செய்திகள் :

"அனைத்துக்கட்சி கூட்டத்தைக் கூட்டுவதற்கு உங்களுக்கு என்ன தயக்கம்? என்ன பயம்?"- உதயநிதி கேள்வி

post image

தமிழக சட்டசபையில் த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டது.

நேற்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், பட்ஜெட் மீதான பொது விவாதம் இன்று நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மேகதாது விவகாரம் குறித்து பேசிய உதயநிதி ஸ்டாலின், " மேகதாது விவகாரத்தில் சட்டரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் கடந்த ஒரு மாதத்தில் கர்நாடகா அரசு பல முன்னெடுப்புகளை எடுத்திருக்கிறது.

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

அங்கே எல்லா கட்சியினரும் ஒரே எண்ணத்தோடு நிற்கின்றன. ஆனால், இங்கே தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தையே கூட்டவில்லை. அனைத்துக்கட்சி கூட்டத்தைக் கூட்டுவதற்கு உங்களுக்கு என்ன தயக்கம்? என்ன பயம்?

இந்த அரசு ஒரு மாடலை பின்பற்றுகிறது. அதாவது, விஷயங்களை முதலில் இவர்களே கசிய விடுவார்கள். எதிர்ப்பு எழுந்தால் அப்படியே பின்வாங்கி விடுவார்கள். கர்நாடகாவுக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தலாம் என முடிவெடுத்தது யார்? பின்னர் அந்தப் பயணம் ஏன் ரத்து செய்யப்பட்டது? என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

இதனைத்தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, "கர்நாடக அணைகளில் போதிய நீர் இருந்தும் தண்ணீர் திறக்கவில்லை. புதிய காவிரி நடுவர் மன்றம் அமைப்பதை அதிமுக ஏற்கவில்லை. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்திகிறேன்" என்று பேசியிருக்கிறார்.

"இங்கு நாம் என்ன பேசிக்கொண்டிருக்கிறோம், அமைச்சர் சம்பந்தமே இல்லாமல்.!" - உதயநிதி, சிடிஆர் வாதம்

சட்டமன்றத்தில் பட்ஜெட் மீதான பொது விவாதம் இன்று நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மேகதாது விவகாரம் குறித்து பேசிய எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், " மேகதாது விவகாரத்தில் சட்டரீதியாகவும் அரசியல்ரீதியா... மேலும் பார்க்க

வெள்ளத்தில் சிக்கியவரை உயிரை கொடுத்து காப்பாற்றிய மீட்ப்புப் பணியாளர் - உடலை அவமதித்த அதிகாரிகள்

கேரள மாநிலம் திருவனந்தபுரம் கல்லியூர் கிழக்கே தெற்றிவிளைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவர் கண்ணூர் செறுபுழா மீந்துள்ளி பகுதியில் நீச்சல் பயிற்சியாளராகவும், மீட்புப்பணியாளராகவும் பணிபுரிந்துவந்தார். கேரளத்தில்... மேலும் பார்க்க

"பேப்பர் படித்திருந்தாலே விஷயம் தெரிந்திருக்கும்" - விஜய் vs உதயநிதி ; சட்டசபையில் காரசாரம்

தமிழக சட்டசபையில் த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டது. நேற்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், பட்ஜெட் மீதான பொது விவாதம் இன்று நடைபெற்று வருகிறது. இந்நிலைய... மேலும் பார்க்க

கூடியது சட்டமன்றம்: மறைந்த முன்னாள் உறுப்பினர்கள், பிரபலங்களுக்கு இரங்கல் | Live

தமிழக சட்டசபையில் த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டது. நேற்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், பட்ஜெட் மீதான பொது விவாதம் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது... மேலும் பார்க்க

`` 'வெற்றி' என்று பெயர் வைத்து, வெற்றிக் கழகத்தை நிலைநிறுத்த முயல்வது தவறு!" - தமிழிசை சௌந்தரராஜன்

பா.ஜ.க-வின் தலைவர்களில் ஒருவரான எச்.ராஜா ‘கந்தன் மலை’ என்ற படத்தில் நடித்திருந்தார். தற்போது ‘செய் செய்யாதே’ என்ற படத்தின் மூலம் மீண்டும் சினிமாவில் நடித்துள்ளார். ஹரினி சுப்பு, சினி கிரியேஷன்ஸ் தயாரி... மேலும் பார்க்க