செய்திகள் :

Mohanlal: "ஒரு தகப்பனின் மனதுக்கு இதைவிட வேறென்ன வேண்டும்?" - மகளின் சினிமா அறிமுகம் பற்றி மோகன்லால்

post image

நடிகர் மோகன்லாலின் மகள் விஸ்மயா மோகன்லால், இயக்குநர் ஜூட் அந்தனி ஜோசப் இயக்கத்தில் உருவாகியுள்ள 'துடக்கம்' திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியுள்ளார். இந்தப் படம் நேற்றைய தினம் திரையரங்குகளில் வெளியானது.

Thudakkam Movie
Thudakkam Movie

தன் மகள் சினிமாவில் அறிமுகமாகியிருப்பது குறித்து நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை போட்டிருக்கிறார் மோகன்லால்.

அந்தப் பதிவில் அவர், "ஒரு தகப்பனின் மனதுக்கு இதைவிட வேறு என்ன வேண்டும்? விஸ்மயா தனது திரைப் பயணத்தை 'துடக்கம்' படம் மூலம் தொடங்குவதைப் பார்ப்பதும், அவளுக்கு நீங்கள் காட்டும் அன்பைப் பார்ப்பதும் நான் என்றும் போற்றிப் பாதுகாக்க வேண்டிய ஆசீர்வாதம்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Mohanlal Family Photo
Mohanlal Family Photo

தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூரின் மகன் ஆஷிஷ் ஜோ ஆண்டனி கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளது குறித்து, "சிறுவயதிலிருந்தே எனக்கு நன்கு தெரிந்த, நான் நேசித்த ஆஷிஷ் ஜோ ஆண்டனி, விஸ்மயாவுடன் இணைந்து இந்த அழகிய பயணத்தைப் பகிர்ந்துகொள்வதைப் பார்க்கும்போது என் மனம் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறது.

இவர்கள் இருவரையும் இவ்வளவு அன்போடு ஏற்றுக்கொண்டதற்கு உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி" எனப் பதிவிட்டுள்ளார்.

Keralam: ஸ்வேதா மேனன் வழங்கும் 'ஓண கிட்' வாங்க மறுக்கும் நடிகைகள்; 'அம்மா' அமைப்பில் தொடரும் விவாதம்

படப்பிடிப்பு தளங்களில் நடக்கும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் குறித்த நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாகி மலையாள சினிமா துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து, மலையாள த... மேலும் பார்க்க

" 'ஜெய் பீம்' படம் நிச்சயமாக எனக்கு ஒரு திருப்புமுனையாக இருந்தது, ஆனால்.!"- லிஜோமோல் ஷேரிங்

தமிழில் 'ஜெய் பீம்' திரைப்படத்தில் 'செங்கேணி' கதாபாத்திரம் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்த லிஜோ மோல் நடிப்பில் 'உன்மதம்' என்ற மலையாள படம் வெளியாகி இருக்கிறது.இந்தப் படம் தொடர்பாக 'Cinema Expres... மேலும் பார்க்க

Pearle Maaney: 'மன்னிப்பு கேட்கிறேன்' ; சர்ச்சையினால் குறைந்த 3 லட்சம் ஃபாலோயர்ஸ் - பின்னணி என்ன?

தொகுப்பாளினி பேர்லே மானி, திரை நட்சத்திரங்களுடன் அவர் செய்யும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த நேர்காணல்களுக்குப் பெயர் போனவர். கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளப் பக்கங்களில் அவர் விமர்சனத்திற்கு உள்ளாக... மேலும் பார்க்க

CJP: ``மாணவர்கள் செய்த தவறு என்ன? அமைதியான போராட்டத்தைக் கையாளும் முறை இதுவன்று" - டொவினோ கண்டனம்

நீட் உள்ளிட்ட அரசுத் தேர்வுகளின் வினாத்தாள் கசிவு, தேர்வு குளறுபடி என மத்திய அரசின் செயல்பாடுகள் தொடர்ந்து விமர்சனத்துக்குள்ளானது.இந்த நிலையில், காக்ரோச் ஜனதா பார்ட்டி எனும் இளைஞர் அமைப்பு, அரசுத் தேர... மேலும் பார்க்க