செய்திகள் :

தூத்துக்குடி டு இலங்கை; கடத்த முயன்ற ரூ.10 லட்சம் மதிப்பிலான வெள்ளாடுகள், புறாக்கள் பறிமுதல்!

post image

தூத்துக்குடி கடற்கரைப் பகுதியில் இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக பீடி இலைகள், சங்குகள், மஞ்சள், கடல் அட்டைகள், வலி நிவாரணி மாத்திரைகள், போதை மாத்திரைகள், போதையேற்றும் பொடிகள், கஞ்சா ஆகியவை கடத்தப்படுவது அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்த சட்டவிரோதக் கடத்தலை தடுக்கும் வகையில் க்யூ பிரிவு போலீஸார் கடலோரப் பகுதிகளில் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், தூத்துக்குடி திரேஸ்புரம் அண்ணா காலனி கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு வெள்ளாடுகள் மற்றும் புறாக்கள் கடத்தப்படுவதாக க்யூ பிரிவு காவல் ஆய்வாளர் விஜய அனிதாவிற்கு தகவல் கிடைத்தது.

பறிமுதல் செய்யப்பட்ட வெள்ளாடுகள், புறாக்கள்

இதையடுத்து, க்யூ பிரிவு போலீஸார் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். நேற்று இரவு திரேஸ்புரம் அண்ணா காலனி கடற்கரையில் பதிவு எண் இல்லாத இரட்டை இன்ஜின் பொருத்தப்பட்ட ஃ பைபர் படகில் இலங்கைக்கு கடத்துவதற்காக 8 வெள்ளாடுகள் மற்றும் 3 கூண்டுகளில் அடைக்கப்பட்ட புறாக்கள் ஏற்றப்பட்டுக் கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

போலீஸாரைக் கண்டதும் கடத்தலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து தப்பியோடினர். இதையடுத்து, 8 வெள்ளாடுகள், 3 பெட்டிகளில் இருந்த புறாக்கள் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட ஃபைபர் படகு ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட வெள்ளாடுகள் மற்றும் புறாக்களின் மொத்த மதிப்பு சுமார் ரூ.10 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

வடக்கு காவல் நிலையம்

கடத்த முயன்ற வெள்ளாடுகள் இறைச்சிக்காகவும், புறாக்களில் பெரும்பாலானவை பந்தயப் புறாக்கள் எனவும் தெரிய வந்துள்ளது. தப்பியோடிய கடத்தல் கும்பலை பிடிக்க க்யூ பிரிவு மற்றும் வடக்கு காவல் நிலைய போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

15 வயது சிறுவன்: விளையாடும்போதே சுருண்டு விழுந்து உயிரிழப்பு - அதிர்ச்சி

கர்நாடக மாநிலம் தக்ஷிணா கன்னடா மாவட்டம் சுராத்கல் அருகே உள்ள சுரிஞ்சே கிராமத்தைச் சேர்ந்தவர் லிகித் அமீன். 15 வயதான இவர்10-ம் வகுப்பு படித்து வந்தார். புதன்கிழமை (ஆகஸ்ட் 5) தனது நண்பர்களுடன் வாலிபால் ... மேலும் பார்க்க

`நான் உனது பாஸ்' எனக்கூறி பெண் பாலியல் வன்கொடுமை: தெஹல்கா ஆசிரியர் தருண் தேஜ்பாலுக்கு 10 ஆண்டு சிறை

தெஹல்கா பத்திரிகை நிறுவனரும் ஆசிரியருமான தருண் தேஜ்பால் 2013ம் ஆண்டு அந்த இதழ் ஏற்பாடு செய்திருந்த 'திங்க்ஃபெஸ்ட்' நிகழ்வின்போது, ​​கோவாவில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் வைத்து, நவம்பர் 7 மற்றும் 8 ஆ... மேலும் பார்க்க

புதுக்கோட்டை: காணாமல் போன 40 பவுன் நகை; காட்டிக் கொடுத்த அடகுக்கடை சி.சி.டி.வி - என்ன நடந்தது?

புதுக்கோட்டை மாவட்டம், கீமங்கலம் காவல் சரகம் கொத்தமங்கலம் சிதம்பரவிடுதி பகுதியைச் சேர்ந்தவர் தங்கமணி. இவர், சிங்கப்பூரில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி லதா, 2 குழந்தைகளுடன் சொந்த ஊரில் வசித்து வர... மேலும் பார்க்க

கரூர்: "ஒரு ருபாய் குறைந்தாலும் வேலை நடக்காது" - ரூ. 1000 லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ சிக்கியது எப்படி?

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வெஞ்சமாங்கூடலுார் கிழக்கு பகுதியைச் சேர்ந்த அன்புராஜ் (வயது: 36). இவர், ராஜபுரம் கிராம நிர்வாக அலுவலராகப் பணியாற்றி வருகிறார். இவரிடம் ராஜபுரம் அக்ரஹாரம் தெருவைச் சேர்ந்த... மேலும் பார்க்க

கரூர்: தலைமை ஆசிரியையைத் தாக்கிய ஆசிரியை; சஸ்பென்ட் செய்த அதிகாரி; வைரல் வீடியோவில் நடந்தது என்ன?

கரூர் மாவட்டம், சின்​னாண்​டாங்​கோ​வில் ஊராட்சி ஒன்​றி​யத் தொடக்​கப் பள்​ளி​யில் இடைநிலை ஆசிரியை​யாகப் பணிபுரிந்து வந்​தவர் கலைம​தி. இவர், சரிவர பணிக்கு வரு​வ​தில்லை என்​றும், மாணவர்​களை அடித்து துன்​ப... மேலும் பார்க்க

"மனைவி இல்லாமல் எப்படி வாழ்வேன்?" - மனைவி இறந்த துக்கம் தாங்காமல் முதியவர் எடுத்த விபரீத முடிவு

திருச்சி மாவட்டம், துறையூர் சிக்கம் பிள்ளையார் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் பாபுராஜ் (வயது: 71).இவரது மனைவி கண்ணம்மாள்.இவர், கடந்த 4 மாதங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாத சூழலில், திடீரென்று இறந... மேலும் பார்க்க