம்' திரைப்படம் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகிறது. துஷாரா விஜயன், அஞ்சலி ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசை... மேலும் பார்க்க

Magudam: "14 மாதங்கள் சிலரால் நடிக்க முடியாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடந்தேன்!" - விஷால்

நடிகர் விஷால் இயக்கி, நடித்திருக்கும் 'மகுடம்' திரைப்படம் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகிறது. துஷாரா விஜயன், அஞ்சலி ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசை... மேலும் பார்க்க

20 Years Of Venkat Prabhu: "அதே ஆர்வத்தோடு நல்ல கதைகளை வழங்குவேன்!" - நெகிழும் வெங்கட் பிரபு

'சென்னை 28' திரைப்படம் வெளியாகி, 20 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது. இது இயக்குநர் வெங்கட் பிரபுவுக்குச் சினிமாவில் 20-ம் ஆண்டு. சினிமாவில் 20-வது ஆண்டில் அடியெடுத்து வைப்பது பற்றியும், இத்தனை ஆண்டுகள... மேலும் பார்க்க

DC Review: தேவதாஸின் அதிரடியும், அனிருத்தின் அட்டகாசமும்! ஆக்ஷன் சினிமா எனும் வாடாத பூ, மணக்கிறதா?

சிறையிலிருந்து தப்பி வந்து கேங்ஸ்டர் அரசோடு (தலைவாசல் விஜய்) கூட்டணி அமைத்திருக்கும் தேவதாஸ் (லோகேஷ் கனகராஜ்), அவரின் குழுவினருடன் இணைந்து காவல் துறையினரிடமிருந்து துப்பாக்கிகளைக் கொள்ளையடிக்கிறார். இ... மேலும் பார்க்க