செய்திகள் :

கடந்தமுறை உங்களிடம் ரூ.50 லட்சம் திருடினோம், மீண்டும் வருவோம்: வழக்கறிஞரிடம் ரூ.3.15 கோடி கொள்ளை

post image

ஹரியானா மாநிலம் குருஷேத்ராவை சேர்ந்தவர் பல்வந்த் சிங் வாலியா. மூத்த வழக்கறிஞரான பல்வந்த் சிங் இரவு 9 மணிக்கு தனது நாயை நடைபயிற்சிக்கு வெளியில் அழைத்து சென்றார். வீட்டில் அவரது மனைவி மட்டும் இருந்தார். இரவு 10 மணியளவில் அவர் திரும்பி வந்தபோது, ​​வீடு கலைந்து போயிருந்தது. அவரது மனைவி படுக்கையில் கைகளும் கால்களும் கயிற்றால் கட்டப்பட்ட நிலையில், வாய் நாடாவால் மூடப்பட்டு, குப்புறக் கிடந்ததைக் கண்டார். வீட்டில் இருந்த முகமூடி அணிந்த நான்கு பேர் வழக்கறிஞரையும் தாக்கி கட்டிப்போட்டனர். அத்துடன், முதிய தம்பதியரைத் தாக்கி, துப்பாக்கி முனையில் அவர்களை மிரட்டி பணம் மற்றும் விலையுயர்ந்த பொருட்களைக் கேட்டுப் பறித்தனர்.

அதோடு கடந்த மார்ச் 20ஆம் தேதி இதே வீட்டில் ரூ.50 லட்சம் கொள்ளையடித்தது தாங்கள்தான் என்று கொள்ளையர்கள் தம்பதியிடம் கூறினர். அந்தச் சமயத்தில் டிஜிட்டல் பெட்டகத்தைத் திறக்க முடியாமல் போய்விட்டதாகவும், இப்போது அந்த லாக்கர்களைத் திறக்கும்படி மிரட்டினர். திறக்க மறுத்தால் இருவரையும் சுட்டுக் கொன்றுவிடுவோம் என்று துப்பாக்கியால் மிரட்டினர்.

தங்கள் உயிருக்கு அஞ்சி, வழக்கறிஞர் லாக்கர் சாவிகளை ஒப்படைத்தனர். அதன் மூலம் இரண்டு டிஜிட்டல் லாக்கர்களையும் திறந்து 17 முதல் 20 லட்சம் ரூபாய் ரொக்கம், 1.5 முதல் 2 கிலோ தங்க நகைகள், சுமார் 4 கிலோ வெள்ளி நகைகள், பாத்திரங்கள் மற்றும் சிலைகள், உரிமம் பெற்ற கைத்துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் பிற மதிப்புமிக்க பொருட்களுடன் கொள்ளையர்கள் தப்பிச் சென்றனர்.

அங்கிருந்து தப்பிச்செல்வதற்கு முன்பு, அவர்கள் நான்கு சிசிடிவி கேமராக்களை சேதப்படுத்திவிட்டு ஆதாரங்களை அழிப்பதற்காக டிவிஆரை எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. கொள்ளையர்கள் மேலும் ரூ. 80 லட்சம் கொடுக்கும்படி கேட்டனர், தாங்கள் அதனை வாங்க திரும்பி வருவோம் என்றும் தயார் செய்து வைக்கும்படி எச்சரித்ததனர். இந்த விஷயத்தை போலீசில் தெரிவித்தால், தம்பதியைக் கொன்று விடுவதாக மிரட்டிவிட்டு சென்றனர். அவர்கள் வெளிப்புறமாக கதவை பூட்டிவிட்டு சென்றனர்.

முதிய தம்பதி உதவி கேட்டு கத்தியை தொடர்ந்து பக்கத்து வீட்டுக்காரர்கள் வந்து அவர்களை மீட்டனர். அதன் பிறகு இது குறித்து வாலியா போலீஸில் புகார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். அதோடு வழக்கறிஞர் வாலியா வீட்டிற்கு பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது.

கொலை செய்வதை வீடியோ எடுத்த இளைஞர்கள்; ரத்தம் வடிந்த கத்தியை வாயில் வைத்து செல்ஃபி - கோவை அதிர்ச்சி!

கோவை மாவட்டம், கிணத்துக்கடவு அருகே உள்ள சுலபம்பாளையம் காமராஜர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் அஸ்வின் (22). இவர் நேற்று முன்தினம் தனது நண்பர் விஷ்ணு (19) என்பவருடன் மது குடித்துள்ளார். பின்னர் இருவரும் சி... மேலும் பார்க்க

தூத்துக்குடி டு இலங்கை; கடத்த முயன்ற ரூ.10 லட்சம் மதிப்பிலான வெள்ளாடுகள், புறாக்கள் பறிமுதல்!

தூத்துக்குடி கடற்கரைப் பகுதியில் இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக பீடி இலைகள், சங்குகள், மஞ்சள், கடல் அட்டைகள், வலி நிவாரணி மாத்திரைகள், போதை மாத்திரைகள், போதையேற்றும் பொடிகள், கஞ்சா ஆகியவை கடத்தப்படுவ... மேலும் பார்க்க

15 வயது சிறுவன்: விளையாடும்போதே சுருண்டு விழுந்து உயிரிழப்பு - அதிர்ச்சி

கர்நாடக மாநிலம் தக்ஷிணா கன்னடா மாவட்டம் சுராத்கல் அருகே உள்ள சுரிஞ்சே கிராமத்தைச் சேர்ந்தவர் லிகித் அமீன். 15 வயதான இவர்10-ம் வகுப்பு படித்து வந்தார். புதன்கிழமை (ஆகஸ்ட் 5) தனது நண்பர்களுடன் வாலிபால் ... மேலும் பார்க்க

`நான் உனது பாஸ்' எனக்கூறி பெண் பாலியல் வன்கொடுமை: தெஹல்கா ஆசிரியர் தருண் தேஜ்பாலுக்கு 10 ஆண்டு சிறை

தெஹல்கா பத்திரிகை நிறுவனரும் ஆசிரியருமான தருண் தேஜ்பால் 2013ம் ஆண்டு அந்த இதழ் ஏற்பாடு செய்திருந்த 'திங்க்ஃபெஸ்ட்' நிகழ்வின்போது, ​​கோவாவில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் வைத்து, நவம்பர் 7 மற்றும் 8 ஆ... மேலும் பார்க்க

புதுக்கோட்டை: காணாமல் போன 40 பவுன் நகை; காட்டிக் கொடுத்த அடகுக்கடை சி.சி.டி.வி - என்ன நடந்தது?

புதுக்கோட்டை மாவட்டம், கீமங்கலம் காவல் சரகம் கொத்தமங்கலம் சிதம்பரவிடுதி பகுதியைச் சேர்ந்தவர் தங்கமணி. இவர், சிங்கப்பூரில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி லதா, 2 குழந்தைகளுடன் சொந்த ஊரில் வசித்து வர... மேலும் பார்க்க

கரூர்: "ஒரு ருபாய் குறைந்தாலும் வேலை நடக்காது" - ரூ. 1000 லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ சிக்கியது எப்படி?

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வெஞ்சமாங்கூடலுார் கிழக்கு பகுதியைச் சேர்ந்த அன்புராஜ் (வயது: 36). இவர், ராஜபுரம் கிராம நிர்வாக அலுவலராகப் பணியாற்றி வருகிறார். இவரிடம் ராஜபுரம் அக்ரஹாரம் தெருவைச் சேர்ந்த... மேலும் பார்க்க