செய்திகள் :

"இங்கு நாம் என்ன பேசிக்கொண்டிருக்கிறோம், அமைச்சர் சம்பந்தமே இல்லாமல்.!" - உதயநிதி, சிடிஆர் வாதம்

post image

சட்டமன்றத்தில் பட்ஜெட் மீதான பொது விவாதம் இன்று நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மேகதாது விவகாரம் குறித்து பேசிய எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், " மேகதாது விவகாரத்தில் சட்டரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் கடந்த ஒரு மாதத்தில் கர்நாடகா அரசு பல முன்னெடுப்புகளை எடுத்திருக்கிறது.

அங்கே எல்லா கட்சியினரும் ஒரே எண்ணத்தோடு நிற்கின்றன. ஆனால், இங்கே தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தையே கூட்டவில்லை. அனைத்துக்கட்சி கூட்டத்தைக் கூட்டுவதற்கு உங்களுக்கு என்ன தயக்கம்? என்ன பயம்? என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

சிடிஆர் நிர்மல் குமார்
சிடிஆர் நிர்மல் குமார்

இதற்கு பதில் அளித்த மின்சாரத்துறை அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார், " எங்கள் முதல்வர் கடந்த 3 வருடங்களாக யாரையும் பார்த்து பயப்படவில்லை. எந்தவிதத்திலும் அவர் பயப்படவில்லை. நாளை தொகுதிமறுவரை குறித்து பேச அனைத்து எம்.பிக்கள் கூட்டத்தை எங்கள் முதல்வர் கூட்டியிருக்கிறார். தமிழக உரிமைக்காக கூட்டியிருக்கிறார். அதில் திமுக எம்.பிக்கள் கலந்துகொள்வார்கள் என்று கூறுமாறு எதிர்க்கட்சி தலைவரை கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.

இதற்கு மீண்டும் எழுந்து பதிலளித்த உதயநிதி, " இங்கு நாம் என்ன பேசிக்கொண்டிருக்கிறோம். ஏன் தண்ணீர் வரவில்லை. எப்போது வரும்? அனைத்துக்கட்சி கூட்டத்தை எப்போது கூட்டுவீர்கள் என்று கேட்கிறேன். பயிர்க்கடன் தள்ளுபடி எப்போது செய்வீர்கள் என்று கேட்கிறேன். அதற்கு சம்பந்தமே இல்லாமல் அமைச்சர் பதில் அளித்து திசைத்திருப்பி கொண்டிருக்கிறார்." என்றார்.

"ஆடிப்பெருக்கு அப்போ தண்ணி எப்படி வந்தது? கர்நாடக அரசு நமக்கு.!" - சௌமியா அன்புமணி உரை

சட்டமன்றத்தில் பட்ஜெட் மீதான பொது விவாதம் இன்று நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மேகதாது விவகாரம் குறித்து பேசிய சௌமியா அன்புமணி, " தமிழ்நாட்டிற்கு உரிய 175 டிஎம்சி தண்ணீரை கர்நாடக அரசு அட்டவணைப்போட்டு... மேலும் பார்க்க

"தமிழக அரசியல் களத்தில் பா.ஜ.க எங்கே இருக்கிறது எதிர்ப்பதற்கு?" - அமைச்சர் ரமேஷ் கிண்டல்

த.வெ.க அரசு ஆட்சிப் பொறுப்பேற்று முழுதாக மூன்று மாதங்கள் முடியவில்லை. அதற்குள்ளாக பல்வேறு துறை சார்ந்த சர்ச்சைகளும் சலங்கை கட்டி ஆடுகின்றன. இந்த நிலையில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷிடம் நடப... மேலும் பார்க்க

"அனைத்துக்கட்சி கூட்டத்தைக் கூட்டுவதற்கு உங்களுக்கு என்ன தயக்கம்? என்ன பயம்?"- உதயநிதி கேள்வி

தமிழக சட்டசபையில் த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டது. நேற்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், பட்ஜெட் மீதான பொது விவாதம் இன்று நடைபெற்று வருகிறது. இந்நிலைய... மேலும் பார்க்க

வெள்ளத்தில் சிக்கியவரை உயிரை கொடுத்து காப்பாற்றிய மீட்ப்புப் பணியாளர் - உடலை அவமதித்த அதிகாரிகள்

கேரள மாநிலம் திருவனந்தபுரம் கல்லியூர் கிழக்கே தெற்றிவிளைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவர் கண்ணூர் செறுபுழா மீந்துள்ளி பகுதியில் நீச்சல் பயிற்சியாளராகவும், மீட்புப்பணியாளராகவும் பணிபுரிந்துவந்தார். கேரளத்தில்... மேலும் பார்க்க

"பேப்பர் படித்திருந்தாலே விஷயம் தெரிந்திருக்கும்" - விஜய் vs உதயநிதி ; சட்டசபையில் காரசாரம்

தமிழக சட்டசபையில் த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டது. நேற்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், பட்ஜெட் மீதான பொது விவாதம் இன்று நடைபெற்று வருகிறது. இந்நிலைய... மேலும் பார்க்க